EPFO ஜாக்பாட் செய்தி: ஊழியர்களுக்கு அடிச்சுது லாட்டரி, கணக்கில் வட்டி தொகை வரும், இப்படி செக் செய்யலாம்

EPFO Update: அரசாங்கம் இபிஎஃப் வட்டி பணத்தை கணக்கில் டெபாசிட் செய்தால் சுமார் 6 கோடி ஊழியர்கள் பயனடைவார்கள். சில மாதங்களுக்கு முன், 8.15 சதவீத வட்டி தருவதாக அரசு அறிவித்தது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 27, 2023, 02:19 PM IST
  • பிஎஃப் வட்டித்தொகையாக எவ்வளவு பணம் கிடைக்கும்?
  • எப்படி செக் செய்வது?
  • வீட்டில் இருந்தபடியே இந்த தொகையை பின் வரும் வழிகளில் செக் செய்யலாம்.
EPFO ஜாக்பாட் செய்தி: ஊழியர்களுக்கு அடிச்சுது லாட்டரி, கணக்கில் வட்டி தொகை வரும், இப்படி செக் செய்யலாம் title=

EPFO Update: மாதா மாதம் பிஎஃப் தொகைக்கு பங்களிக்கும் நபரா நீங்கள்? அப்படி என்றால் உங்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி உள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உறுப்பினர்களாக இருக்கும் அனைவருக்கும் கூடிய விரைவில் ஒரு ஜாக்பாட் அறிவிப்பு வரவுள்ளாது. இன்னும் சில நாட்களில் மத்திய அரசு வட்டிப் பணத்தை பிஎஃப் ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கவுள்ளது. இது ஊழியர்களுக்கு மிக மகிழ்ச்சிகரமான செய்தியாக இருக்கும். 

அரசாங்கம் இபிஎஃப் வட்டி (EPF Interest) பணத்தை கணக்கில் டெபாசிட் செய்தால் சுமார் 6 கோடி ஊழியர்கள் பயனடைவார்கள். சில மாதங்களுக்கு முன், 8.15 சதவீத வட்டி தருவதாக அரசு அறிவித்தது. இதற்குப் பிறகு, பிஎஃப் ஊழியர்கள் வட்டி பணம் வரவு வைக்கப்படும் நாளுக்காக காத்திருக்கிறார்கள். 

வட்டி செலுத்தும் தேதியை அரசு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் அரசு இந்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இபிஎஃப் வட்டியை அரசாங்கம் ஊழியர்களின் கணக்கில் வரவு வைத்தவுடன், ஊழியர்களின் கணக்கில் மொத்தமாக ஒரு தொகை வரும். 

எப்படி செக் செய்வது

பிஎஃப் வட்டி தொகையை அரசு ஊழியர்களின் கணக்கில் வரவு வைத்தவுடன் அது தங்கள் கணக்கில் வந்துவிட்டதா என்பதை ஊழியர்கள் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். இதை எப்படி செய்வது? இதற்காக எங்கும் சென்று அலைய தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே இதை தெரிந்துகொள்ளலாம்.

பிஎஃப் வட்டித்தொகையாக எவ்வளவு பணம் கிடைக்கும்? 

இன்னும் சில நாட்களில் அரசு பிஎஃப் ஊழியர்களின் கணக்கில் வட்டிப் பணத்தை டெபாசிட் செய்யப் போகிறது. ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு வட்டி பணம் வரும் என்ற கணக்கீட்டை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் உங்கள் கணக்கில் சரியான தொகை வந்துள்ளதா என்பதை எளிதாக சரிபார்க்க முடியும். 8.15 சதவிகிதம் என்ற விகிதத்தில் கணக்கில் பெரும் தொகை வட்டித்தொகையாக வரும். 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் இரட்டை மகிழ்ச்சி: 50% டிஏ, எச்ஆர்ஏ திருத்தம்

வட்டி பணம் ஊழியர்களின் கணகில் (EPF Account) டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் தொகையை பொறுத்து மாறுபடும். உதாரணமாக, ஒரு ஊழியரின் இபிஎஃப் கணக்கில் ரூ.6 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், 8.15 சதவீத வட்டியில் அவர் சுமார் ரூ.50,000 தொகையைப் பெறுவார். பிஎஃப் ஊழியர்களின் கணக்கில் ரூ.7 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், அதற்கு வட்டியாக ரூ.58,000 வழங்கப்படும். அதெ போல், கணக்கில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், சுமார் ரூ.82,000 வட்டி பலன் கிடைக்கும். இது ஊழியர்களுக்கு பம்பர் பரிசாக இருக்கும்.

தொகையை இந்த வகையில் செக் செய்யலாம்

பிஎஃப் சந்தாதாரர்கள் வட்டியாகப் பெற்ற தொகையை செக் செய்ய எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே இந்த தொகையை பின் வரும் வழிகளில் செக் செய்யலாம்.

1. உமங் செயலி மூலம்
2. இபிஎஃப்ஓ இணையதளம் மூலம்
3. மிஸ்ட் கால் கொடுத்து
4. எஸ்எம்எஸ் அனுப்பி

1. உமங் செயலி:
EPF கணக்கில் அரசாங்கம் எவ்வளவு தொகையை செபாசிட் செய்துள்ளது என்பதை அறிய நீங்கள் எங்கும் அலைய வேண்டியது இல்லை. பிஎஃப் சந்தாதாரர்கள் உமங் செயலியை விரைவில் பதிவிறக்கம் செய்து, வீட்டில் இருந்தபடியே தங்கள் கணக்கில் உள்ள தொகையை சரிபார்க்கலாம். 

2. இபிஎஃப்ஓ இணையதளம்
EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் ( epfindia.gov.in) சென்றும் உங்கள் கணக்கில் உள்ள தொகையை பற்றி தெரிந்துகொள்ளலாம். 

3.மிஸ்ட் கால்
மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, கணக்கு வைத்திருப்பவரின் மொபைல் எண்ணை இபிஎஃப்ஓ -வில் பதிவு செய்ய வேண்டும். பிஎஃப் சந்தாதாரர் மிஸ்டு கால் மூலம் இருப்புத் தகவலைப் பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் கணக்குத் தகவல் வரும்.

4. எஸ்எம்எஸ் 
எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, இபிஎஃப்ஓ -இல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இதற்கு, EPFO UAN LAN என்று டைப் செய்ய வேண்டும். இங்கு LAN என்றால் மொழி என்று பொருள். 

மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி அதிரடி: வங்கிகள் இதை செய்யாவிட்டால் தினமும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 இழப்பீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News