இளநரையால் பிரச்சனையா? இந்த எண்ணெயை பயன்படுத்தி பாருங்கள், தீர்வு நிச்சயம்

White Hair Problem: இளநரையால் பிரச்சனையா? இந்த வழியில் இளநரை பிரச்சனைக்கு எளிதாக தீர்வு காணலாம்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 21, 2022, 01:09 PM IST
  • இந்த பழத்தின் எண்ணெயால் கூந்தலுக்கு பலன் கிடைக்கும்.
  • பிளாக் கரெண்ட் சீட் எண்ணெயை பயன்படுத்தவும்.
  • பிளாக் கரெண்ட் சீட் எண்ணெயாக் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள்.
இளநரையால் பிரச்சனையா? இந்த எண்ணெயை பயன்படுத்தி பாருங்கள், தீர்வு நிச்சயம் title=

இளநரைக்கு நிவாரணம் அளிக்கும் பிளாக் கரண்ட் விதை எண்ணெய்: இளம் வயதிலேயே வெள்ளை முடி வருவது இன்றைய காலகட்டத்தில் பெரிய பிரச்சனையாகிவிட்டது. அதை அகற்றுவது அவ்வளவு எளிதல்ல. 20 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தங்கள் கூந்தலில் முதன்முறையாக வெண்மையைக் காணும்போது பதற்றம் அதிகரிக்கும். இந்த பிரச்சனையால் பல சமயங்களில் நம்பிக்கையின்மையையும் சங்கடத்தையும் சந்திக்க நேரிடுகிறது. சில இளைஞர்கள் ரசாயனம் நிறைந்த ஹேர் டை அல்லது விலையுயர்ந்த ஹேர் கலர்களை பயன்படுத்துகிறார்கள். எனினும் இவற்றால் முடி சேதம் மற்றும் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. இளநரையை இயற்கையான எளிய முறையில் கருமையாக்கக்கூடிய ஒரு சிறப்பான தீர்வு பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த பழத்தின் எண்ணெயால் கூந்தலுக்கு பலன் கிடைக்கும்

நம்மில் பலருக்கு பிளாக் கரெண்ட் ஃப்ளேவர் ஐஸ் கிரீம் மிகவும் பிடிக்கும். கேக்குகளிலும் இந்த ஃப்ளேவர் பலருக்கு பிடித்தமான பிளேவராக உள்ளது. பிளாக் கரெண்ட் எனப்படும் கருந்திராட்சையால் நமக்கு பல பலன்களும் ஏற்படுகின்றன. நம் தலைமுடிக்கும் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கின்றன. இது நமது கூந்தலுக்கு பலவிதமான ஊட்டச்சத்துகளை அளிக்கின்றது. அவற்றின் நன்மைகளைப் பற்றி நீங்கள் அறிந்தால், இளநரை பிரச்சனைக்கு இதை பயன்படுத்தாமல் இருக்க மாட்டீர்கள். கூந்தல் பராமரிப்பில் கருந்திராட்சையின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேலும் படிக்க | நீரிழிவு நோய்க்கு வரப்பிரசாதமாகும் 'இந்த' பழத்தின் விதைகளை தூக்கி எறியாதீர்கள்

பிளாக் கரெண்ட் சீட் எண்ணெயை பயன்படுத்தவும்

கருந்திராட்சை குறிப்பாக ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பயிரிடப்படுகிறது. இது சுவையான உணவுகளில் மட்டுமல்ல, மருந்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பழத்தின் விதைகளில் இருந்து பிளாக் கரெண்ட் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளன. இது கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.

பிளாக் கரெண்ட் சீட் எண்ணெயாக் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள்

1. பிளாக் கரெண்ட் சீட் எண்ணெயை தொடர்ந்து தலையில் தடவி வந்தால், வெள்ளை முடி கருமையாக மாறும்.

2. முடி உதிர்தல் பிரச்சனை உள்ளவர்கள், பிளாக் கரெண்ட் சீட் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தினால், கண்டிப்பாக முடி உதிர்வது நிற்கும்.

3. மாறிவரும் வானிலை மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள ஈரப்பதம் காரணமாக உச்சந்தலையில் பொடுகு ஏற்படுவது பொதுவான பிரச்சனையாக உள்ளது. இந்த எண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பொடுகை நீக்க உதவும். 

4. முடியில் வறட்சி இருந்தால், அதன் தோற்றம் மிகவும் விசித்திரமாக மாறும். அத்தகைய சூழ்நிலையில், கண்டிப்பாக பிளாக் கரெண்ட் சீட் எண்ணெய் பயன்படுத்தப்பட வேண்டும். இது கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளிக்கின்றது.

5. கருந்திராட்சை விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துகளின் உதவியால், தலை முடி வேகமாக வளரும். ஏனெனில் முடி வளர்ச்சி பண்புகள் இந்த எண்ணெயில் காணப்படுகின்றன.

(துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Weight Loss Tips: இந்த இயற்கை பானத்தின் உதவியுடன் எடை குறைக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News