NPS: ஓய்வுக்கு பிறகும் ஒய்யாரமா வாழலாம்.... இதன் அட்டகாசமான நன்மைகளின் பட்டியல் இதோ

National Pension System: இதில் பங்களிப்பதால் பல வகையான வரிச் சலுகைகள் கிடைக்கின்றன. இதன் மூலம் உங்கள் எதிர்காலமும் பாதுகாப்பாகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 11, 2024, 03:38 PM IST
  • குறைந்த கட்டணம், அதிக வருமானம்.
  • வரியில் வலுவான விலக்கு கிடைக்கும்.
  • அதிக நெகிழ்வுத்தன்மை உள்ளது.
NPS: ஓய்வுக்கு பிறகும் ஒய்யாரமா வாழலாம்.... இதன் அட்டகாசமான நன்மைகளின் பட்டியல் இதோ title=

National Pension System: NPS அதாவது தேசிய ஓய்வூதிய அமைப்பு ஓய்வூதியத்திற்கான சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. இதில் பங்களிப்பதால் பல வகையான வரிச் சலுகைகள் கிடைக்கின்றன. இதன் மூலம் உங்கள் எதிர்காலமும் பாதுகாப்பாகிறது. ஓய்வூதிய திட்டமிடலுக்கு என்பிஎஸ் மிகச் சிறந்த திட்டமாகும். இதன் மூலம், ஓய்வுக்குப் பிறகான காலத்திற்கு ஒரு பெரிய நிதி உருவாக்கப்படுகின்றது. NPS -ஐ தேர்வு செய்வதால் கிடைக்கும் 4 பெரிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 குறைந்த கட்டணம், அதிக வருமானம்

மற்ற நிதி மேலாண்மை சேவைகளுடன் ஒப்பிடும்போது NPS -இன் கட்டணம் மிகக் குறைவாக உள்ளது. இதில், மியூச்சுவல் ஃபண்டுகளை விட முதலீட்டாளர்கள் குறைவான கட்டணத்தை செலுத்த வேண்டும். மியூசுவல் ஃபண்டுகளில் ஆண்டுக்கு 2-2.5 சதவிகிதம் செலுத்த வேண்டும். ஒரு வருடத்தில் 2% கட்டணம் என்பது கேட்பதற்கு குறைவாக இருக்கலாம். ஆனால், நீண்ட காலத்தில் இதை கணக்கிட்டால், காம்பவுண்டிங் காரணமாக, அது ஒரு பெரிய தொகையாக மாறும். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் குறைவாக இருந்தால், நீங்கள் பெறும் வருமானம் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். NPSக்கான கட்டணங்கள் இதை விட குறைவாக உள்ளன. 

2 வரியில் வலுவான விலக்கு கிடைக்கும்

NPS ஆனது EEE பிரிவில் வருகிறது. அதாவது, அதில் முதலீடு செய்யப்படும் பணம், அதற்குக் கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுக்குப் பிறகு கிடைக்கும் தொகை ஆகியவற்றுக்கு வரி விலக்கு (Tax Exemption) கிடைக்கும். NPS முதலீடு அதாவது NPS இல் முதலீடு செய்வது பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குக்கான பலனை அளிக்கிறது. இதன் வரம்பு ரூ 1.5 லட்சம் ஆகும்.

80CCD (1B) பிரிவின் கீழ் கூடுதல் வரிச் சலுகையும் கிடைக்கும். இந்த பிரிவின் கீழ் ரூ.50 ஆயிரம் வரையிலான முதலீடுகளுக்கு வரிவிலக்கு உண்டு. இதன் மூலம் மொத்தம் ரூ.2 லட்சம் வரிச் சலுகை கிடைக்கும்.

இது மட்டுமின்றி, 80CCD(2) இன் கீழும் NPS -இல் வரிச் சலுகை கிடைக்கும். இந்த பிரிவின் கீழ், ஒரு முதலாளி / நிறுவனம் தனது பணியாளரின் என்பிஎஸ் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்தால், அந்த ஊழியருக்கு வரி விலக்கு கிடைக்கும். இந்த சலுகை தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதமும், அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதமும் ஆகும்.

மேலும் படிக்க | வங்கிக்கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் பிரச்சனையா? இதற்கான RBI விதி என்ன தெரியுமா?

3 அதிக நெகிழ்வுத்தன்மை உள்ளது

NPS இன் சிறந்த விஷயம் என்னவென்றால், அது மிகவும் நெகிழ்வானது. இதில், முதலீட்டாளர்கள் தங்கள் அசெட் லொகேஷனை ஒரு வருடத்தில் நான்கு முறை வரை மாற்றிக்கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில், ஒரு ஃபண்டிலிருந்து இன்னொரு ஃபண்டிற்கு மாறுவது சேல், அதாவது விற்பனையாகக் கருதப்படுகிறது. இதில் கிடைக்கும் லாபம் வரிக்கு உட்பட்டது. மறுபுறம், NPS இல் அசெட் கிளாஸ் மாற்றுவதற்கோ அல்லது நிதி மேலாளரை மாற்றுவதற்கோ வரி விதிக்கப்படுவதில்லை. இது மட்டுமின்றி, NPS இன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், உங்கள் பணத்தில் எவ்வளவு பகுதியை முதலீடு செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். பங்குச் சந்தையில் எவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டும் மற்றும் பாதுகாப்பான திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.

4 விதிகளில் மாற்றம் காரணமாக அதிக பணப்புழக்கம் 

என்.பி.எஸ்-ல் முதலீடு செய்வதால் ஓய்வு பெறும் வரை உங்கள் தொகை முழுவதுமாக லாக் செய்யப்பட்டிருக்கும் என்று அர்த்தமல்ல. சில சிறப்பு சந்தர்ப்பங்கள் அல்லது தேவைகளின் போது நீங்கள் PF இல் இருந்து ஒரு பகுதி அளவு தொகையை எடுப்பது போலவே, NPS -இலும் பணத்தை எடுக்கலாம். இருப்பினும், இதற்கு நீங்கள் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு என்பிஎஸ் சந்தாதாரராக (NPS Subscriber) இருந்திருக்க வேண்டும். அதே நேரத்தில், உங்கள் வாழ்நாள் முழுவதும் 3 முறை மட்டுமே NPS கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும். பணம் எடுப்பதற்கான வரம்பு 25 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஏடிஎம் வச்சிருக்கீங்களா? அப்போ 10 லட்சம் ரூபாய் கிளைம் செய்யலாம்! தெரிந்து கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News