இதய தமனிகளில் கொழுப்பு சேராமல் தடுக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

தவறான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை, உங்கள் இதய நரம்புகளில் உள்ள கொழுப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 23, 2024, 05:52 PM IST
  • தமனி நோய், மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம் வெகுவாகக் குறையும்.
  • உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 5 உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
  • நரம்புகளில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றுவதோடு, இரத்த ஓட்டத்தையும் சீராக வைக்கும் உணவுகள்.
இதய தமனிகளில் கொழுப்பு சேராமல் தடுக்கும் ‘சூப்பர்’ உணவுகள்! title=

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், உங்கள் இதயம் மற்றும் நரம்புகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. நரம்புகளில் கொழுப்பும் அழுக்கும் சேர்வதால், தமனி அடைப்புடன் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிக அளவில் அதிகரிக்கிறது. இது மிகவும் தீவிரமான பிரச்சனை. இதனால் ஒரு நபர் இறக்கும் அபாயம் கூட உண்டு. உங்கள் வாழ்க்கை முறை மோசமாக இருந்தால், இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றைச் சாப்பிடுவதன் மூலம், ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பு மற்றும் அழுக்குகள் நீங்குவதுடன், தமனி நோய், மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம் வெகுவாகக் குறையும். உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 5 விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

விதைகள் மற்றும் நட்ஸ்

உங்கள் தினசரி உணவில் விதைகள் மற்றும் உலர் பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். நரம்புகளில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றுவதோடு, இரத்த ஓட்டத்தையும் சீராக வைக்கிறது. இவற்றை சாப்பிடுவதன் மூலம் தமனி நோய் அபாயம் கணிசமாகக் குறைகிறது. இதனுடன் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. உங்கள் இதய தமனிகள் ஆரோக்கியமாக இருக்கவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும், உங்கள் உணவில் பாதாம், வாதுமை பருப்புகள்,  உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். இது தவிர, சியா விதைகள், சூரியகாந்தி மற்றும் ஆளி விதைகள் ஆகியவையும் கட்டாயம் டயட்டில் இருக்கட்டும். இவற்றை சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக (Health Tips) இருக்கும். இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கும் இதயம் மற்றும் நரம்புகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும். இது ஒரு குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது. இதில் உள்ள ஸ்குவாலேன் என்ற கலவை இரத்தத்தில் சேரும் கொலஸ்ட்ராலையும் அழுக்குகளையும் நீக்குகிறது. இந்த எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் அதிக அளவு பாலிபினால்கள் உள்ளன.

மேலும் படிக்க | வெந்தயம் ஆரோக்கியத்தின் களஞ்சியம் தான்... ஆனால் அளவிற்கு மிஞ்சினால் ஆபத்து..!

பச்சை காய்கறிகள்

தினமும் பச்சைக் காய்கறிகளை உட்கொள்வது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது உடலின் நரம்புகள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் பெருமளவு குறைகிறது. உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், உங்கள் உணவில் சாலட் அல்லது சூப்,  அல்லது சமைத்த பச்சைக் காய்கறிகளை உட்கொள்ளத் தொடங்குங்கள். இவற்றில் இருந்து கிடைக்கும் நார்ச்சத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. நரம்புகளில் கொலஸ்ட்ராலையும் அழுக்குகளையும் நீக்கி, தமனிகளில் அடைப்பு ஏற்படும் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது. இவற்றின் மூலம் கிடைக்கும் பொட்டாசியம் நரம்புகள் கடினமாவதைத் தடுக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.

நாவல் பழம் மற்றும் பெர்ரி  பழங்கள்

நாவல் பழம், ப்ளாக்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, அவுரிநெல்லிகள் மற்றும் ராஸ்பெர்ரிகளை வழக்கமாக உட்கொள்வது இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. 100 கிராம் நாவல் பழம் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது. நவல் பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

வெண்ணெய் பழம்

அவகேடோ ஒரு சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இந்த பழம் நிச்சயமாக விலை அதிகம் தான். ஆனால் இது டஜன் கணக்கான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதனால், இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதய நோய்களை போக்குவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த சர்க்கரையையும் கட்டுக்குள் வைத்திருக்கும். 

மேலும் படிக்க | வயசானாலும் இளமை குறையாமல் இருக்க... கொலாஜன் நிறைந்த ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News