பருவில்லாத பளபளக்கும் முகம் வேண்டுமா: சுலபமான கைவைத்தியம்

 Home Remedies for Skin: முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் பருக்கள் பிரச்சனை, இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள், தோல் பளபளக்க ஆரம்பிக்கும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 3, 2022, 10:41 AM IST
பருவில்லாத பளபளக்கும் முகம் வேண்டுமா: சுலபமான கைவைத்தியம் title=

வீட்டு வைத்தியம்: முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் பருக்கள் பிரச்சனை, இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள், தோல் பளபளக்க ஆரம்பிக்கும்.

அழகான முகத்தில் முகப்பரு மற்றும் சிறிய மருக்கள் தோன்றி அழகைக் குறைக்கும். பெரும்பாலும் அவை கன்னங்கள் அல்லது முகத்தின் மற்ற பகுதிகளில் ஏற்படும். சில நேரங்களில் புருவங்களின் நடுவிலும் பருக்களும் வடுக்களும் ஏற்பட்டு முகத்தின் அழகுக்கு களங்கம் ஏற்படுத்தும்.

இந்த சுலபமான வீட்டு வைத்தியங்களை கடைபிடித்தால், பருக்களின் கவலை போயேபோச்சு என்று டயலாக் பேசலாம்.

இந்த முறையில், முகப்பருக்கள் மட்டுமல்ல, முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயும் நீங்கும், முகத்தில் வறட்சித்தன்மை இருந்தால் அதுவும் சரியாகி முகம் பளபளக்கும்.

மேலும் படிக்க | பார்லியின் ஊட்டச்சத்து

இயற்கையான டோனர்  

வெள்ளரிக்காயை சாறு எடுத்து அதில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவவும். இதனால் பருக்கள் மங்கத் தொடங்கி, பின்னர் இரண்டு நாட்களில் மறையும்.

வெள்ளரியில் உள்ள அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் பருக்களை அகற்ற உதவுகிறது.

டீ ட்ரீ ஆயில் பயன்படுத்தவும்
சருமம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிப்பதில் டீ ட்ரீ ஆயில் முதலிடத்தில் உள்ளது. இந்த மருத்துவ எண்ணெஇயில் இரண்டு துளிகள் எடுத்து அதில் சிறிது ரோஸ் வாட்டரை கலக்கவும்.

இப்போது அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து, பருக்கள் மற்றும் வடுக்கள் மீது தெளிக்கலாம் அல்லது பஞ்சில் நனைத்து பருக்களின் மீது தடவவும். இது சருமத்திற்கு சிறந்த ஊட்டத்தைக் கொடுக்கும்.

மேலும் படிக்க | எடை இழப்புக்கான அடுப்பங்கரை மசாலாக்கள்

வேப்ப இலை பேக்
வேம்பு நம் சருமத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது. வேப்ப இலைகளை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு இரவு அப்படியே வைக்கவும். மறுநாள், ஊறியிருக்கும் இலைகளை அரைத்து மாஸ்க் செய்து, பருக்களின் மீது தடவவும். வேப்பிலையை கொதிக்க வைத்த நீரில் முகத்தையும் கழுவலாம். இது நல்ல பலன் தரும்.

இலவங்கப்பட்டை பேக்
இலவங்கப்பட்டை பேக், பருக்களை போக்குவதுடன், முகத்தில் உள்ள கூடுதல் எண்ணெயையும் அகற்றும். ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பரு உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

கிரீன் டீயின் நன்மைகள்
கிரீன் டீ தயாரித்து, அதைக் கொண்டு உங்கள் முகத்தில் பருக்கள் உள்ள இடத்தை கழுவவும். இது பருக்களை மறையச் செய்யும். அதோடு சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது.

மேலும் படிக்க | தொந்தியையும் கொழுப்பையும் குறைக்கும் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQ

Trending News