அடிக்கடி கை, கால்கள் மரத்து போகின்றதா... அலட்சியம் வேண்டாம்!

உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய் அல்ல. இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம்.  ரத்த ஓட்டம் தடைபடும் போது கை, கால்கள் மரத்துப் போகும். உடலில் எந்த இடங்கள் அடிக்கடி மரத்துப் போகின்றன என்பதை வைத்து, அதன் தாக்கத்தை தெரிந்து கொள்ளலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 1, 2023, 05:53 PM IST
  • மூளை மற்றும் முதுகுத் தண்டுவடம் போன்றவற்றில் ஏதாவது பிரச்னை இருக்கலாம்.
  • ஒரே இடத்தில், ஒரே மாதிரியான நிலையில் பல மணிநேரம் வேலை செய்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
  • நீரிழிவு, தைராய்டு போன்ற பலவித நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
அடிக்கடி கை, கால்கள் மரத்து போகின்றதா... அலட்சியம் வேண்டாம்! title=

உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய் அல்ல. இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம்.  ரத்த ஓட்டம் தடைபடும் போது கை, கால்கள் மரத்துப் போகும். உடலில் எந்த இடங்கள் அடிக்கடி மரத்துப் போகின்றன என்பதை வைத்து, அதன் தாக்கத்தை தெரிந்து கொள்ளலாம். உடலின் ஏதாவது ஒரு பக்கம் மட்டும் மரத்துப் போனால், மூளை மற்றும் முதுகுத் தண்டுவடம் போன்றவற்றில் ஏதாவது பிரச்னை இருக்கலாம் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு அதிக எடை கொண்டவர்களுக்கும் கை, கால்கள் மரத்துப்போகும் வாய்ப்புகள் அதிகம். கை, கால்கள் மரத்துப்போவதை குணப்படுத்துவதற்கு தனியே உடற்பயிற்சிகள் எதுவும் கிடையாது.

கை, கால்கள் அடிக்கடி மரத்துப்போய் அவதிப்படுகிறவர்கள் ஒரே இடத்தில், ஒரே மாதிரியான நிலையில் பல மணிநேரம் வேலை செய்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். உடல் உறுப்புகள் மரத்துப்போவதென்பது நீரிழிவு, தைராய்டு  போன்ற பலவித நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம். வைட்டமின் பி12 குறைபாடு காரணமாகவும் மரத்துப்போதல் உண்டாகலாம். ஒருவருக்கு கை, கால்கள் அடிக்கடி மரத்துப் போவதற்கான காரணங்களை அறிந்து, அதற்கு ஏற்றவாறு நரம்பியல் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.

தைராய்டு ஹார்மோன் குறைபாட்டால் மரத்துப்போதல் ஏற்படலாம். தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தால் கை, கால்கள் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும். உடல் எடை அதிகரித்து  உடலில் அதிகளவு கொழுப்புகள் சேர்ந்தாலும் மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது. அதிக கொழுப்பு, மதுப்பழக்கம், ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, சரியான சிகிச்சைகள் அளித்தால் முழுமையாக குணப்படுத்தி விடலாம். வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் மீன், கறி போன்ற அசைவ உணவு வகைகளை நிறைய சாப்பிட வேண்டும். மருத்துவரை ஆலோசித்து வைட்டமின் பி12 மாத்திரைகள் சாப்பிட வேண்டும். எனினும், வைட்டமின் பி12 குறைபாட்டால் நரம்பு மண்டலம் முழுவதுமாக பாதிப்பு அடைந்திருந்தால், உடல் உறுப்புகள் மரத்துப்போவதை குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | புற்று நோய் முதல் பல நோய்களுக்கு அருமருந்தாகும் கோதுமை புல் ஜூஸ்!

இரு பக்கமும் உடல் மரத்துப்போவதற்கு நீரிழிவு ஒரு முக்கியமான காரணம் என்கின்றனர். நீரிழிவுக்காரர்களும் கை, கால்கள் மரத்துப்போகாமல் இருக்க, ஆயுள் காலம் முழுவதும் தொடர்ந்து மாத்திரைகளை தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும். 

கை, கால்களை தவிர்த்து சிலருக்கு தலையில் ஒரு பக்கம் மட்டும் திடீர் என மரத்து போகும். அப்படி ஏற்பட்டால் சாதாரண நிகழ்வாக எடுத்துகொள்ள கூடாது. ஏனெனில், இது பக்கவாதம் ஏற்பட போவதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே, தலை மரத்து போனால், உடனடியாக நரம்பியல் மருத்துவரை பார்ப்பது நல்லது. எதிர்பாராத நேரத்தில் திடீரென உடலின் ஒரு பக்கம் மரத்துப்போவது பக்கவாதத்தின் அறிகுறி. அவர்கள் உடனடியாக நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கோடை வந்து விட்டது... குழந்தைகளுக்கு ‘இந்த’ உணவுகளை கொடுக்காதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News