Anti Aging Facepack: இளமை இதோ இதோ என பாட வைக்கும் சிம்பிள் பேஸ்பேக்

என்றென்றும் இளமையாகவும் அழகாகவும் இருக்க பலர் பலவிதமான கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் உண்மையாக பயனளிக்கின்றதா என்றால் ஏமாற்றமே எஞ்சுகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 12, 2022, 01:45 PM IST
  • இளமையான தோற்றத்திற்கு டிப்ஸ்
  • மென்மையான சருமத்திற்கு பேஸ்பேக்
  • இளமைக்கும் சருமத்திற்கும் உள்ள தொடர்ப்பு
Anti Aging Facepack: இளமை இதோ இதோ என பாட வைக்கும் சிம்பிள் பேஸ்பேக் title=

Anti Aging Facepack: என்றென்றும் இளமையாகவும் அழகாகவும் இருக்க பலர் பலவிதமான கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் உண்மையாக பயனளிக்கின்றதா என்றால் ஏமாற்றமே எஞ்சுகிறது.

ஆனால், எத்தனை முறை ஏய்க்கப்பட்டாலும், இளமையான தோற்றம் பெற வேண்டும் என்ற ஆசை மீண்டும் மீண்டும் எழுவதை தவிர்க்க முடிவதில்லை.  

நவீன வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், தூக்கமின்மை, மனஅழுத்தம் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்கள் ஆரோக்கியத்தில் மட்டுமின்றி முக அழகிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் சிறு வயதிலேயே சருமத்தில் சுருக்கங்கள், கறைகள் ஏற்படுவது என்பது பலருக்கும் பிரச்சனையாக இருக்கிறது.

இருப்பினும், உங்களை எப்போதும் இளமையாக வைத்திருக்கும், வீட்டில் தயாரிக்கக்கூடிய சுலபமான ஃபேஸ் பேக் இது.

மேலும் படிக்க | மென்மையான சருமம் வேணுமா, இத டிரை பண்ணுங்க

40 வயதான பிறகும், இளமையின் துள்ளளும் துடிப்பும் சுறுசுறுப்பும் உடலில் இருந்தாலும், அது முகத்தில் பிரதிபலிக்க இந்த சிம்பிள் பேஸ்பேக் உதவும்.

இதில் பயன்படுத்தப்படும் வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டிங் ஏஜென்டாக செயல்படுகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.

ஃபேஸ்பேக் செய்வது இப்படித்தான்...  
நன்கு பழுத்த வாழைப்பழத்தை பேஸ்ட் செய்து கொள்ளவும். தேவையான அளவு முட்டையின் வெள்ளைக்கரு, ஓட்ஸ், தேன் மற்றும் பன்னீர் சேர்க்கவும். 
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்துக் கொண்டு முகத்தில் தடவவும். 

facepack

முகத்தை நன்கு கழுவிய பின்பு இந்த பேஸ்பேக்கை பயன்படுத்த வேண்டும். 

வாரத்திற்கு ஒருமுறை இரவில் படுக்கும் முன் தடவி, காலையில் கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் 2-3 மாதங்களில் ஒளிரும் சருமம் கிடைக்கும்.

இந்த ஃபேஸ் பேக்கில் உள்ள வைட்டமின் சி, ஈ, சருமத்திற்குப் பாதுகாப்பு அளிக்கிறது. வாழைப்பழம் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. ஓட்ஸ் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, சருமத்தை சுத்தப்படுத்துகிறது. இதன் விளைவாக, தோல் இயற்கையான பளபளப்புடன் இளமையாக இருக்கும்.

மேலும் படிக்க | சிறுநீரக நோய் உங்கள் கண்களை பாதிக்கலாம், எப்படி தடுப்பது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News