மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் முகம்மது முய்சுவின் கட்சி அமோக வெற்றி..!!

மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  நிலையில், அதிபர் முகமது முய்சுவின் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 22, 2024, 04:29 PM IST
  • அதிபர் முய்ஸுவின் வெற்றியைத் தொடர்ந்து தனது சீன ஆதரவு செயல்பாடுகளை அதிகரிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
  • மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC), பாராளுமன்றத்தில் உள்ள 93 இடங்களில் 66 இடங்களை வென்றுள்ளது.
  • மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் முகம்மது முய்சுவின் கட்சி அமோக வெற்றி..!! title=

மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  நிலையில், அதிபர் முகமது முய்சுவின் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. இது இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுக்கூட்டத்தில் உள்ள குட்டி தீவு நாடான மாலத்தீவில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும்.  மாலத்தீவைப் பொறுத்தவரை அங்கே  இந்தியாவைப் போலப் பிரதமர் ஆட்சி இல்லை. மாலத்தீவில் அனைத்து அதிகாரங்களும் அதிபருக்கே இருக்கும்.

மொத்தம் உள்ள 93 இடங்களில் 66 இடங்களை வென்றுள்ள மக்கள் தேசிய காங்கிரஸ்

மாலத்தீவின் அதிபர் மொஹமத் முய்ஸு (Mohamed Muizzu) தலைமையிலான மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC), பாராளுமன்றத்தில் உள்ள 93 இடங்களில் 66 இடங்களை வென்றுள்ளது. இது 93 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமாகும். பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) தோராயமாக 12 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.

சட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏதும் இருக்காது

அதிபர் முகம்மது முய்சு, எதாவது சட்டத்தைக் கொண்டு வர முயற்சி செய்தால், அதனை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு இருந்த பெரும்பான்மை பலத்தை வைத்து முறியடித்து வந்தனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், முகம்மது முய்சுவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வலு கிடைத்துள்ளது. இதனால், முகம்மது முய்சுவால் தான் கொண்ட வர நினைத்த சட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புது டெல்லியுடனான உறவில் பதற்றம் 

அதிபர் முய்ஸுவின் வெற்றியைத் தொடர்ந்து தனது சீன ஆதரவு செயல்பாடுகளை அதிகரிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த ஆண்டு பதவியேற்ற மாலத்தீவு (Maldives) அதிபர் முய்ஸு, நாட்டின் முந்தைய "India First" அணுகுமுறையிலிருந்து விலகியதால், புது டெல்லியுடனான உறவில் பதற்றம் ஏற்பட்டது. சமீபத்தில், பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள், தனது நாட்டின் எல்லையை விட்டு வெளியேறுமாறு அவரது நிர்வாகம் கேட்டுக் கொண்டதை அடுத்து, உறவுகள் மேலும் பாதிக்கப்பட்டன.

தேர்தலில் ஜனநாயகக் கட்சி படுதோல்வி

முன்னாள் அதிபர் மொஹமட் நஷீத் தலைமையிலான ஜனநாயகக் கட்சி போட்டியிட்ட எந்த இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை. 2023ம் ஆண்டில் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியிலிருந்து (MDP) கட்சி பிரிந்தது. அதேபோல், முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சியும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | இந்தியாவின் மீன் கறி மசாலாவில் நச்சுப் பொருள்...? திருப்பி அனுப்பும் சிங்கப்பூர் - முழு விவரம்!

மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC) ஒரு சமயத்தில் MDP ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் தலைநகர் மாலே, அட்டு நகரம் மற்றும் வடக்கில் குல்ஹுதுஃபுஷி நகரம் உட்பட குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது.

குறைந்த வாக்கு பதிவு சதவிகிதம்

நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 368 வேட்பாளர்களில் இருந்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தங்கள் பிரதிநிதியாக பணியாற்ற 93 உறுப்பினர்களை வாக்காளர்கள் தேர்வு செய்துள்ளனர். மாலத்தீவு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தலில் 72.9% வாக்குகள் பதிவாகியுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2019ம் ஆண்டு பதிவான அளவான 82% ஐ விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பாரபட்சம் காட்டும் நெஸ்லே... இந்தியாவில் விற்கப்படும் குழந்தை உணவுகளில் சர்க்கரை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News