மூலிகைகளை கொண்டு வீட்டிலேயே ஹேர் டை தயாரிக்கலாம்!

வெள்ளை முடி என்பது முதியர்வர்கள் பிரச்சனையாக இருந்த காலம் போய் இப்போது இளைஞர்களுக்கு அது ஒரு பிரச்சனையாகி விட்டது. இளம் வயதிலேயே வெள்ளை முடி உங்களை முதுமையாக்குகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 11, 2023, 10:15 PM IST
  • ம்பாளம் பட்டை மற்றும் மருதாணி மற்ற மூலிகைகளுடன் கலக்கும்போது, ​​அவை முடிக்கு அடர்ந்த பழுப்பு நிறத்தை கொடுக்கும்.
  • வேம்பாளம் பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயையும் தடவுவதும் நல்ல பலன் கிடைக்கும்.
  • வெள்ளை முடி என்பது முதியர்வர்கள் பிரச்சனையாக இருந்த காலம் போய் இப்போது இளைஞர்களுக்கு அது ஒரு பிரச்சனையாகி விட்டது.
மூலிகைகளை கொண்டு வீட்டிலேயே ஹேர் டை தயாரிக்கலாம்!  title=

வெள்ளை முடி என்பது முதியர்வர்கள் பிரச்சனையாக இருந்த காலம் போய் இப்போது இளைஞர்களுக்கு அது ஒரு பிரச்சனையாகி விட்டது. இளம் வயதிலேயே வெள்ளை முடி உங்களை முதுமையாக்குகிறது. எனவே ரசாயன கலவையினால் முடிக்கு கலர் செய்வதற்கு பதிலாக இயற்கையான பொருட்களைக் கொண்டு கலர் செய்யலாம், இதனால் கூந்தல் ரசாயனங்களால் மேலும் வெள்ளையாக மாறுவதைத் தவிர்க்கலாம். புதிய வெள்ளை முடி வருவதையும் தடுக்கலாம். முடி சாயத்திற்கு சில ஆயுர்வேத மூலிகைகளுடன் வீட்டில் பிரவுன் ஹேர் கலர் தயாரிக்கலாம்.

வேம்பாளம் பட்டை, ஜாதமாசி, தான்றிக்காய் மற்றும் மருதாணி ஆகியவற்றால் செய்யப்பட்ட இயற்கையான ஹேர் டையை எப்படி தயாரிப்பட்ர்ஹ்ரு என்பதை அறிந்து கொள்ளலாம். இது உங்கள் தலைமுடியை வெறும் 2 மணி நேரத்தில் வெள்ளை நிறத்தில் இருந்து கருப்பு-பழுப்பு நிறமாக மாற்றும். வேம்பாளம் பட்டை என்பது ஆயுர்வேத மருத்துவ மூலிகையாகும். இது பல நோய்களைக் குணப்படுத்துகிறது, மேலும் இது மருந்துகளுடன் உணவில் நிறமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இதன் நிறம் மிகவும் உறுதியானது, எனவே முடிக்கு வண்ணம் பூசுவது எளிதாகிறது மற்றும் மருதாணியுடன் இணைந்தால், இது முடிக்கு ஆரஞ்சு நிறத்தை கொடுக்காது, மாறாக இது முடிக்கு அடர்ந்த பழுப்பு நிறத்தை அளிக்கிறது. வேம்பாளம் பட்டை மற்றும் மருதாணி மற்ற மூலிகைகளுடன் கலக்கும்போது, ​​அவை முடிக்கு அடர்ந்த பழுப்பு நிறத்தை கொடுக்கும். இது மட்டுமின்றி வெம்பலம்பட்டையில் இருந்து ஹேர் கலர் ஆயில் தயாரிப்பது எப்படி என்றும் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | பொதுவாக காணப்படும் புற்றுநோய்கள்: ஆண்களுக்கு எது?, பெண்களுக்கு எது?

வேம்பாளம் பட்டை, வெந்தயம், நெல்லிக்காய்,  நாகர்மோதா, மருதாணி, சிகைக்காய், தான்றிக்காய், ஜாதமசி இவை அனைத்தையும் சேர்த்து 16 மடங்கு தண்ணீரில் குறைந்தது 36 மணி நேரம் ஊறவைக்க வேண்டும், இவை அனைத்தையும் இரும்பு சட்டியில் மட்டுமே ஊற வைக்க வேண்டும். 36 மணி நேரம் கழித்து, இதனை அரைத்து, பின்னர் அதனை இரும்பு இலுப்ப சட்டியில் வைத்து கெட்டியாகும் வரை கிளறவும். பின்னர் ஆறியவுடன்,  முடியின் வேர் முதல் முடியின் இறுதி வரை நன்றாக தடவி ஊறவிடவும். இதற்குப் பிறகு, நன்றாக உலர்ந்ததும், ஷாம்பு இல்லாமல் வெற்று நீரில் மட்டும் கழுவவும். இந்த பேஸ்ட்டை வாரத்திற்கு மூன்று முறை தடவவும். இது உங்கள் தலைமுடியை கருப்பாக்கும், மேலும் பல விதமான நோய்கள் மற்றும் உச்சந்தலையில் உள்ள குறைபாடுகளும் நீங்கும்.

வேம்பாளம் பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயையும் தடவுவதும் நல்ல பலன் கிடைக்கும். கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை இரும்புச் சட்டியில் ஊற்றி, அதில் வேம்பாளம் பட்டையை போட்டு நன்கு சூடாக்கிய பின்  தனி பாத்திரத்தில் எடுத்து லேசாக ஆற வைக்கவும். இந்த எண்ணெயை முடி, உச்சந்தலையில் மற்றும் வேர்களில் நன்கு தடவவும். இதைக் கொண்டு உச்சந்தலையில் சிறிது நேரம் மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் தலைமுடியில் விட்டு, மறுநாள் காலையில் லேசான ஹெர்பல் ஷாம்பு கொண்டு கழுவவும். இதனாலும் முடியின் நரை முடி கருப்பாக ஆகி ஆரம்பித்து முடி நரைப்பது நின்றுவிடும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இவை சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்! ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News