‘இதை’ செய்யுங்கள்-வெயில் காலத்தில் வியர்வை நாற்றத்திற்கு பை-பை சொல்லுங்கள்!

How To Smell Good In Summer : வெயிலில் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதும், இதனால் உடலில் இருந்து துர்நாற்றம் ஏற்படுவதும் சகஜம்தான். ஆனால், உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களிடம் இருந்து வியர்வை நாற்றம் வெளியேறினால் உங்கள் மீது அவர்களுக்கு மோசமான அபிப்ராயம் ஏற்படலாம். 

Written by - Yuvashree | Last Updated : Apr 6, 2024, 04:23 PM IST
  • வெயில் காலத்தில் துர்நாற்றத்தை தடுக்க..
  • வியர்வை நாற்றத்தை வெளியேறாமல் தடுப்பது எப்படி
  • ஈசி டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..
‘இதை’ செய்யுங்கள்-வெயில் காலத்தில் வியர்வை நாற்றத்திற்கு பை-பை சொல்லுங்கள்! title=

How To Smell Good In Summer : கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னரே பலர் “அய்யோ..இந்த வெயிலே தாங்க முடியலையே..” என புலம்ப ஆரம்பித்து விட்டனர். இந்த வெயில் காலத்தில் உடலில் இருக்கும் அனைத்து சக்திகளும் உறிஞ்சப்பட்டது பாேன்ற உணர்வு ஏற்படலாம். இதனால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதும், அடிக்கடி நன்றாக தண்ணீர் குடிப்பதும் மிகவும் முக்கியமாகும். வெயிலில் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதும், இதனால் உடலில் இருந்து துர்நாற்றம் ஏற்படுவதும் சகஜம்தான். ஆனால், உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களிடம் இருந்து வியர்வை நாற்றம் வெளியேறினால் உங்கள் மீது அவர்களுக்கு மோசமான அபிப்ராயம் ஏற்படலாம். எனவே, வியர்வை நாற்றம் வராமல் உங்கள் உடலை எப்படி பார்த்துக்கொள்வது என்பதை இங்கு பார்ப்போம்.

1.மாய்ஸ்ட்ரைசர்:

இந்த வெயில் காலத்தில் உடலை வறட்சி அடையாமல் பார்த்துக்கொள்வதற்காக பலர் தங்களின் சருமத்தில் மாய்ஸ்ட்ரைசறை உபயோகிப்பர். இது, உடலை நீர்ச்சச்த்து நிறைந்ததாகவும் வைத்துக்கொள்ள உதவும். இவற்றை உடலில் தடவுவதால் வியர்வை நாற்றம் வராமலும் தடுக்கலாமாம். எனவே, இலகுவான மிகவும் கொழுப்பு அல்லாத மாய்ஸ்ட்ரைசர்களை சருமத்தில் உபயோகப்படுத்துங்கள். 

2.உடுத்தும் ஆடைகள்:

நீங்கள் மட்டுமல்ல, உங்களது சருமமும் இந்த வெயில் காலத்தில் நன்றாக, நிம்மதியாக மூச்சு விட வேண்டும். எனவே, நீங்கள் உடுத்தும் உடைகளில் கவனம் செலுத்துங்கள். சின்தடிக், காட்டன் உடைகளை இந்த வெயில் காலத்தில் பயன்படுத்தலாம். இவை, உடலில் இருந்து வரும் வியர்வையையும் நன்கு இழுத்துக்கொள்ளும். வெயிலினால் உடலில் ஏற்படும் சூடும், இந்த ஆடைகளினால் உறிஞ்சப்படுவதாக கூறப்படுகிறது. 

3.வாசனை திரவியம்:

வெயில் காலமோ, மழை காலமோ, அனைத்து கால நிலைகளிலும் வாசனை திரவியத்தை (Scent or Perfume) உபயோகிக்கலாம். ஆனால், நமக்கென வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்கும் போது கவனம் தேவை. பல செண்டுகளில் ஆல்கஹால் உள்ளடக்கம் இருக்கும். ஆல்கஹால் கலந்து செண்டுகளை பயன்படுத்தினால் இவை நமது சருமத்தை ட்ரை ஆக்கி,, வியர்வை நாற்றம் வெளியேறுகையில் தடுக்காமல் செய்து விடும். அதுமட்டுமல்ல, இதனால் உடலில் பேக்டீரியாவும் பரவலாம். எனவே, ஃப்ரெஷ்ஷான, ஆல்கஹால் அற்ற வாசனை திரவியங்களை உபயோகிக்கலாம். 

மேலும் படிக்க | புற்றுநோய், கொல்ஸ்ட்ராலை ஏற்படுத்தும் சுட்ட எண்ணெய்... எச்சரிக்கும் நிபுணர்கள்!

4.வெட் வைப்ஸ்:

வெயிலில் வெளியில் அலையும் போது, கூடவே வெட் வைப்ஸ் (Wet Wipes) டிஷூக்களை வைத்துக்கொள்ளுங்கள். இவை விதவிதமான ஃப்ளேவர்களிலும் விற்கின்றன. இதை வைத்து முகத்தை துடைத்தால், ஃப்ரெஷ்ஷான உணர்வு கிடைக்கும். அது மட்டுமல்ல, முகத்தில் இருந்து வடியும் எண்ணெயையும் இதன் மூலம் துடைத்து எடுக்கலாம். இதை வைத்து வியர்வை வரும் இடத்தில் துடைத்தால் வியர்வை நாற்றம் வெளியேறும். இவை மட்டுமல்ல, வியர்வை மூலம் பரவும் பாக்டீரியாக்களையும், அழுக்குகளை அகற்றவும் கூட வெட் வைப்ஸ் உதவும். 

5.வாசனையை நீட்டிக்க செய்ய டிப்ஸ்:

உங்கள் மீது நன்றாக நறுமணம் வரவேண்டும் என்றால், அதற்கு வழி இருப்பது போல, அந்த நறுமணத்தை பல மணி நேரம் நீட்டிக்க செய்வதற்கும் சில வழிகள் இருக்கிறது. குளிக்கும் போது, நறுமணமிக்க, சருமத்திற்கு நன்மை பயக்கும் பாடி வாஷ்களை உபயோகிக்கலாம். இதை தினமும் உங்கள் ஸ்கின் கேரில் சேர்த்துக்கொள்ளலாம். குளித்த பிறகு உடலுக்கான பாடி லோஷன் தடவலாம். இதன் பிறகு, முழுதாக ஆடை உடுத்திய பின்பு வாசனை திரவியத்தை தடவினால், பல மணி நேரங்களுக்கு நறுமணத்துடன் இருப்பீர்கள். வியர்வை நாற்றத்திற்கு பைபை சொல்லி விடலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | H5N1 Virus : கொரோனாவை விட கொடிய நோய் பரவ வாய்ப்பு! பகீர் கிளப்பும் மருத்துவர்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News