வேலையை மாற்றியபின் இபிஎஃப் கணக்கை மர்ஜ் செய்யாவிட்டால் நஷ்டம்தான்: முழு செயல்முறை இதோ

EPFO Update:ஒருவரிடம் செயலில் உள்ள பிஎஃப் கணக்குகளை இணைப்பது மிக எளிதான பணியாகும். இதற்காக ஊழியர்கள் எங்கும் சுற்றி அலைய வேண்டிய அவசியம் இல்லை. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 28, 2023, 10:54 AM IST
  • பழைய நிதியை புதிய கணக்கில் சேர்க்க பிஎஃப் கணக்கை இணைக்க வேண்டியது அவசியம்.
  • இதற்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • இங்கே 'Services' -இல் சென்று படிப்படியாக சில தகவல்களை நிரப்ப வேண்டும்.
வேலையை மாற்றியபின் இபிஎஃப் கணக்கை மர்ஜ் செய்யாவிட்டால் நஷ்டம்தான்: முழு செயல்முறை இதோ title=

EPFO Update: தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் தொழில் வளர்ச்சிக்காக அவ்வப்போது வேலைகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒரு ஊழியர் புதிய வேலையில் சேரும் போது, அந்த நிறுவனத்தில் புதிய பிஎஃப் கணக்கு திறக்கப்படுகிறது. இருப்பினும், அதைத் திறக்கும்போது, ​​​​யுஏஎன் எண் தேவைப்படுகிறது. ஒரு ஊழியர் ஏற்கனவே பிஎஃப் கணக்கு வைத்திருப்பவராக இருந்து அவரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருந்தால், உடனடியாக அவர் அதை இணைக்க வேண்டும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

ஒருவரிடம் செயலில் உள்ள பிஎஃப் கணக்குகளை இணைப்பது மிக எளிதான பணியாகும். இதற்காக ஊழியர்கள் எங்கும் சுற்றி அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஒருவரிடம் இருக்கும் அனைத்து பிஎஃப் கணக்குகளையும் இணைப்பது மிக முக்கியமானது. ஏனெனில், பிஎஃப் கணக்குகளை இணைத்த பிறகு, அதில் பெறப்படும் வட்டி மிக அதிகமாக இருக்கும்.

பல சமயங்களில் ஒரு நபர் ஒரு புதிய வேலையில் சேரும்போது, அவர் தனது பழைய UAN எண்ணை நிறுவனத்திடம் அளிப்பது வழக்கம். அதன் பிறகு அந்த நிறுவனத்தில் அவருக்கான பிஎஃப் கணக்கு திறக்கப்படும். இதற்குப் பிறகு, உங்கள் புதிய கணக்கை பழைய கணக்குடன் இணைக்க (EPF Account Merge) முடியாது. அதாவது பழைய கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை புதிய கணக்கில் டெபாசிட் செய்ய முடியாது.

இதுபோன்ற சூழ்நிலையில், பழைய நிதியை புதிய கணக்கில் சேர்க்க பிஎஃப் கணக்கை இணைக்க வேண்டியது (Merge) அவசியம். இதற்கு நீங்கள் பணியாளர் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இங்கே 'Services' -இல் சென்று படிப்படியாக சில தகவல்களை நிரப்ப வேண்டும். பிஎஃப் கணக்குகளை (PF Account) எவ்வாறு இணைப்பது என்பதை பற்றி இங்கே காணலாம்.

மேலும் படிக்க | கர்நாடக மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! இலவச சிகிச்சைக்கு ஆரோக்கிய சஞ்சீவினி திட்டம்

பிஎஃப் கணக்குகளை இணைப்பதற்கான முழுமையான செயல்முறை:

- இதற்கு, முதலில் இபிஎஃப்ஓ -​​இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.epfindia.gov.in/site_en/ க்குச் செல்ல வேண்டும்.

- இதற்குப் பிறகு, நீங்கள் முகப்புப் பக்கத்திற்குச் சென்று 'My Account' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

- இப்போது 'My Account' -இல், கணக்கு விவரங்கள் என்பதன் கீழ் Merge Account என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

- ஒன்றிணைக்கும் கணக்கில், நீங்கள் இணைக்க விரும்பும் கணக்குகளின் விவரங்களை வழங்க வேண்டும்.

- முழு விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சரிபார்ப்புக்காக OTP பெறுவீர்கள்.

- இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP கிடைக்கும். நீங்கள் OTP எண்ணை உள்ளிட்டவுடன் உங்கள் பழைய பிஎஃப் கணக்குகள் தோன்றத் தொடங்கும்.

- உங்கள் EPFO ​​கணக்குடன் பல வங்கிக் கணக்குகள் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் செயலில் உள்ள வங்கிக் கணக்காக எதைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

- இந்தத் தகவலைப் பூர்த்தி செய்த பிறகு, அதை சேவ் செய்து, க்ளோஸ் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். 

- இப்போது உங்கள் புதிதாக இணைக்கப்பட்ட EPFO ​​கணக்கு உருவாக்கப்பட்டு சரிபார்த்த பிறகு (வெரிஃபிகேஷண்) செயல்படுத்தப்படும்.

ஊழியர் இபிஎஃப் (EPF) கணக்குகளை ஒன்றிணைக்கவில்லை என்றால், அவரது ஒவ்வொரு நிறுவனங்களின் கால அளவும் வித்தியாசமாக கணக்கிடப்படும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பிஎஃப் பணத்தை எடுக்கும்போது, ​​​​ஒவ்வொரு நிறுவனத்தின் காலத்திற்கு ஏற்ப டிடிஎஸ் செலுத்த வேண்டும். ஆனால் கணக்குகளை இணைத்த பிறகு, உங்கள் அனுபவமும் ஒன்றாகக் கணக்கிடப்படும். ஒரு உதாரணத்துடன் இதை புரிந்து கொள்ளலான். ஒரு ஊழியர் மூன்று நிறுவனங்களில் 2 வருடங்கள் வேலை செய்தார் என்று வைத்துக்கொள்வோம். இந்த சூழ்நிலையில், அவரிடம் மூன்று இபிஎஃப் கணக்குகள் உள்ளன என வைத்துக்கொள்ளலாம். இந்தக் கணக்குகளை இணைத்தால், உங்களின் மொத்த அனுபவ எண்ணிக்கை 6 வருடங்களாக இருக்கும். ஆனால் இணைப்பு செய்யப்படாவிட்டால், இவை 2 வருட அனுபவம் கொண்ட வித்தியாசமான கணக்குகளாக கணக்கிடப்படும். 

மேலும் படிக்க | ஆதார் எண்ணை அஞ்சல் அலுவலக கணக்குகளுடன் இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News