மாதவிடாயின் போது பெண்களுக்கு விடுப்பு... ஸ்மிருதி இரானி வெளியிட்ட முக்கிய தகவல்!

நாட்டில் மாதவிடாய் தொடபாக சுகாதாரக் கொள்கை குறித்து மேலவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (RJD) உறுப்பினர் மனோஜ் குமார் ஜா கேட்ட கேள்விக்கு ராஜ்யசபாவில் பதிலளித்துப் பேசினார் இரானி.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 14, 2023, 02:29 PM IST
  • பணியிடங்களில் மாதவிடாய் உள்ளவர்களுக்கு விடுப்பு வழங்குவதற்கான வரைவு சுகாதாரக் கொள்கையை அரசாங்கம் வெளியிட்டது.
  • சானிட்டரி நாப்கின்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சில பொருட்களால் ஏற்படும் அபாயங்கள்.
  • இளம்பெண்கள் மத்தியில் மாதவிடாய் சுகாதாரத்தை ஊக்குவிக்கும் பல முயற்சிகளை அரசாங்கம் கொண்டுள்ளது.
மாதவிடாயின் போது பெண்களுக்கு விடுப்பு... ஸ்மிருதி இரானி வெளியிட்ட முக்கிய தகவல்! title=

நாட்டில் மாதவிடாய் சுகாதாரக் கொள்கை குறித்து மேலவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உறுப்பினர் மனோஜ் குமார் ஜா கேட்ட கேள்விக்கு ராஜ்யசபாவில் பதிலளித்துப் பேசினார் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு (WCD) அமைச்சர் ஸ்மிருதி இரானி. அப்போது அவர் பேசுகையில், "மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி  என்பது ஒரு குறைபாடு அல்ல. இது பெண்களின் வாழ்க்கைப் பயணத்தின் இயல்பான பகுதியாகும். மாதவிடாய் இல்லாத ஒருவருக்கு மாதவிடாய் குறித்து ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் உள்ளது என்பதற்காக பெண்களுக்கு சம வாய்ப்புகள் மறுக்கப்படும் பிரச்சினைகளை நாம் முன்மொழியக்கூடாது. ” என்றாள்.

கடந்த வாரம், காங்கிரஸ் எம்பி சசி தரூர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இரானி, "அனைத்து பணியிடங்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை" என்று மக்களவையில் தெரிவித்திருந்தார். புதனன்று மேல்சபையில் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில், இரானி, “ குறைந்த அளவிலான பெண்கள்/ சிறுமிகள் கடுமையான டிஸ்மெனோரியா அல்லது அதுபோன்ற பிரச்சனையினால் பாதிக்கப்படுகின்றனர்; இந்த நிகழ்வுகளில் பெரும்பாலானவை சிகிச்சை மற்றும் மருந்துகளால் நிர்வகிக்கப்படுகின்றன."

"இருப்பினும், மாதவிடாய் பிரச்சினை என்பது பெண்களை விலக்கி வைத்து, அவரது சுதந்திரம் மற்றும் சாதாரண நடவடிக்கைகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் சமூகத் தடைகளுடன் தொடர்புடையது. மேலும் பல நேரங்களில் அவர்கள் துன்புறுத்தலுக்கும் சமூக விலக்கலுக்கும் வழிவகுக்கிறது. . ஒரு பெண்/மாதவிடாய் இருக்கும் நபர், முதல் முறையாக மாதவிடாய் சுழற்சியை (Menstruation Issues) எதிர்கொள்ளும் போது, உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி அறியாதபோது, அது இன்னும் திவீரம் அடைகிறது, ”என்று அவர் தனது பதிலில் கூறினார்.

குறிப்பாக, அக்டோபர் மாதம், பணியிடங்களில் மாதவிடாய் உள்ளவர்களுக்கு விடுப்பு வழங்குவதற்கான வரைவு மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை அரசாங்கம் வெளியிட்டது. "கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்கள் பெண்களை ஊக்குவிக்கவும், பணியாளர்களின் பல்வேறு தேவைகளை அங்கீகரிக்கவும் மற்றும் அனைத்து தனிநபர்களின் நல்வாழ்வு மற்றும் உற்பத்தித்திறனை ஆதரிக்கும் சூழலை வளர்க்கவும் பெண்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கூறப்பட்டது. மாதவிடாயின் போது தனிநபர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு இடமளிப்பதற்கு வீட்டிலிருந்து வேலை அல்லது விடுப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொளவதோடு, பெண்கள் விலக்கி வைப்பது தடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவது முக்கியம்," என்று வரைவு கூறுகிறது.

மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு ஷாக்: பழைய ஓய்வூதியம் பாரத்தை அதிகரிக்கும்... எச்சரித்த RBI

சானிட்டரி நாப்கின்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சில பொருட்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்து ஜா மேலும் கவலைகளை எழுப்பி, இந்த தயாரிப்புகளை நிர்வகிக்கும் விதிமுறைகள் குறித்து விசாரித்தார். அதற்குப் பதிலளித்த இரானி, ஜன் ஔஷதி கேந்திரா மூலம் மலிவு விலையில் சானிட்டரி நாப்கின்கள் கிடைப்பதை எடுத்துக்காட்டி, “10,000 ஜன் ஔஷதி கேந்திரா மூலம், 1 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்கள் கிடைக்கின்றன, மேலும் எந்த புகாரும் இல்லை” என்றார்.

சுகாதாரப் பொருட்களை அப்புறப்படுத்துவது குறித்து, இரானி கூறுகையில், “2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பதவியேற்ற  பிறகு, ஜல் சக்தி அமைச்சகம் சுகாதாரப் பொருட்களின் மேலாண்மைக்கான தேசிய மற்றும் மாநில நெறிமுறைகளுடன் இதற்கான முயற்சியை தொடங்கியது” என்றார். அவரது எழுத்துப்பூர்வ பதிலில், மாதவிடாய் சுகாதாரத்திற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை அமைச்சகம் வகுத்தது; 10-19 வயதுடைய இளம்பெண்கள் மத்தியில் மாதவிடாய் சுகாதாரத்தை ஊக்குவிக்கும் பல முயற்சிகளை அரசாங்கம் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

"தேசிய சுகாதார இயக்கத்தின் ஆதரவுடன் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் மாநிலத் திட்ட அமலாக்கத் திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. கூடுதலாக, ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம், கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த தேசிய வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது," என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க | UPI Autopay : ஆட்டோ பேமெண்ட் வரம்பு அதிகரிப்பு... எவ்வளவுன்னு தெரியுமா? இதோ முழு விவரம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News