கெட்ட கொலஸ்ட்ராலுக்கு இந்த ஆயுர்வேத வைத்தியம் ட்ரை பண்ணி பாருங்கள்

Weight Loss Tips: இன்று நாம் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து காண உள்ளோம். இந்த வீட்டு வைத்தியம் உங்கள் உடலில் சேரும் அழுக்கு மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை எளிதில் அகற்றும், அதனால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் வீட்டு வைத்தியம் பற்றி தெரிந்து கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 22, 2023, 06:34 AM IST
  • கெட்ட கொலஸ்ட்ராலை எவ்வாறு குறைப்பது.
  • புரதங்கள் மற்றும் கொலஸ்ட்ராலின் கலவை லிப்போபுரோட்டீன் (lipoprotein) என்று அழைக்கப்படுகிறது.
  • உடலில் சேரும் அழுக்கு மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை எளிதில் அகற்றலாம்.
கெட்ட கொலஸ்ட்ராலுக்கு இந்த ஆயுர்வேத வைத்தியம் ட்ரை பண்ணி பாருங்கள் title=

கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பது எப்படி: உடல் பருமன் என்பது இன்றைய காலத்தின் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இன்றைய மோசமான வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கமும் இதற்குப் பின்னால் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் கோடை காலத்தை விட குளிர்காலத்தில் உங்கள் எடை வேகமாக அதிகரிக்க ஆரம்பிக்கிறது, இதற்கு பல காரணங்கள் உள்ளன, அதிக எண்ணெய் பொருட்களை உட்கொள்வது மற்றும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாதது போன்றவை இருக்கலாம். உடலில் அதிகரித்து வரும் கெட்ட கொலஸ்ட்ராலை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் வழிகளை இன்று ணாம் காண உள்ளோம், இந்த வீட்டு வைத்தியங்களை கடைப்பிடிப்பதன் மூலம், உடலில் சேரும் அழுக்கு மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை எளிதில் அகற்றலாம், எனவே இப்போது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் வீட்டு வைத்தியம் பற்றி தெரிந்து கொள்வோம்.

கொலஸ்ட்ரால் வகைகள்

பொதுவாக கொலஸ்ட்ரால் ரத்தத்தின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. புரதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. புரதங்கள் மற்றும் கொலஸ்ட்ராலின் இந்த கலவை லிப்போபுரோட்டீன் (lipoprotein) என்று அழைக்கப்படுகிறது. லிப்போபுரோட்டீன் எதை கொண்டு செல்கிறது என்பதைப் பொறுத்து 2 வகையான கொலஸ்ட்ரால்கள் உள்ளன. அவை: குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL -Low-density lipoprotein), உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL - High-density lipoprotein).

HDL மற்றும் LDL-க்கான இயல்பான ரேஞ்ச் என்ன?
ஒரு சிறந்த LDL கொலஸ்ட்ரால் அளவு 70 mg/dl-க்கும் குறைவாக இருக்க வேண்டும். மேலும் ஒரு பெண்ணின் HDL கொலஸ்ட்ரால் அளவு 50 mg/dl க்கு அருகில் இருக்க வேண்டும். ட்ரைகிளிசரைடுகள் 150 mg/dl-க்கும் குறைவாக இருக்க வேண்டும். மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mg/dl-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | இயற்கையாகவே நரை முடியை கருப்பாக மாறனுமா? இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள்

கெட்ட கொலஸ்ட்ராலை எவ்வாறு குறைப்பது

வெந்நீர் மற்றும் தேன்
இதற்கு ஒரு கப் வெந்நீரில் தேன் கலந்து கொள்ளவும். பிறகு தயாரித்த பானத்தை குடிப்பதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம். நீங்கள் விரும்பினால், சில துளிகள் வினிகரையும் சேர்த்தும் உட்கொள்ளலாம்.

பூண்டு
தினமும் வெறும் வயிற்றில் 2 பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு எப்போதும் சமநிலையில் இருக்கும். இது உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.

மஞ்சள் நீர்
நீங்கள் மஞ்சள் தண்ணீரை உட்கொண்டால், அது உங்கள் தமனிகளில் சேரும் அழுக்குகளை சுத்தம் செய்ய உதவுகிறது. இது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகிறது.

வெந்தய விதைகள்
பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் வெந்தய விதையில் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், வெந்தய விதைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொண்டால், அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை எளிதாகக் குறைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மேல் வயிறு தொப்பை குறையனுமா.. தினமும் காலையில் இந்த பானங்களை குடியுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News