சிறுநீரக பாதிப்பை உணர்த்தும் சில அறிகுறிகள்... அலட்சியம் வேண்டாம்!

Symptoms of Kidney Problem: சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், உடலில் அதிகப்படியான கழிவுகள் சேர்ந்து, பல தீவிர நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், சிறுநீரக பாதிப்பு குறித்த அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 3, 2024, 12:52 PM IST
  • பாதங்கள் மற்றும் குதிகால் சுற்றி வீக்கம் இருப்பது, சிறுநீரக செயலிழப்பு அறிகுறியாக இருக்கலாம்.
  • சிறுநீரக பாதிப்பு இருந்தால், உடலின் நச்சுக்கள் மற்றும் அசுத்தங்கள் வெளியேற்றப்படாமல், இரத்தத்தில் கலந்துவிடும்.
  • சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, ​​​​உடலில் எலக்ட்ரோலைட் அளவுகள் பாதிக்கப்படுகின்றன.
சிறுநீரக பாதிப்பை உணர்த்தும் சில அறிகுறிகள்... அலட்சியம் வேண்டாம்! title=

Symptoms of Kidney Problem in Tamil: மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை காரணமாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை பெரும்பாலானோர் சந்திக்கின்றனர். வயதானவர்களை குறி வைத்த இந்த நோய், தற்போது, இளைஞர்களையும் பாதிக்க தொடங்கியுள்ளது. எனவே, சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க, வாழ்க்கை முறையுடன், உணவு முறையிலும் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். 

சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், உடலில் அதிகப்படியான கழிவுகள் சேர்ந்து, பல தீவிர நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். அத்தகைய சூழ்நிலையில், சிறுநீரக பாதிப்பு குறித்த அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது. இதனை கவனிக்காமல் விட்டால் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் உள்ளது. சிறுநீரக பாதிப்பின் சில பொதுவான அறிகுறிகளை (Health Tips) பற்றி தெரிந்து கொள்வோம்.

கால்களில் வீக்கம்

பாதங்கள் மற்றும் குதிகால் சுற்றி வீக்கம் இருப்பது, சிறுநீரக செயலிழப்பு அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரகத்தில் போதுமான அளவு சோடியம் இல்லாத போது, ​​​​அவை சரியாக வேலை செய்யாது. சிறுநீரகங்கள் இயல்பாக செயல்படாததால், அதிகப்படியான திரவம் உடலில் சேர்ந்து, கால்களில் வீக்கம் ஏற்படுகிறது.

அதீத சோர்வு

சிறுநீரகத்தின் செயல்பாடுகளில் இயல்பாக இல்லை என்றால், உடலின் நச்சுக்கள் மற்றும் அசுத்தங்கள், உடலில் இருந்து வெளியேற்றப்படாமல், இரத்தத்தில் கலந்துவிடும். இதனால் அனீமியா ஏற்பட்டு, அதீத சோர்வாகவும், பலவீனமாகவும் உணரலாம். எனவே, நன்றாக சாப்பிட்ட பின்னும் சோர்வாக உணர்ந்தால் லட்சியம் செய்யதீர்கள்.

மேலும் படிக்க | சுகர் லெவல் கன்ட்ரோல் ஆகானுமா? இந்த பானங்கள் அதிசயங்களை செய்யும்

கண்களைச் சுற்றி வீக்கம்

சிறுநீரகங்கள் சரியாக செயல்படாத நிலையில், ஊட்டச்சத்துக்களை சரியாக வடிகட்ட முடியாதபோது, ​​​​அதிகப்படியான புரதம் சிறுநீரில் கலந்து வெளியேற்றப்படுகிறது. சிறுநீரகம் மூலம் அதிக அளவிலான புரோட்டீனை வெளியேற்றுவதன் காரணமாக, கண்களைச் சுற்றியுள்ள பகுதியிலும் வீக்கம் தோன்றும்.

சிறுநீரில் தோன்றும் நுரைகள்

சிறுநீரில் நுரை உருவாகி, குமிழ்கள் தெரிந்தால், சிறுநீரில் புரதம் வெளியேறுகிறது என்று அர்த்தம். இது சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், இந்த அறிகுறிகள் தோன்றிய உடனேயே, மருத்துவரின் ஆலோசனையை பெற்று பரிசோதனை செய்யுங்கள்.

தசைகளில் வலி

சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, ​​​​உடலில் எலக்ட்ரோலைட் அளவுகள் பாதிக்கப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் குறைபாடு காரணமாக தசைகளில் வலி அதிகரிக்கிறது. எனவே தசைகளில் ஏற்படும் வலி, சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்

சிறுநீரக பாதிப்பின் பிற அறிகுறிகள்

1. சிறுநீரில் இரத்த கசிவு
2. பசியின்மை
3. சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் வறட்சி
4. தூக்கமின்மை பிரச்சனை

சிறுநீரக செயலிழப்பு காரணமாக, கால்களில் வீக்கம் பிரச்சனை இருந்தால், முடிந்தவரை அதிக தண்ணீர் குடிக்கவும். இதனால் சிறுநீரகங்கள் உடலில் இருந்து கூடுதல் சோடியம் எளிதில் வெளியேறும். பலர் கால்களில் வீக்கம் அல்லது எடிமா காரணமாக, தாங்கள் உட்கொள்ளும் நீரின் அளவைக் குறைக்கிறார்கள். ஆனால் இயற்கையான நீர், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது சிறுநீரகங்கள் சரியாக செயல்பட உதவுகிறது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | Migraine: ஒற்றைத் தலைவலி பாடாய் படுத்துகிறதா... காரணங்களும்... தீர்வுகளும்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News