EPF கணக்கு வைத்திருப்பவர்களுக்கான அப்டேட்! புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது EPFO

Latest Update From EPFO: அதிக ஓய்வூதியம் பெற வாய்ப்பு! அதிக ஓய்வூதிய பங்களிப்பிற்கான கூட்டு விருப்ப படிவத்தை தாக்கல் செய்வது தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 5, 2023, 12:59 PM IST
  • EPF ஊதிய விவரங்களை பதிவேற்றும் புதிய காலக்கெடு 2023 டிசம்பர் 31
  • பணி வழங்குபவர்களின் கோரிக்கை நிறைவேறியது
  • காலக்கெடு 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது
EPF கணக்கு வைத்திருப்பவர்களுக்கான அப்டேட்! புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது EPFO title=

புதுடெல்லி: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EFPO) அதிக ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகள் பற்றிய விவரங்களைச் சமர்ப்பிக்க பணி வழங்குநர்களுக்கான கடைசி தேதியை 3 மாதங்கள் நீட்டித்துள்ளது. உயர் ஓய்வூதியத்தை தேர்வு செய்வதற்கான கூட்டு படிவத்தை சரிபார்க்கும் காலக்கெடு செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இப்போது முதலாளிகள் அதாவது நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகள் பற்றிய விவரங்களை டிசம்பர் 31 ஆம் தேதி வரை சமர்ப்பிக்க முடியும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணப்பதாரர் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் உறுப்பினர்களின் சம்பள விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு பணி வழங்குநர்கள் மற்றும் முதலாளிகள் சங்கங்கள் அமைச்சகத்திடம் முறையிட்டிருந்தது. ஏனென்றால், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சரிபார்ப்பதற்காக, செப்டம்பர் 29, 2023 வரை 5.52 லட்சம் விண்ணப்பங்கள் பணி வழங்குநர்களிடம் நிலுவையில் இருந்தன.

எனவே, இந்த கோரிக்கையை பரிசீலித்த பிறகு, EPFO வாரியம், ஓய்வூதிய ஊதிய விவரங்களை பதிவேற்ற பணி வழங்குநர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கூடுதலாக மூன்று மாத கால நீட்டிப்பை வழங்கியது. மார்ச் 1996 இல், EPS-95 இன் பத்தி 11(3) இல் ஒரு விதி சேர்க்கப்பட்டது. அதன்படி, EPFO உறுப்பினர்கள் தங்கள் ஓய்வூதிய பங்களிப்பை அவர்களின் முழு சம்பளத்தில் (அடிப்படை + அகவிலைப்படி) 8.33% அதிகரிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அதாவது அதிக ஓய்வூதியம் பெற அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிக ஓய்வூதிய பங்களிப்பிற்கான கூட்டு விருப்ப படிவத்தை தாக்கல் செய்ய ஊழியர்களுக்கு EPFO ஆறு மாதங்கள் மட்டுமே அவகாசம் அளித்துள்ளது. இந்த காலகட்டத்தில் பல ஊழியர்களால் கூட்டு விருப்ப படிவத்தை தாக்கல் செய்ய முடியவில்லை என்பதால் அவர்கள், உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள்.

மேலும் படிக்க | EPFO புதிய விதிகள்: இனி PF கணக்குதாரர்களுக்கு இந்த வசதிகள் கிடைக்கும்! 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் , இந்த ஊழியர்களுக்கு கூட்டு விருப்ப படிவத்தை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக, உச்ச நீதிமன்றம் நவம்பர் 4, 2022 வெளியிட்ட உத்தரவில், தகுதியான அனைத்து உறுப்பினர்களுக்கும் உயர் ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்வுசெய்ய EPFO நான்கு மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறியது. இந்த நான்கு மாத காலம் மார்ச் 3, 2023 அன்று முடிவடைந்தது. அதன் பின்னர் இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டு தற்போது டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

முன்னதாக, 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், EPF க்கான சட்டப்பூர்வ ஊதிய உச்சவரம்பு மாதத்திற்கு 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதிக ஊதியத்துடன் புதிதாக சேர்பவர்கள் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) உறுப்பினராக தகுதியற்றவர்கள் என்று அப்போது மாற்றம் கொண்டு வரப்பட்டது.

ஓய்வூதிய ஊதியக் கணக்கீடு கடந்த 60 மாத ஊதியத்தின் சராசரியாக மாற்றப்பட்டது. ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்த 6 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இல்லையெனில், கூடுதல் பங்களிப்புகள் PF கணக்கிற்கு மாற்றப்படும், எதிர்கால பங்களிப்புகள் ஊதிய உச்சவரம்புக்குள் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | EPFO Higher Pension: பிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி... வந்தது புதிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News