Pomegranate: மாதுளை சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா? மாதுளம்பழமும் பெண்களின் ஆரோக்கியமும்

Pomegranate Benefits for Female: பெண்களின் ஆரோக்கியத்திற்கு மாதுளையின் அற்புதமான நன்மைகளைக் கொடுக்கிறது. புற்றுநோயை எதிர்த்துப் போராடுவது முதல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என பெண்களுக்கு மாதுளை மகத்தான பலன்களை அளிக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 23, 2023, 01:43 PM IST
  • கருவுறுதலை மேம்படுத்தும் மாதுளையின் அதிமதுரச் சுவை
  • பெண்களின் ஆரோக்கியத்திற்கு மாதுளை கேரண்டி
  • புற்றுநோயை எதிர்த்துப் போராடுவது முதல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை...
Pomegranate: மாதுளை சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா? மாதுளம்பழமும் பெண்களின் ஆரோக்கியமும் title=

"சொர்க்கத்தின் பழம்" என்றும் அழைக்கப்படும் மாதுளை, அதன் மருத்துவ குணங்களுக்காக பல நூற்றாண்டுகளாக பிரசித்தி பெற்றது. ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, நாக்கிற்கும், மனதிற்கும் சுவையானமாதுளம்பழத்தில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்நிரம்பியுள்ளது. அனைவருக்கும் அதிக நன்மைகளைக் கொடுத்தாலும், பெண்களுக்களுக்கு அற்புதமான பலன்களைக் கொடுக்கும் என்பது மாதுளையின் சிறப்பு. பல நூற்றாண்டுகளாக அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படும் மாதுளம்பழம் பெண்களுக்குக் கொடுக்கும் நன்மைகளைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.  

இதய ஆரோக்கியத்திற்கு மாதுளை
புற்றுநோயைத் தடுக்கும் மாதுளை
செரிமானத்தை மேம்படுத்தும் மாதுளை
ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் மாதுளை
சரும ஆரோக்கியத்திற்கு மாதுளை
கருவுறுதலை ஊக்குவிக்கும் மாதுளை

இதய ஆரோக்கியத்திற்கு மாதுளை

உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணமாக விளங்கும் இதய நோய் பெண்களை கணிசமான அளவில் பாதிக்கிறது. மரபியல் மற்றும் வாழ்க்கை முறை உட்பட  இதய நோய்க்கான ஆபத்து காரணிகள் பல இருந்தாலும், பெண்கள் இதய நோய்கள் ஏற்படாமல் தவிர்க்க ஆரோக்கியமான உணவு முறையை மேற்கொள்வதே ஒரே வழி.

மாதுளம்பழத்தில், கணிசமான அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பாலிபினால்கள் இருப்பதால் ஆரோக்கியம் மேம்படும், மாதுளையை நமது அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க்கலாம். இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தலாம்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா? இந்த டயட் சார்ட் ட்ரை பண்ணுங்க.... உங்க சுகர் வெவல் கட்டுப்பாட்டில் இருக்கும்

புற்றுநோயைத் தடுக்கும் மாதுளை
புற்றுநோய் என்பது உலகளவில் மில்லியன் கணக்கான பெண்களை பாதிக்கும் ஒரு நோயாகும். புற்றுநோய் அபாயத்திற்கு பங்களிக்கும் பல காரணிகள் இருந்தாலும்,  அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்களைக் கொண்ட மாதுளை, புற்றுநோயைத் தடுப்பதில் கணிசமான பங்காற்றுவதை மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

மார்பக புற்றுநோய்க்கு எதிராக போராடும் மாதுளையை தொடர்ந்து உட்கொண்டால் பெருங்குடல் புற்றுநோயின் அபாயம் குறைகிறது. புரோஸ்டேட் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் குணத்தையும் கொண்டுள்ளது மாதுளம் பழம்.

செரிமான ஆரோக்கியத்திற்கு மாதுளை
பெண்களுக்கு பொதுவான பிரச்சனையாக இருக்கும் செரிமான பிரச்சினைகள், உலகளவில் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கிறது. செரிமான பிரச்சனைகளுக்கு பங்களிக்கும் பல காரணிகள் இருந்தாலும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழி ஆரோக்கியமான உணவுமுறை ஆகும். நார்ச்சத்து மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகளை அதிக அளவில் கொண்ட மாதுளையை தொடர்ந்து உண்டு வந்தால், செரிமான ஆரோக்கியம் மேம்படும். 

அதோடு, மாதுளையை தொடர்ந்து உண்டு வந்தால், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் என்ற சிக்கல்கள் ஏற்படாது. வயிற்றில் ஏற்படும் அழற்சியைத் தணித்து, குடல் நுண்ணுயிரியை மேம்படுத்தி ஆரோக்கிய அருமருந்தாக மாதுளை செயல்படுகிறது.

மேலும் படிக்க | Weight Loss: ஒல்லியாவது சிம்பிள்! ‘இந்த’ பழக்கத்தை கொண்டு வந்தா ஈசியா எடை குறையும்

ஹார்மோன் சமநிலைக்கு மாதுளை
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஹார்மோன் சமநிலையின்மை பெண்களுக்கு ஒரு பொதுவான பிரச்சனையாகும். மாதுளையில் இருக்கும் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் என பல்வேறு சிறப்புப் பண்புகள், ஹார்மோன் சமநிலையில் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதோடு, பெண்கள் தொடர்ந்து மாதுளையை உணவில் சேர்த்துக் கொண்டால் மாதவிடாய் சுழற்சியை சீராக இருக்கும். மெனோபாஸ் பிரச்சனைகள் குறையும் என்பதோடுட், ஹார்மோன் தொடர்பான புற்றுநோய்களின் அபாயமும் குறைகிறது

சருமஆரோக்கியத்திற்கு மாதுளை
ஊட்டச்சத்துகள் நிறைந்த மாதுளம்பழம், மருத்துவ பொக்கிஷம் கொண்ட பழம் என்பதால், பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு உணவு வகைகளில் மூலப்பொருளாக இருப்பதுடன், சருமப் பராமரிப்பிலும் மாதுளை சிறப்பான பங்களிக்கிறது. சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு, வயதாவதை தள்ளிப்போடும் பண்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்காக அழகு துறையில் பிரபலமடைந்துள்ள பழங்களில் பிரதானமானது மாதுளை ஆகும்.

மேலும் படிக்க | கர்ப்பிணி பெண்கள் 'இந்த' உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்! 

சரும ஆரோக்கியத்திற்கு மாதுளையின் நன்மைகள்
சருமம் முதிர்ச்சியடைவதைத் தடுக்க்கும் பண்புகளைக் கொண்ட மாதுளையை தினசரி உட்கொள்வதால், முகப்பருக்கள் ஏற்படாது. சூரியனின் நேரடி தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது

மாதுளை கருவுறுதலை மேம்படுத்தும்
மாதுளை பல நூற்றாண்டுகளாக மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் பழம். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளள மாதுளம் பழம், கருவுறுதலை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பெண்களுகு கருவுறுதலுக்கு உதவும் மாதுளை, ஆண்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. கருப்பை ஆரோக்கியத்தையும் லிபிடோவையும் மேம்படுத்தும் பண்புகள் மாதுளம்பழத்தில் இருக்கிறது.

மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு தேவையான பழங்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் மாதுளை

மாதுளையின் சிறப்பு ஆரோக்கிய பண்புகளின் தொகுப்பு

மாதுளை ஆன்டிஆக்ஸிடன்ட்களின் வளமான மூலமாகும், இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல் சேதத்தைத் தடுக்க உதவுகிறது.
மாதுளையில் பாலிபினால்கள் உள்ளன, அவை வீக்கத்தைக் குறைக்கின்றன, நாள்பட்ட நோய்களைத் தடுக்கின்றன.
மாதுளம்பழத்தின் ஜூஸ், இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
மார்பகம், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் பண்புகள் மாதுளையில் உள்ளன.
செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான கோளாறுகளைத் தடுக்கவும் மாதுளை உதவும் 
மாதுளையில் ஈஸ்ட்ரோஜன் அளவைக் கட்டுப்படுத்தும், ஹார்மோன் சமநிலையை ஊக்குவிக்கும் கலவைகள் உள்ளன.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மாதுளை, தோல் சுருக்கங்கள், வீக்கம் மற்றும் சூரியக் கதிர்கள் ஏற்படுத்தும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறும் பண்பை மாதுளை அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்களை தடுக்கும் பண்புகளைக் கொண்டது மாதுளை.
பசியை அடக்கி, கொழுப்புச் சேமிப்பைக் குறைத்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் எடையைக் குறைக்க மாதுளை உதவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

கே. மாதுளை மார்பக புற்றுநோயைத் தடுக்குமா?
A. ஆம், மாதுளையில் பாலிபினால்கள் உள்ளன, அவை மார்பக புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கின்றன மற்றும் புற்றுநோய் செல்கள் பெருகுவதைத் தடுக்கின்றன.

கே. மாதுளை தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?
A. ஆம், மாதுளை சரும ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. மாதுளையில் உள்ள எலாஜிக் அமிலம் மற்றும் புனிகலஜின் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், தோல் மீளுருவாக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க | பயங்கரமா எடை ஏறுதா? வேகமா குறைக்கலாம்... காலை உணவில் இதை சாப்பிடுங்க, போதும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News