ஆரோக்கியத்தின் பொக்கிஷம் முந்திரிப்பால்! ஒரு கிளாஸ் குடிச்சா நோய்க்கு டாட்டா சொல்லலாம்

Amazing benefits of cashew milk: ஆரோக்கியத்தின் பொக்கிஷம் முந்திரி பால்... தினசரி ஒரு கிளாஸ் குடித்துவந்தால் பல பிரச்சனைகள் தீரும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 2, 2023, 08:23 AM IST
  • மாட்டுப் பாலுக்கு மாற்று முந்திரிப் பால்!
  • சத்துக்களும் அதிகம் செய்வதும் சுலபம்
  • முந்திரிப்பாலில் என்ன இல்லை?
ஆரோக்கியத்தின் பொக்கிஷம் முந்திரிப்பால்! ஒரு கிளாஸ் குடிச்சா நோய்க்கு டாட்டா சொல்லலாம் title=

முந்திரி அனைவராலும் விரும்பி உண்ணக்கூடியது. உலர் பழம் மற்றும் கொட்டைகள் என்று சொன்னாலே, முதலில் நினைவுக்கு வருவது முந்திரி திராட்சை தான். இன்று, பாதாம், பிஸ்தா, அக்ரூட், அத்திப்பழம் என பல உலர் பழங்கள் பிரபலமானாலும், தொன்று தொட்டு புழக்கத்தில் இருந்து வருவது முந்திரி., இதுநேரடியாக உண்ணப்படுகிறது, பல வகையான இனிப்புகள் மற்றும் சமையல்களில் சுவைக்காகவும், சத்துக்காகவும், அலங்கரிக்கவும் முந்திரி பயன்படுத்தப்படுகிறது.

ஆரோக்கியமான உணவுகளில் முந்திரி இல்லாமல் இருக்காது. முந்திரியை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்தும் சாப்பிடலாம். ஊறவைத்த முந்திரி எளிதில் ஜீரணமாகும். இதனால் வயிற்றுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. முந்திரியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது.

முந்திரியை அப்படியே சாப்பிடலாம்ம், வறுத்து தின்பண்டமாக உண்ணலாம், உணவில் சேர்த்து சமைத்து சாப்பிடலாம், முந்திரி பருப்பை ஊற வைத்தும் உண்ணலாம். ஆனால் முந்திரியை பாலாக மாற்றி அருந்துவது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

நீங்கள் எப்போதாவது முந்திரி பால் சாப்பிட்டிருக்கிறீர்களா? இதில் உள்ள பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். முந்திரிப்பால் எந்தெந்த பிரச்சனைகளை நீக்கும் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | சைவ உணவை சாப்பிட்டே ஒல்லியாகலாம் தெரியுமா? ஆனா இந்த உணவுகளை மட்டும் சாப்பிடனும்

1. எடை இழப்பு
முந்திரி பாலில் அனாகார்டிக் அமிலம் என்ற உயிர் கலவை உள்ளது, இது உடலில் கொழுப்பு சேர அனுமதிக்காது. மாட்டுப் பாலுடன் ஒப்பிடும் போது, ​​இதில் உள்ள கலோரிகளின் அளவு மிகவும் குறைவு, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பாலை அருந்தலாம்.

2. புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு
முந்திரியில் உள்ள அனாகார்டிக் அமிலம், கார்டானால்கள், போரான் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலவைகள் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது, இது இந்த ஆபத்தான நோயின் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

3. இரத்த விருத்தி
உடலில் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் பெரும்பாலும் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். முந்திரி பாலை உட்கொண்டால், இரத்தத்தில் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கத் தொடங்கும், நீங்கள் இரும்புச்சத்து மாத்திரையை எடுக்க வேண்டிய அவசியமில்லை.

4. எலும்புகளின் வலிமை
முந்திரி பாலில் கால்சியம், வைட்டமின் டி மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகிறது, இது நமது எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் ஆக்குகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால் முந்திரிப் பால் குடிப்பது நல்லது.  

மேலும் படிக்க | Weight Loss: வெயிட் குறைய வெந்தயத்தை இப்படி சாப்பிட்டா, சீக்கிரமா எஃபக்ட் கிடைக்கும்!

5. கொலஸ்ட்ரால் குறைப்பு
மாட்டுப் பாலில் கொழுப்பு உள்ளது, அதை அதிகமாக குடித்தால் நாளங்களில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும், மாறாக முந்திரி பாலை குடித்தால் எல்டிஎல் கொழுப்பின் அளவு பெருமளவு குறையும்.

முந்திரி பால் தயாரிப்பது எப்படி?
200 கிராம் முந்திரியை ஒரு கிண்ணத்தில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
காலையில்  ஊறவைத்த முந்திரியில் இருக்கும் தண்ணீரை வடித்து விடவும் 
மிக்ஸியில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை நன்கு அரைக்கவும்
அரைத்த விழுதை எண்ணெய் இல்லாமல் ஒரு கடாயில் வறுக்கவும், மீண்டும் இரவு முழுவதும் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
அதன் பிறகு, இந்த பாலை காற்று புகாத கண்ணாடி கொள்கலனில் சரியாக சேமிக்கவும்.
சர்க்கரை நோயாளிகள் இந்த பாலை சர்க்கரை சேர்க்காமல் உட்கொள்ள வேண்டும்

மேலும் படிக்க | உலர் பழங்களின் சத்து முழுமையாக கிடைக்கணுமா... ‘இப்படி’ சாப்பிடுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News