EPS Higher Pension: தேர்வு செய்ய இன்றே கடைசி நாள்... காலக்கெடு நீட்டிக்கப்படுமா?

EPS Higher Pension: விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதற்கு பணியாளர்கள் அனுப்பிய பிரதிநிதித்துவங்களை மனதில் கொண்டு மத்திய அரசு மூன்றாவது முறையாக இந்த காலக்கெடுவை நீட்டிக்கக்கூடும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 26, 2023, 04:26 PM IST
  • முந்தைய காலக்கெடுக்கள் என்ன?
  • மீண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படுமா?
  • EPS -ஐ யார் தேர்வு செய்ய வேண்டும்?
EPS Higher Pension: தேர்வு செய்ய இன்றே கடைசி நாள்... காலக்கெடு நீட்டிக்கப்படுமா? title=

ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை, அதாவது இன்று கடைசி நாளாகும். எனினும், இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஒருங்கிணைந்த பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) போர்டல் மூலம் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதில் பல தொழில்நுட்ப குறைபாடுகளை எதிர்கொள்கின்றனர்.

முந்தைய காலக்கெடுக்கள் என்ன?

கடந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, செப்டம்பர் 1, 2014 க்கு முன்னர் இபிஎஃப்ஓ -இன் ஒரு பகுதியாக இருந்த, மற்றும் அந்த தேதிக்குப் பிறகும் சேவையில் இருந்து, ஆனால், EPS இன் கீழ் கூட்டு விருப்பத்தைப் பயன்படுத்த முடியாமல் போன ஊழியர்களை, உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் இதற்கு விண்ணப்பிக்க, உச்ச நீதிமன்றம் அனுமதித்தது

அதன்படி, அசல் காலக்கெடு மார்ச் 3 ஆக இருந்தது. இது இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. முதலில் மே 3 வரை நீட்டிக்கப்பட்ட இந்த காலக்கெடு பின்னர் ஜூன் 26 வரை நீட்டிக்கப்பட்டது.

மீண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படுமா?

விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதற்கு பணியாளர்கள் அனுப்பிய பிரதிநிதித்துவங்களை மனதில் கொண்டு மத்திய அரசு மூன்றாவது முறையாக இந்த காலக்கெடுவை நீட்டிக்கக்கூடும் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒருங்கிணைந்த போர்ட்டலில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

செப்டம்பர் 1, 2014 க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு அதிக ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான சூத்திரம் என்ன?

ஓய்வூதிய நிதியில் இருந்து வெளியேறும் தேதிக்கு முன்னர் 12 மாதங்களில், பங்களிப்புக் காலத்தில் பெறப்பட்ட சராசரி மாத ஊதியத்தின் அடிப்படையில் இது செய்யப்பட வேண்டும்.

மேலும் படிக்க | Income Tax Return: ஐடிஆர்-1ஐ யார் பயன்படுத்தலாம்? யார் பயன்படுத்த முடியாது?

செப்டம்பர் 1, 2014 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெற்றவர்கள்/ஓய்வு பெறுபவர்களின் நிலை என்ன? 

அவர்களுக்கு, உறுப்பினர் பதவி காலாவதியாகும் நாளுக்கு முன்னர் 60 மாதங்கள் வரையிலான சேவையின் பங்களிப்புக் காலத்தில் பெறப்பட்ட சராசரி மாத ஊதியம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

EPS -ஐ யார் தேர்வு செய்ய வேண்டும்?

அதிக மாதாந்திர ஓய்வூதிய வருவாயை எதிர்நோக்கும் வரி செலுத்தும் தனிநபர்கள் EPS -ஐ தேர்ந்தெடுக்க வெண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஓய்வு பெறும்போது பெரிய தொகை தேவைப்படாமல் மாதாந்திர ஊதியத்தை விரும்பும் நபர்கள் இதை தேர்வு செய்யலாம். 

மொத்த தொகையின் அளவு குறையலாம்

நீங்கள் அதிக ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், பணி ஓய்வுக்குப் பிறகு பெறப்படும் மொத்த தொகையில் அளவு குறையக்கூடும். ஆனால் உங்கள் மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிக்கும். இந்த திட்டத்தில் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டும் உள்ளன என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இன்னும் சில ஆண்டுகளே பணிக்காலம் உள்ள ஊழியர்களின் கவனம் மொத்தத் தொகையில் இருக்க வேண்டும்.

அதிக ஓய்வூதியத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

- அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க, முதலில் இ-சேவா போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.

- அதன் பிறகு பென்ஷன் ஆன் ஹையர் சாலரி (Pension on Higher Salary) என்பதைக் கிளிக் செய்யவும்.

- இப்போது நீங்கள் ஒரு புதிய பக்கத்தை அடைவீர்கள். அங்கு நீங்கள் 2 விருப்பங்களைக் காண்பீர்கள்.

- செப்டம்பர் 1, 2014 க்கு முன் ஓய்வு பெறுபவர்கள் முதல் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

- இதைத் தவிர, நீங்கள் இன்னும் அந்த பணியில் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் இரண்டாவது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

- UAN, பெயர், பிறந்த தேதி, ஆதார், மொபைல் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.

- இப்போது உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும், அதை உள்ளிட வேண்டும்.

மேலும் படிக்க | EPS Higher Pension ஜாக்பாட் செய்தி: இந்த மாதம் முதல் அதிக ஓய்வூதியம்.. இப்படி விண்ணப்பிக்கலாம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News