EPF Withdrawal Rules: பிஎஃப் தொகைக்கு வரி கட்ட வேண்டுமா? முக்கிய விதி.. தெரிந்துகொள்ளுங்கள்

EPFO Update: பிஎஃப் நிதியில் இருந்து பணத்தை எடுக்க, சில நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். ஓய்வுக்குப் பிறகுதான் முழுத் தொகையும் எடுக்க முடியும்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 25, 2023, 02:22 PM IST
  • பிஎஃப் -இலிருந்து பணம் எடுப்பதற்கு எப்போது வரி விதிக்கப்படுகிறது?
  • முழுத் தொகையையும் எப்போது எடுக்க முடியும்?
  • எப்போது TDS விதிக்கப்படுவதில்லை?
EPF Withdrawal Rules: பிஎஃப் தொகைக்கு வரி கட்ட வேண்டுமா? முக்கிய விதி.. தெரிந்துகொள்ளுங்கள் title=

EPFO ​​Update: இபிஎஃப்ஓ சந்தாதாரர்களாக இருக்கும் அனைவரிடமும் பிஎஃப் கணக்கு இருக்கும். ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அம்சமாகும். இந்தியாவில் ஓய்வூதியத்திற்காக சேமிப்பதில் முக்கிய வழிகளில் ஒன்று "பணியாளர் வருங்கால வைப்பு நிதி' (EPF) ஆகும். அரசாங்கச் சேமிப்புத் திட்டமான இது, ஊழியர்கள் தங்கள் பணி ஆண்டுகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தவும், வசதியான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ஓய்வூதிய திட்டங்களை நிர்வகிக்கிறது. 

எதிர்காலத்திற்காக முதலீடு செய்யப்படும் திட்டங்களில் பணியாளர் ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம் மிக முக்கியமான மற்றும் பிரபலமான திட்டமாகும். இதனால் அலுவலக பணிகளில் உள்ள நபர்கள் ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுகின்றனர். பெரும்பாலும் பணி ஓய்விற்கு பிறகு பிஎஃப் கணக்கிலிருந்து மொத்த தொகையும் எடுக்கபப்டுகின்றது. எனினும் சில அவசர தேவைகள் ஏற்பட்டால், ஓய்வு பெறுவதற்கு முன்னரும் இந்த தொகையை எடுக்கலாம். இதற்கான சில விதிகளும் உள்ளன. 

பிஎஃப் -இலிருந்து பணம் எடுப்பதற்கு எப்போது வரி விதிக்கப்படுகிறது?

பிஎஃப் நிதியில் இருந்து பணத்தை எடுக்க, சில நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். ஓய்வுக்குப் பிறகுதான் முழுத் தொகையும் எடுக்க முடியும். ஆனால் சிலருக்கு அவசர தேவை ஏற்பட்டால் ஓய்வு பெறுவதற்கு முன்னும் அதை எடுக்கலாம். இதற்கு அவர்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும். வேலையை விட்டு வெளியேறும் முன் 90 சதவீத தொகையை எடுக்கலாம்.

முழுத் தொகையையும் எப்போது எடுக்க முடியும்?

ஒரு நபர் வேலையை விட்டு ஒரு மாத காலம் வேலை இல்லாமல் இருந்தால் 75 சதவீத பிஎஃப் நிதியையும், இரண்டு மாத காலம் வேலையில்லாமல் இருந்தால் முழு பிஎஃப் தொகையையும் திரும்பப் பெறலாம்.

மேலும் படிக்க | மாற்று டெபிட் கார்டு வழங்க வங்கி வசூலிக்கும் கட்டண விபரம்!

ஆவணங்கள் தேவை

பிஎஃப் நிதியில் இருந்து பணம் எடுப்பதற்கு முன் தேவையான சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் முதலில் உங்கள் அலுவலகத்தில் உள்ள பிஎஃப் அதிகாரியால் சரி பார்க்கபப்டும்.பின்னர் அவை இபிஎஃப் (EPFO) அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு, பிஎஃப் -இலிருந்து பணத்தை எடுக்கலாம். 

எப்போது TDS விதிக்கப்படுவதில்லை?

இதில் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு கோரலாம். ஐந்தாண்டுகளுக்கு முன் பிஎஃப் கணக்கிலிருந்து (PF Account) பணம் எடுக்க டிடிஎஸ் விதிக்கப்படுகிறது. ஐந்து வருடங்கள் பணியாற்றிய பிறகு பிஎஃப் -இலிருந்து பணம் எடுக்கப்பட்டால், அதற்கு வரி கிடையாது.

இபிஎஃப் (EPF) விதிகளின்படி, ஊழியர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை திரும்ப எடுப்பதற்கு முன் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், நேரத்திற்கு முன்னரே தொகையை எடுக்க வேண்டுமானால் (premature withdrawal), அதற்கும் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

- EPFO ஆல் 55 வயதாக நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதிய வயதை அடைந்தவுடன் மட்டுமே முழு PF தொகையையும் திரும்ப எடுக்க முடியும்.

- ஒரு ஊழியர் ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு பிஎஃப் நிதியில் 90 சதவீதத்தை எடுக்கலாம். 

– வேலையை விட்டு ஒரு மாத காலம் வேலை இல்லாமல் இருந்தால் 75 சதவீத பிஎஃப் நிதியையும், இரண்டு மாத வேலையில்லாமல் இருந்தால் முழு பிஎஃப் தொகையையும் திரும்பப் பெறலாம்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் அடுத்த அதிரடி அறிவிப்பு: 50% அகவிலைப்படி, ஊதிய ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News