உதட்டின் கருமையால் பிரச்சனையா? மிருதுவான, பிங்க் லிப்ஸ் பெற எளிய டிப்ஸ்!!

Lip Care: உங்கள் உதடுகளின் நிறத்தால் உங்களுக்கு மன வருத்தமா? உதட்டின் நிறம் இளஞ்சிவப்பு நிறமாக மாற வேண்டுமா? இதோ எளிய டிப்ஸ்!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 30, 2022, 03:13 PM IST
  • உதடுகளின் கருமையை போக்க டிப்ஸ்.
  • எலுமிச்சை மற்றும் தேன் உதவும்.
  • கற்றாழை மற்றும் தேன் லிப் பேக் பயன் தரும்.
உதட்டின் கருமையால் பிரச்சனையா? மிருதுவான, பிங்க் லிப்ஸ் பெற எளிய டிப்ஸ்!! title=

உதடுகளின் பராமரிப்புக்கான வீட்டு வைத்தியம்: அனைவரும் தங்கள் உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் காபி மற்றும் குளிர் பானங்களை உட்கொள்வதாலும், ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும்  உதடுகள் கருப்பாக மாறிவிடுகின்றன. கருப்பு உதடுகள் உங்கள் அழகில் கறையாக மாறுவது மட்டுமல்லாமல், முகத்தின் தோற்றத்தையும் கெடுக்கும். 

பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும். இப்படி உதடுகளின் அழகு பாழாவதற்கு அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன், புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்கள் காரணங்களாக உள்ளன. உதட்டின் மேல் உள்ள கருமை நீங்க, உதடு சிவப்பாக, உதடுகளை அழகாக வைத்துக் கொள்ள சில அற்புத வழிகள் உள்ளன. 

உதடுகளின் கருமை மற்றும் வறட்சி போன்ற பிரச்சனைகளால் நீங்கள் அவதியில் இருந்தால், சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி இந்த பிரச்சனையிலிருந்து எளிதாக விடை பெறலாம். உதடுகளின் கருமையை நீக்குவது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம். 

உதடுகளின் கருமையை போக்க டிப்ஸ்

எலுமிச்சை மற்றும் தேன்

உதடுகளின் கருமையை போக்க தேன் மற்றும் எலுமிச்சையை பயன்படுத்துவது சிறந்ததாக கருதப்படுகிறது. தேன் மற்றும் எலுமிச்சையில் ஒளிரும் பொருட்கள் உள்ளன. அவை உதடுகளில் தடவப்பட்டால், உதடுகளை உள்ளிருந்து இளஞ்சிவப்பு நிறமாக மாற்றும். மேலும், தேன் உதடுகளை ஆழமாக ஈரப்பதமாக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். உதடுகளின் கருமை நீங்க, தேன் மற்றும் எலுமிச்சையை வாரத்திற்கு மூன்று முறை உதடுகளில் தடவவும்.

மேலும் படிக்க | Nervous system: நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் ‘சில’ உணவுகள்! 

கற்றாழை மற்றும் தேன் லிப் பேக்

கற்றாழை மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்படும் லிப் பேக் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இதனால் உதடுகள் எப்போதும் அழகாகவும் மென்மையாகவும் இருக்கும். இதைத் தயாரிக்க, முதலில் நீங்கள் கற்றாழை ஜெல்லை எடுத்து, அதில் சிறிது தேன் கலக்கவும். இந்த கலவையை உங்கள் உதடுகளில் 20 நிமிடங்கள் தடவவும். இப்படி செய்வதால் உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாக மாறும். இந்த பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.

ரோஜா இதழ்கள்

உதடுகளை இளஞ்சிவப்பு நிறத்தில் வைத்திருக்க ரோஜா இதழ்கள் உதவும். உதடுகளில் ரோஜா இதழ்களை உதட்டில் பூச முதலில் நன்றாக அரைத்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, இந்த பேஸ்ட்டை தினமும் இரவில் தூங்கும் முன் உதடுகளில் தடவவும். இப்படி செய்வதால் உதடுகளின் கருமை நீங்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அதிகம் முட்டை சாப்பிடும் நபரா நீங்கள்? ஜாக்கிரதை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News