அஸ்வகந்தாவின் ஆரோக்கிய நன்மைகள்: ஆண்களுக்கோ இது ஒரு ஆபத்பாந்தவன்

Ashwagandha Benefits: அஸ்வகந்தா பல நன்மைகளைக் கொண்டுள்ளது. உடல் பலவீனத்தை நீக்குவது முதல் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பது வரை, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர அதன் மற்ற நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 20, 2022, 05:01 PM IST
  • அஸ்வகந்தா வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
  • விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் நன்மை பயக்கும்.
  • உடல் பலவீனத்தை நீக்க உதவுகிறது.
அஸ்வகந்தாவின் ஆரோக்கிய நன்மைகள்: ஆண்களுக்கோ இது ஒரு ஆபத்பாந்தவன் title=

அஸ்வகந்தா வழங்கும் ஆரோக்கிய நன்மைகள்: அஸ்வகந்தா நமது உடலுக்கு அதிகமான நன்மைகளை அளிக்கும். இது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். இது உடலில் ஏற்படும் பல வகையான பிரச்சனைகளை சமாளிக்க பயன்படுகிறது. 

அஸ்வகந்தாவின் பலன்கள் ஏராளம். இதனை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பல நோய்கள் நீங்கும். இது தவிர, ஆண்களின் மலட்டுத்தன்மை பிரச்சனையை நீக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும். அதன் நுகர்வு ஆண்களில் ஹார்மோன்களை அதிகரிக்க உதவுகிறது. அஸ்வகந்தா குறிப்பாக ஆண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இவற்றைத் தவிர அஸ்வகந்தாவின் மேலும் சில பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் நன்மை பயக்கும்

விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க அஸ்வகந்தா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மாறிவரும் வாழ்க்கை முறையால், பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைபாடு ஏற்பட்டு, குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருகிறது. ஆகையால் அத்தகைய ஆண்களின் பிரச்சனைகளை நீக்குவதில் அஸ்வகந்தா பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | தினமும் ஒரு கப் வேப்பஞ்சாறு குடிச்சா போதும்: எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும் 

உடல் பலவீனத்தை நீக்க உதவுகிறது

அஸ்வகந்தாவில் பல வித ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடல் பலவீனத்தை நீக்க உதவுகிறது. இதன் நுகர்வு ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இருப்பினும், ஒரு மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனையின்றி அதைப் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த நன்மைகளும் கிடைக்கின்றன

- அஸ்வகந்தாவை உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அதாவது சர்க்கரை நோயாளிகளும் இதை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

- அதிக மன அழுத்தம் உள்ளவர்கள் அஸ்வகந்தாவை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் மன அழுத்தத்தையும் குறைக்கும்.

- கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது மிகவும் நன்மை பயக்கும். கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருந்தால், மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறையும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | Hair loss Treatment: முடி உதிர்விலிருந்து விடுபட ஸ்பெஷல் மூலிகை தண்ணீர் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News