Grey Hair: நரை முடியை கருமையாக்கும் காபி; பயன்படுத்தும் முறை

நரை முடி பிரச்சனைகளை என்பது வயதானவர்கள் பிரச்சனையாக இருந்த காலம் மலை ஏறி விட்டது. இப்போது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையினால் அவதிப்படுகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 18, 2022, 08:25 AM IST
Grey Hair: நரை முடியை கருமையாக்கும் காபி; பயன்படுத்தும் முறை title=

நரை முடி பிரச்சனைகளை என்பது வயதானவர்கள் பிரச்சனையாக இருந்த காலம் மலை ஏறி விட்டது. இப்போது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையினால் அவதிப்படுகின்றனர். இளமையில்  நரை முடி  ஏற்படுவதற்கு டென்ஷன் முக்கிய காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

 முடியை கருமையாக்குவதற்கு சந்தையில் பல ரசாயனங்கள் கிடைத்தாலும், இயற்கையாகவே கருமையாக்குவது தான் எப்போதுமே சிறந்தது இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. எனவே காபி மூலம் எப்படி முடியை கருப்பாக்குகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

மாறிவரும் வாழ்க்கை முறையால் பெரும்பாலானோரின் தலைமுடி இளம் வயதிலேயே நரைக்க தொடங்கி விடுகிறது. அதே சமயம், சிலருக்குத் தேவையான சத்துக்களை உடலில் பெற முடியாமல் போவதால், பெரும்பாலானோருக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே காபி மூலம் எப்படி வெள்ளை முடியை கருப்பாக மாற்றலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | Health vs Kale: நீரிழிவையும், ரத்த அழுத்தத்தையும் போக்கு கீரைகளின் ராணி பரட்டை

 கூந்தலில் காபியை கொண்டு நரை முடிக்கு சிகிச்சை அளிக்க, முதலில் கருப்பு காபியை தயார் செய்ய வேண்டும், அதன் பிறகு அதில் சிறிது தண்ணீர் கலக்க வேண்டும். இதை கலந்து முடியில் தடவலாம்.  அரை மணி நேரம் அதனை அப்படியே விட்டு விட வேண்டும். இதன் மூலம் நீங்கள் நிச்சயம் பலன் அடைவீர்கள். காபி பேஸ்ட்டை தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேஸ்ட்டை தினமும்  தொடர்ந்து 15 நாட்களில் தடவி வந்தால், இள நரை உள்ள கூந்தலும் கருப்பாக மாறும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Chia Seed vs Weight Loss: கொழுப்பை குறைத்து உடல் எடையை பராமரிக்க சியா விதைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News