கண்களைச் சுற்றி வீக்கம் உள்ளதா; ‘இந்த’ தீவிர நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்..!!

மூட்டுகளில் வீக்கம், கண்கள் மற்றும் கால்களில் வீக்கம், குறைவான ஹீமோகுளோபின், அவ்வப்போது தலைவலி மற்றும் வாந்தி இருந்தால், தாமதமின்றி சிறுநீரக மருத்துவரை அணுகவும், என சிறுநீரக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 12, 2022, 11:25 AM IST
கண்களைச் சுற்றி வீக்கம் உள்ளதா; ‘இந்த’ தீவிர நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்..!! title=

கண்கள் மற்றும் கால்களைச் சுற்றியுள்ள வீக்கம், இரத்த சோகை மற்றும் சில நேரங்களில் தலைவலி அல்லது வாந்தி ஆகியவை நாள்பட்ட சிறுநீரக நோயின் (CKD) ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம் என லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் கூறுகின்றனர் 

லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சிறுநீரகவியல் துறையின் செயல் தலைவரான பேராசிரியர் விஸ்வஜித் சிங் இது குறித்து கூறுகையில், நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகள் அதிகம் வெளியில் தெரியாது என்பதால், அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது கடினம். 60 சதவீத நோயாளிகளுக்கு, நோய் தீவிரமான பின்பே கண்டறியப்படுகின்றன. அப்போது, டயாலிசிஸ் அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை கொடுக்கும் சாத்தியக்கூறு மட்டுமே எஞ்சியிருக்கும்.

மூட்டுகளில் வீக்கம், கண்கள் மற்றும் கால்களில் வீக்கம், குறைவான ஹீமோகுளோபின், அவ்வப்போது தலைவலி மற்றும் வாந்தி இருந்தால், தாமதமின்றி சிறுநீரக மருத்துவரை அணுகவும், என சிறுநீரக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு பிரச்சனை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். ஒரு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால்,  மருந்துகளாலேயே அதனை  குணப்படுத்தலாம்.

மேலும் படிக்க | உலக கிட்னி தினம்: சிறுநீரகத்தை பாதிக்கும் ‘5’ ஆபத்தான பழக்கங்கள்..!!

மறுபுறம், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லக்ஷ்ய குமார் இது குறித்து கூறுகையில், இந்தியாவில் உள்ள மூன்றில் ஒரு நபருக்கு உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நாள்பட்ட சிறுநீரக நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களுக்கு நோய் இருப்பது அறியாமல் உள்ளனர். அறிந்தவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள்.

மேலும் படிக்க | Neeri-KFT சிறுநீரக நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகுமா; மருத்துவர் கூறுவது என்ன..!!

உயர் இரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரகத்தின் சிறிய இரத்த நாளங்கள் சேதமடைகின்றன என்பதால், இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டாக்டர் குமார் மேலும் கூறுகையில், ஆரோக்கியமான உணவு, மன அழுத்த மேலாண்மை மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம் நாள்பட்ட சிறுநீரக நோயைத் தவிர்க்கலாம்.

மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News