உப்பில் இத்தனை பக்க விளைவுகளா: ஒரு நாளில் எவ்வளவு உப்பு சாப்பிடலாம்?

Side Effects of Salt:  உப்பின் அளவு அதிகமானால், அது பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம். அதிக உப்பை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 29, 2022, 07:24 PM IST
  • உணவில் அதிக உப்பை உட்கொள்வது உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கும்.
  • சிறுநீரக ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்.
  • கைகள் மற்றும் கால்களில் வீக்கம் அதிகரிக்கும்.
உப்பில் இத்தனை பக்க விளைவுகளா: ஒரு நாளில் எவ்வளவு உப்பு சாப்பிடலாம்? title=

உப்பு நமது உணவின் ஒரு முக்கிய அங்கமாகும். இது நமது உணவின் சுவையை அதிகரிக்கிறது. உணவில் உப்பு குறைவாக இருக்கலாம், ஆனால் உப்பு இல்லாமல் நாம் சாப்பிடுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. 

உப்பு உணவின் சுவையை அதிகரிக்கிறது, அத்துடன் உடலையும் ஆரோக்கியமாக வைக்கிறது. எனினும், உணவில் உப்பின் அளவு அதிகமானால், அது பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம். அதிக உப்பை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

அதிக உப்பை உட்கொள்வதால், சிறுநீரகங்கள் உடலில் இருந்து திரவங்களை வெளியேற்றுவது கடினமாகி சிறுநீரக பிரச்சனைகளை உண்டாக்குகிறது. உணவில் குறைந்த அளவு உப்பு உட்கொள்வது முக்கியம். நல்ல ஆரோக்கியத்திற்கு எவ்வளவு உப்பு உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். உடலில் அதிக உப்பை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் என்ன? இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க | Low Sperm Count: விந்தணு குறைப்பாட்டுக்கான அறிகுறி 

ஆரோக்கியமான உடலுக்கு எவ்வளவு உப்பு சாப்பிடுவது நல்லது? 

உலக சுகாதார அமைப்பின் படி, நாம் தினமும் 5 கிராமுக்கு மேல் உப்பைப் பயன்படுத்தக்கூடாது. அதிக உப்பை உட்கொள்வதால் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவு அதிகமாகிறது. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. 

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மக்கள் தினமும் 9 முதல் 12 கிராம் உப்பு சாப்பிடுகிறார்கள். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்: 

உணவில் அதிக உப்பை உட்கொள்வது உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கும். இரத்த அழுத்தம் இதயம் மற்றும் பக்கவாதம் போன்ற பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் கண்பார்வையை குறைக்கும். உணவில் குறைந்த அளவு உப்பை உட்கொள்வது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, உணவின் சுவையை முழுமையாக வைத்திருக்கிறது, அத்துடன் பல நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

உடல் பருமனை அதிகரிக்கிறது: 

உணவில் அதிக உப்பை உட்கொள்வது உடல் பருமனை அதிகரிக்கிறது. உப்பை அதிகமாக உட்கொள்வது உடலில் கலோரிகளை அதிகரிக்கிறது. இது உடல் கொழுப்பை அதிகரிக்கிறது. உப்பு அதிகமாக உட்கொள்வதால் இரைப்பைக் கட்டிகளும் ஏற்படலாம். உடல் பருமன் அதிகரித்தால், உப்பைக் கட்டுப்படுத்துங்கள்.

சிறுநீரக ஆரோக்கியத்தில் பாதிப்பு: 

அதிக உப்பை உட்கொள்வது சிறுநீரக ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதிக சோடியம் உடலில் சேரும்போது, ​​அதை ஜீரணிக்க சிறுநீரகங்கள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும்.

வீங்கிய முகம்: 

அதிக உப்பை உட்கொள்வதால், முகத்தில் வீக்கம் தோன்றும். உப்பு அதிகமாக உட்கொள்வதால் முகம் ஊதிய தோற்றம் அளிக்கும் என்பது பல ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.

கைகள் மற்றும் கால்களில் வீக்கம் அதிகரிக்கும்: 

உப்பு அதிகமாகப் பயன்படுத்துவதால் கை மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படலாம்.

மேலும் படிக்க | அளவுக்கு மிஞ்சினால் வைட்டமின் பி கேன்சரை உருவாக்கும்: ஆண்களுக்கான எச்சரிக்கை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News