EPFO Higher Pension: பிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி... வந்தது புதிய அப்டேட்

EPFO Higher Pension: EPFO உயர் ஓய்வூதியம் தொடர்பான பணிகளை செய்து முடிக்க முதலாளிகள் / நிறுவனங்களுக்கான கடைசி தேதியை 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 1, 2023, 10:29 AM IST
  • EPFO Higher Pension Update: சமீபத்திய புதுப்பிப்பு என்ன?
  • 31 டிசம்பர் 2023 வரை சமர்ப்பிக்கலாம்.
  • 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
EPFO Higher Pension: பிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி... வந்தது புதிய அப்டேட் title=

EPFO Higher Pension: இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் PF அதாவது வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கிறார்கள். உங்களிடமும் இந்த பிஎஃப் கணக்கு இருந்தால், உங்களுக்கு ஒரு சிறப்பு புதுப்பிப்பு உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த அறிவிப்பு பற்றியும் இதனால் ஏற்படவுள்ள நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாக காணலாம். 

EPFO Update: சமீபத்திய புதுப்பிப்பு என்ன?

EPFO உயர் ஓய்வூதியம் தொடர்பான பணிகளை செய்து முடிக்க முதலாளிகள் / நிறுவனங்களுக்கான கடைசி தேதியை 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், உயர் ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் படிகள் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க அதிக நேரம் கிடைத்துள்ளது. முன்னதாக, உயர் ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டுப் படிவத்தை சரிபார்ப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30, 2023 வரை இருந்தது. ஆனால் இப்போது அதன் காலக்கெடு 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

EPFO Higher Pension: 31 டிசம்பர் 2023 வரை சமர்ப்பிக்கலாம்

உயர் ஓய்வூதியத்தீற்காக விண்ணப்பிக்கும் ஓய்வூதியம் பெறுவோர்/உறுப்பினர்களின் சம்பள விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு பணி வழங்குநர்கள் மற்றும் முதலாளிகள் சங்கங்கள் அமைச்சகத்திடம் முறையிட்டதாக தொழிலாளர் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்போது முதலாளிகள் அதாவது நிறுவனங்கள் 31 டிசம்பர் 2023 வரை ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகள் பற்றிய விவரங்களைச் சமர்ப்பிக்க முடியும். இதற்கான காலக்கெடுவை (EPFO Higher Pension Deadline) இபிஎஃப்ஓ (EPFO) நீட்டித்துள்ளது.

மேலும் படிக்க | EPFO Online Claim அடிக்கடு நிராகரிக்கப்படுகிறதா? எளிய ஆன்லைன் செயல்முறை இதோ

காலக்கெடுவை நீட்டிக்க முதலாளிகள் கோரிக்கை:

பல முதலாளிகள் / நிறுவனங்கள் கூட்டு விருப்பப் படிவத்தை சரிபார்க்க காலக்கெடுவை நீட்டிக்குமாறு தொழிலாளர் அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இபிஎஃப்ஓ இணையதளத்தில் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருப்பதாகவும், விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பு விவரங்களைப் பெறுவதிலும் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், இதன் காரணமாக கூட்டு விருப்பப் படிவத்தை விரைவாக தாக்கல் செய்ய முடியவில்லை என்று கூறினர். முதலாளி / நிறுவனங்களின் கோரிக்கையின் பேரில், அரசாங்கம் முதலாளிகள் / நிறுவனங்களின் சங்கடங்களை பரிசீலித்தது.

EPFO Higher Pension: 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைச் சரிபார்ப்பதற்காக (வெரிஃபை செய்வதற்காக) செப்டம்பர் 29, 2023 வரை 5.52 லட்சம் விண்ணப்பங்கள் முதலாளிகள் / நிறுவனங்களிடம் நிலுவையில் இருந்தன. அமைச்சகம் இந்தக் கோரிக்கையை பரிசீலித்த பிறகு, EPFO ​​வாரியத்தின் தலைவர், முதலாளிகள் சம்பள விவரங்கள் போன்றவற்றைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

நவம்பர் 4, 2022 அன்று, உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, உயர் ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்வுசெய்ய தகுதியுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் 4 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அந்த 4 மாத கால அவகாசம் மார்ச் 3, 2023 அன்று முடிவடைந்தது. இருப்பினும், இதற்குப் பிறகு காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு கடைசி தேதி 30 செப்டம்பர் 2023 ஆக இருந்தது. இப்போது அதிக ஓய்வூதிய (Higher Pension) விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடு 31 டிசம்பர் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | EPF கணக்கில் புதிய மொபைல் எண்ணை இணைக்க வேண்டுமா? இதோ எளிய ஆன்லைன் செயல்முறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News