பாடாய் படுத்தும் மூட்டு வலிக்கு முடிவு கட்டும் ‘சூப்பர்’ மூலிகைகள்!

முன்பெல்லாம் வயது அதிகரிப்பதன் காரணமாக, மூட்டு மற்றும் முழங்கால் வலியால் அடிக்கடி அவதிப்படத் தொடங்குவார்கள். ஆனால் இப்போதெல்லாம்,  இளைஞர்களும் கூட,  பாதிக்கப்படுகின்றனர். நீங்களும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்தால், கண்டிப்பாக இந்த ஆயுர்வேத வைத்தியம் பற்றி தெரிந்து கொள்ள்ளுங்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 13, 2023, 07:43 PM IST
  • மூட்டு வலி உங்கள் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும்.
  • எலும்புகள் வலுவடைவதோடு, மூட்டு வலியிலிருந்தும் விடுபடலாம்.
  • இளைஞர்களும் கூட, மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர்.
பாடாய் படுத்தும் மூட்டு வலிக்கு முடிவு கட்டும் ‘சூப்பர்’ மூலிகைகள்! title=

முன்பெல்லாம் வயது அதிகரிப்பதன் காரணமாக, மூட்டு மற்றும் முழங்கால் வலியால் அடிக்கடி அவதிப்படத் தொடங்குவார்கள். ஆனால் இப்போதெல்லாம்,  இளைஞர்களும் கூட,  பாதிக்கப்படுகின்றனர். அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் அவதிப்படுபவர்களும் மூட்டு வலி பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது வலி, வீக்கம், விறைப்பு மற்றும் மூட்டுகளை நகர்த்துவதில் சிரமம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழ்நிலையில், பாடாய் படுத்தும் மூட்டு வலியிலிருந்து விடுபட பல நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். ஆனாலும் இந்தப் பிரச்சனை அவ்வளவு சுலபமாக தீர்வதில்லை. இந்நிலையில், இன்று நாம் சில ஆயுர்வேத வைத்தியங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். இது இந்த நோய்க்கு ஒரு சஞ்சீவியாக செயல்படுகிறது. நீங்களும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்தால், கண்டிப்பாக இந்த ஆயுர்வேத வைத்தியம் பற்றி தெரிந்து கொள்ள்ளுங்கள்.

குங்குலு

குங்குலு மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை. உடலின் பல பிரச்சனைகளை நீக்க ஆயுர்வேதத்தில் குங்குலு பயன்படுத்தப்படுகிறது. மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற இதைப் பயன்படுத்தலாம். அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதில் காணப்படுகின்றன. இது வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற, நீங்கள் குங்குலுவை தண்ணீரில் கலந்து  குடிக்கலாம்.  

சதாவரி

சதாவரி வீக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளை அகற்ற பயன்படுகிறது.  இந்த மூலிகை தண்ணீர் விட்டான் கிழங்கு என்றும் கூறப்படுகிறது. இது கீல்வாதம், முடக்கு வாதம் மற்றும் பிற மூட்டு பிரச்சனைகளுக்கு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்கள் உடலில் என்ன நடக்கும்?

அஸ்வகந்தா

அஸ்வகந்தா தசை பலவீனத்தை அகற்ற உதவுகிறது மற்றும் மூட்டு வலிக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுமட்டுமின்றி, இந்த செடியின் வேர்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மற்றும் தூள் வலி நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது.

நொச்சி இலை 

நொச்சி இலை யின் வேர்கள் மற்றும் இலைகள் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பல ஆண்டுகளாக முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆயுர்வேதத்தில் சக்தி வாய்ந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் ஆர்கானிக் கொழுப்பு அமிலங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. இது வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. தவிர, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. மூட்டு வலிக்கான ஆயுர்வேத சிகிச்சைக்கு நொச்சி இலை எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

ஓமம்

ஒவ்வொரு இந்திய வீட்டின் சமையலறையிலும் ஓமத்தை எளிதாகக் காணலாம். ஓமம் செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவருக்கு தெரியும். ஆனால் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிப்பதில் ஓமம் மிகவும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரியாது. இதில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.  இது மூட்டு வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. ஓமத்தை உட்கொள்வதைத் தவிர, நீங்கள் ஓமம் போட்டு காய்ச்சிய எண்ணெயைத் தயாரித்து மூட்டுகளில் தடவலாம்.

இஞ்சி

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிப்பதில் இஞ்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதில் காணப்படுகின்றன. இது எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இதற்கு இஞ்சி டீ செய்து குடிக்கலாம் அல்லது இஞ்சி போட்டு காய்ச்சிய எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஈஸியா உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News