முடி அதிகம் உதிர்கிறதா? இதை மட்டும் பண்ணுங்க!

அதிகமாக தலைக்கு ஷாம்பு பயன்படுத்தினால் தலைமுடி உதிரும் என்று கூறப்படும் நிலையில், வாரத்திற்கு ஒருமுறை மட்டும் ஷாம்பூ பயன்படுத்தினால் முடி உதிர்வு ஏற்படும் என்று கூறப்படுகிறது.   

Written by - RK Spark | Last Updated : Nov 23, 2022, 07:07 AM IST
  • முடி உதிர்வு அதிக கவலையை ஏறுபடுத்தும்.
  • பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது.
  • சிலவற்றை பாலோ செய்தால் முடி உதிர்வை தவிர்க்கலாம்.
முடி  அதிகம் உதிர்கிறதா? இதை மட்டும் பண்ணுங்க!  title=

முடி உதிர்தல் என்பது இயற்கையான ஒன்றாக இருக்கலாம் ஆனால் அதிகளவில் முடி உதிர்வது கவலையை ஏற்படுத்தும்.  பொதுவாக முடி உதிர்தல் என்பது அலோபீசியா என்று அழைக்கப்படுகிறது, இவை தலையில் முடி உதிர்வை ஏற்படுத்தும் அதுவே நோய் தீவிரமானால் புருவத்திலுள்ள முடிகள் கூட உதிர்ந்துவிடும்.  முடி உதிர்விற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் மற்றும் வைட்டமின் டி3, பி, பி12, இரும்பு அல்லது ஃபெரிடின் அளவுகள் குறைவாக இருந்தாலும், பிசிஓடி, டைபாய்டு, டெங்கு, மலேரியா மற்றும் கோவிட் போன்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் முடி உதிரும்.  ஒருவரது டயட்டில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்ட்டாலும் முடி உதிர்வு ஏற்படும்.  அதிகமாக தலைக்கு ஷாம்பு பயன்படுத்தினால் தலைமுடி உதிரும் என்று கூறப்படும் நிலையில், வாரத்திற்கு ஒருமுறை மட்டும் ஷாம்பூ பயன்படுத்தினால் முடி உதிர்வு ஏற்படும் என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | இந்த நோய்கள் உங்களுக்கு இருக்கா, அப்போ வெந்தயத்த அவாய்ட் பண்ணுங்க 

இயற்கையாகவே நமது தலையில் எண்ணெய் உற்பத்தியாகிறது, இந்த எண்ணெயுடன் வியர்வை, அழுக்கு அல்லது மாசுபாடு ஆகியவற்றுடன் இணைந்தால் அழுக்குகள் சேர்ந்து பொடுகு உருவாகும், இதனை சுத்தம் செய்யாவிட்டால் பொடுகு அதிகரித்துக்கொண்டே செல்லும், இறுதியில் இது முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.  தலைக்கு தினமும் ஷாம்பு பயன்படுத்தி சுத்தம் செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  கருத்தடை மருந்துகள், இரத்த உறைதல் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வலிப்பு நோய்க்கான மருந்துகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வு ஏற்படும் மற்றும் மனநிலைக் கோளாறுகள் இருந்தாலும் சிலருக்கு முடி உதிர்வு ஏற்படும்.  உச்சந்தலையில் பூஞ்சை தொற்று, சொரியாசிஸ், டிஎல்இ மற்றும் அடோபிக் டெர்மடிடிஸ் போன்றவை இருந்தால் சருமம் பாதிப்படையும்.  ஒரு நாளைக்கு சுமார் 50-100 முடி உதிர்வது இயல்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முடி உதிர்வை தீர்க்க செய்யவேண்டியவை:

1) அகலமான பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்தி தலை சீவலாம், ஒவ்வொரு நாளும் உங்கள் தலைமுடியை சீப்பு வைத்து சீவ வேண்டும் அப்படி செய்தால் ரத்த ஓட்டம் அதிகரித்து தலைமுடி வளர்ச்சிக்கு உதவும்.

2) தலைக்கு குளித்தால் தலைமுடியை இயற்கையாக உலர வைக்கவும், ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.  பயன்படுத்த  விரும்பினால் சூடான ஹேர் ட்ரையருக்கு பதிலாக பிளாஸ்ட் ட்ரையரைத் தேர்ந்தெடுக்கவும்.

3) ரீபாண்டிங், ஸ்மூத்னிங் போன்ற கெமிக்கல் நிறைந்த சிகிச்சைகளைத் தவிர்க்கவும் அல்லது குறைக்கவும்.

4) முடிக்கு அதிகமாக வண்ணம் பூசுவதைத் தவிர்க்கவும், செயற்கையான வண்ணத்தைப் பயன்படுத்தினால் முடி வேர்களில் பாதிப்படையும். விருப்பப்பட்டால் முடியும் வேரிலிருந்து ஒரு அங்குலம் தள்ளி வண்ணம் பூசிக்கொள்ளலாம்.

5) உச்சந்தலையில் எண்ணெய் தடவி இரவு முழுவதும் வைக்கக்கூடாது, ஷாம்பு போடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் உச்சந்தலையில் எண்ணெயை வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.

6) முடியை அலசுவதற்கு வெந்நீரைத் பயன்படுத்தாமல் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் நீங்கள் உண்ணும் உணவில் அதிகளவில் புரதங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | ஹைப்பர் கிளைசீமியா அதிகமானால் ஆபத்து! கர்ப்பிணிகள் எப்படி பாதுகாப்பாக இருக்கலாம்? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News