ஹார்ட் அட்டாக் வராம இருக்கணும்னா இதை சாப்பிடுங்க!

கொழுப்பு சதை மிகுந்த மீன்களை சாப்பிடுவதால் மாரடைப்பினை தடுக்கலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 30, 2021, 07:47 PM IST
ஹார்ட் அட்டாக் வராம இருக்கணும்னா இதை சாப்பிடுங்க! title=

ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க உடலில் ஆதிக்கம் செலுத்தும் நோய்களைக் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பிட்ட சில உணவு பொருள்கள் இதை சீராக செய்கிறது. என்ன என்று பார்க்கலாம்.

தடிமனான மீன் (Fish), கொழுப்பு சதை நிறைந்த மீன்களை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு (Heart Attack) வராமல் தடுக்கலாம் என லண்டன் அறிஞர் ஒருவரின் ஆய்வு கூறுகிறது. அதிக அழுத்த கொழுப்புப்புரதத்தினை வளர்க்க, பெரிதாக்க இந்த மீன்கள் உதவுவதாக ஆய்வின் முடிவு கூறுகிறது. மேலும் கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் மெட்டபாலிஸம்களை வளர்க்கவும் இந்த மீன்கள் உதவும் என ஆய்வு கூறுகிறது.

இதனுடன், தினமும் 30ml கடுகு எண்ணெய் - லியோனிக் அமிலம் கொண்ட உணவுகளை உண்ணுவதாலும், உடல் உவாதைகள் போன்றவற்றை கலைய இயலும். மேலும் உள்ளங்கத்தில் ஏற்படகூடிய சிதைப்பு தரும் காரணிகளை கலைந்தெறிய உதவும். ஐடிஎல் லிபோப்ரோடைன் (குறைந்த-அடர்த்தி கொழுப்புப்புரதம்) என்பது எல்டிஎல்-ன் முன்னோடி ஆகும், இது மோசமான கொழுப்பு என்று அறியப்படுகிறது. மீன் வயிற்றில் காணப்படும் நீண்ட சங்கிலி போன்ற ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் லிப்போபிரைட்டின் அளவு மற்றும் கலவை ஒரு பயனுள்ள விளைவைக் மனிதற்களுள் காட்டுகிறது.

ALSO READ | HEART ATTACK பெரும்பாலும் குளியலறையில் தான் வருகிறது, காரணம் தெரியுமா?

இந்த இரண்டு மாறுதல்களும் இதய நோய்களுக்கான ஆபத்தை குறைக்கும் என கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பெறும் ஆராய்ச்சிக்கு பிறகு வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் 40 முதல் 72 வயதிற்குட்பட்ட குழுவில் கிட்டத்தட்ட 100 ஃபின்னிஷ் ஆண்கள் மற்றும் பெண்கள் களந்துக்கொண்டனர்.

12 வாரகாலத்திற்கு இவர்களின் மீது ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் நான்கு தோராய குழுக்களாக பிரிக்கப்பட்டனர்: பின்னர் அவர்களுக்கு கடுகு எண்ணெய் குழு, கொழுப்புத் மீன் குழு, லீன் மீன் குழு, மற்றும் கட்டுப்பாட்டு குழு என பெயர் கொடுக்கப்பட்டு, அவர்களுக்கான உணவு முறை மாற்றப்பட்டு ஆய்வு மேற்கொண்டு இந்த முடிவினை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News