யூரிக் அமிலத்தை குறைக்க வந்துவிட்டது குளிர்கால கீரை! பியூரின் குறைவான பதுவா கீரை

Control Uric Acid With bathua: யூரிக் அமிலத்திற்கான மருந்துகளை விட பல மடங்கு நன்மை பயக்கும் ஸ்பெஷல் கீரை... இது குளிர்காலத்தில் கீல்வாதத்தை தவிர்க்க அருமையான வழி  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 19, 2023, 03:54 PM IST
  • யூரிக் அமிலத்தை அசால்டாய் கட்டுப்படுத்தும் கீரை
  • நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் பச்சை இலைகள்
  • ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பதுவா கீரை
யூரிக் அமிலத்தை குறைக்க வந்துவிட்டது குளிர்கால கீரை! பியூரின் குறைவான பதுவா கீரை title=

சமீப காலத்தில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் பிரச்சனையால் பலர் சிரமப்படுகிறார்கள். இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது. மூட்டுகளைச் சுற்றி யூரிக் அமிலம் குவிவதால் ஏற்படும் இந்த உடல்நலக் கோளாறு, யூரிக் அமிலம் எலும்பு மூட்டுக்களில் படிவதால் உருவாக்குகிறது. யூரிக் அமிலத்தின் அளவு இரத்தத்தில் அதிகரிப்பதால் சிறுநீரகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, யூரிக் அமிலத்தின் அளவைக் குறைப்பது மிகவும் முக்கியம்.

யூரிக் அமில அதிகரிப்பைக் குறைக்க, நீங்கள் பல வகையான உணவைப் பின்பற்றலாம், இதில் பதுவா கீரைகளும் அடங்கும். இந்த கீரையில் பியூரின் அளவு மிகவும் குறைவு. மேலும், இது நார்ச்சத்துகள் கொண்ட ஊட்டச்சத்துக் கீரை. யூரிக் அமிலத்தை குறைக்க பதுவா கீரையை எப்படியெல்லாம் விதவிதமாக சமைத்து சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
 
யூரிக் அமிலத்தைக் குறைக்க பதுவா ஜூஸ் (Bathua Juice Reduce Uric Acid) ஒரு ஆரோக்கியமான தேர்வாகும். இது செரிமான சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் யூரிக் அமிலம் (Uric Acid Home Remedies) மற்றும் கீல்வாதத்தை குறைப்பதில் சிறந்ததாக நிரூபிக்கிறது.

மேலும் படிக்க | அதிக கால்சியமும் ஆபத்து தான்! தமனிகளில் கால்சியம் படிந்தால் என்ன ஆகும்?

பாத்துவா ஜூஸ் தயாரிப்பது எப்படி?

ஒரு கைப்பிடி பாத்துவா கீரையை சுத்தம் செய்து அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது தேன் மற்றும் கருப்பு மிளகு சேர்த்து குடிக்கவும். இதன் சாற்றை குடிப்பது யூரிக் அமிலத்தில் மிகவும் நன்மை பயக்கும். 
 
யூரிக் அமிலத்தை குறைக்கும் பதுவா கீரையை தோசை மாவில் கலந்து கீரை தோசையாக சாப்பிடலாம். அதேபோல, சப்பாத்தி மாவு பிசையும்போது, அதில் பொடியாக நறுக்கிய பதுவா கீரை மற்றும் உப்பு காரம், சீரகம் செய்து சப்பாத்தி செய்து சாப்பிட்டால், அது பராட்டா போல சுவையுடன் இருப்பதோடு, யூரிக் அமிலத்தை குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

பதுவா பருப்பு கூட்டு
இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதைக் குறைக்க, பதுவா மற்றும் பருப்பு சேர்த்து உட்கொள்வது ஆரோக்கியத்தை கூட்டும். எந்த பருப்பாக இருந்தாலும் சரி, பருப்பை வேக வைத்துவிட்டு, அதில் பொடியாக நறுக்கிய பதுவா கிரையை சேர்த்து கூட்டாக தயாரித்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவது நிற்கும்.
 
யூரிக் அமிலத்தை குறைக்கும் பதுவா பச்சடி
யூரிக் அமில அளவைக் குறைக்க பதுவா பச்சடி மிகவும் ஆரோக்கியமானது. பதுவாவை பொடியாக நறுக்கி கீரைப் பொரியலாக சமைக்கவும். அதன் பிறகு, அதனுடன் தயிர், கருப்பு மிளகு, சீரகப் பொடி சேர்த்தால் பதுவா பச்சடி ரெடி, இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புதமான பச்சடி ஆகும். 

(பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | யூரிக் ஆசிட் கட்டுப்படுத்தும் அருமையான கீரை! ப்யூரினை தூளாக்கும் கடுகுக்கீரை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News