படுக்கையறை டிப்ஸ்: தாம்பத்ய சுகத்தை அதிகரிக்க ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்து பாருங்கள்..!

Intimacy Tips: படுக்கையறை சுகத்தை அதிகரிக்க என்றே சில பிரத்யேக உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அவை என்னென்ன? இங்கே பார்க்கலாம்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 15, 2023, 02:29 PM IST
  • உடற்பயிற்சி உடல் எடை இழப்பிற்கு மட்டும் பயன்படாது.
  • படுக்கையறை சுகத்தை அதிகரிக்க சில உடற்பயிற்சிகள் இருக்கின்றன.
  • அவை என்னென்ன தெரியுமா? இதோ லிஸ்ட்.
படுக்கையறை டிப்ஸ்: தாம்பத்ய சுகத்தை அதிகரிக்க ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்து பாருங்கள்..!  title=

உடற்பயிற்சிகள் உடல் எடையை குறைக்க மட்டுமல்ல, உடலுறவு சுகத்தை அதிகரிக்கவும் உதவும். அவை, நாம் தினசரி செய்யும் உடற்பயிற்சியாக இருக்கலாம். அப்படி இல்லை என்றால் அவை நம் உடல் பாகங்களில் கிளிர்ச்சியை ஏற்படுத்தும் வேறு சில உடற்பயிற்சிகளாகவும் இருக்கலாம். ஆனால் இந்த பயிற்சிகளை மேற்கொண்டால் கண்டிப்பாக படுக்கையறையில் சுகத்தை அனுபவிக்கலாம் என மருத்துவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

கார்டியோ வகை உடற்பயிற்சிகள்: 

இதயத்துடிப்பை சீராக வைக்கும் எந்த உடற்பயிற்சியும் கண்டிப்பாக உங்கள் படுக்கையறை வாழ்க்கைக்கும் உதவும் என கூறுகின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக இதயத்துடிப்பை அதிகமாக்கும் கார்டியோ வகை உடற்பயிற்சிகள் சுகத்தை அதிகரிக்க உதவுமாம். கார்டியோ வகை உடற்பயிர்சிகளுள் சைக்கிள் ஓட்டுவது, வேகமாக நடப்பது, ப்ளாங்க் அல்லது புஷ் அப் பயிற்சிகள் மேற்கொள்வது போன்ற பலவகை உடற்பயிற்சிகள் அடங்கும். இவை நமக்கு அதிகம் மூச்சு வாங்க வைக்கும் பயிற்சிகளாக்கும். இது, பெண்கள், ஆண்கள் என பாலின பாகுபாடு இன்றி அனைவருக்கும் பயணளிக்கும்.  இதனால் நம் இரத்த ஓட்டம் சீராகும். குறிப்பாக பிறப்புறுப்பிற்கு செல்லும் இரத்த ஓட்டத்திற்கு இந்த வகை உடற்பயிற்சிகள் உதவுமாம். 

மேலும் படிக்க | வெயிட் லாஸுக்கு 'சூப்பர்' விதை.. 2 வாரத்தில் எடையை குறைக்கலாம்

நீச்சல்: 

நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் 60 வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களை வைத்து ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில், தங்களை விட 20 வயது இளமையானோரை விட இவர்களது தாம்பத்ய உறவு வலுவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீச்சல், நம் உடலில் வலிமையை அதிகரிக்கவும் மன அழுத்தத்தை நீக்கவும் உதவுகிறது. இது, உடலில் உள்ள கொழுப்பையும் குறைப்பதால் அடிவயிற்றில் சதை சேராமல் தடுக்கும். சிலருக்கு உடல் பருமன் இருப்பதால் விரைப்புத்தன்மை ஏற்படாமல் இருக்கும். அதை தடுக்க இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். 

பிளாங்க்: 

அடிவயிற்று தசைகளை குறைக்கவும், பிறப்புறுப்பு பகுதிக்கு நல்ல இரத்த ஓட்டத்தை கொடுக்கவும் பிளாங்க் வகை உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த வகையான உடற்பயிற்சிகள் பின்புறம், தொடைப்பகுதி மற்றும் கை ஆகியவற்றிற்கு அதிகம் வேலை கொடுக்கும், இதை தினமும் 30-60 விநாடிகள் வரை செய்யலாம். இந்த பயிற்சி உங்கள் பார்ட்னருடன் நீண்ட நேரம் உடலுறவு செய்ய வழி வகுக்கும் என சில மருத்துவ நிபுணகள் கூறுகின்றனர். 

இடுப்பு பகுதிக்கான உடற்பயிற்சி: 

இடுப்பு பகுதிக்கென சில உடற்பயிற்சிகள் இருக்கின்றன. இவற்றை செய்தால் கண்டிப்பாக உடலுறவு சுகத்தை அதிகரிக்கலாம். இதற்கு Pelvic Thrust என்று பெயர். இது ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம் பயணளிக்கும். அதனால் அவர்களே இந்த உடற்பயிற்சியை அதிகம் செய்ய வேண்டும். இது, உங்கள் செக்ஸ் ஹார்மோன்களை உந்த செய்வதுடன் லேபிய எனப்படும் பிறப்புறுப்பில் உள்ள உதடுகளையும் விரிவடைய செய்வதாக சில மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால், உடலுறவு வைத்துக்கொள்ளும் நாளில் இந்த உடற்பயிற்சியினை மேற்கொள்ளலாம். 

ஒன்றாகவும் உடற்பயிற்சி செய்யலாம்:

தனியாக உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்ல விஷயம். ஆனால், உங்கள் படுக்கையறை வாழ்வை நன்றாக வைத்திருக்க விரும்பினால், வாரத்தில் 2-3 நாட்கள் உங்கள் பார்ட்னருடன் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இது, உங்களது நீண்ட மகிழ்ச்சியான உடலுறவு ஹார்மோன்களை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதனால் உங்கள் பார்ட்னருடன் நடைப்பயிற்சி மேற்கொள்வது, கார்டியோ வகை பயிற்சிகளை மேற்கொள்வது போன்ற விஷயங்களை நீங்கள் மேற்கொள்ளலாம். இது, படுக்கையறையில் இருவரது சுகத்தையும் அதிகரிக்க உதவும். ஒன்றாக உடற்பயிற்சி செய்தால், மனம்-உடல் அனைத்தும் ஒத்துப்போகும் என சில மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். 

மேலும் படிக்க | பேருந்தில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கண்டக்டர்... வீடியோ எடுத்த பயணிகளால் அதிர்ச்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News