கொலஸ்ட்ராலைக் குறைக்க இதுவே உறுதியான வழி, இதை சாப்பிடுங்கள்

தினசரி வால்நட்டை சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தம் குறைவதோடு, அழற்சி எதிர்ப்பு விளைவுகளும், கெட்ட கொழுப்பு குறைவும் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 10, 2022, 03:30 PM IST
  • வால்நட்ஸ் கொலஸ்ட்ராலுக்கு மருந்தாகும்
  • நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை
  • தலைமுடி பிரச்சனைகளும் நீங்கும்
கொலஸ்ட்ராலைக் குறைக்க இதுவே உறுதியான வழி, இதை சாப்பிடுங்கள் title=

புதுடெல்லி: கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், வால்நட்ஸ் இதற்கு உதவும். அதன்படி தினசரி வால்நட்டை சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தம் குறைவதோடு, அழற்சி எதிர்ப்பு விளைவுகளும், கெட்ட கொழுப்பு குறைவும் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வால்நட்ஸ் இல் அதிக அளவு ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன.

வால்நட் கொலஸ்ட்ராலுக்கு மருந்தாகும்
வால்நட்ஸில் ஒலிக் அமிலம் போன்ற பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களும், ஆல்பா-லினோலெனிக் அமிலம் போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் இயற்கையாகவே கொழுப்பைக் குறைக்கின்றன. நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் விகிதத்தை மேம்படுத்துகிறது. இது தவிர, வால்நட்டில் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் நார்ச்சத்தும் உள்ளது. 

மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!

நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை
டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தினமும் வால்நட் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் 10 சதவீதம் குறைகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. 30 கிராம் வால்நட்ஸ் பருப்புகளை உட்கொள்வதன் மூலம் இது நிகழ்கிறது. இது உடலில் எச்.டி.எல் அளவை அதிகரிக்கிறது மற்றும் அதனுடன் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

முடி பிரச்சனை நீங்கும்
உங்கள் தலைமுடியை பராமரிக்க விரும்பினாலும் வால்நட் சாப்பிடுங்கள். இதில் வைட்டமின் பி7 உள்ளது, இது உங்கள் தலைமுடியை பலப்படுத்துகிறது, உதிர்வதைத் தடுக்கிறது மற்றும் முடியை நீளமாக்குகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News