TN 12th results 2024 Updates: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

TN 12th Exam Result 2024: 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. http://dge.tn.gov.in மற்றும் http://tnresults.nic.in என்ற இணைய தளங்கள் வாயிலாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறியலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 6, 2024, 09:57 AM IST
  • தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியானது.
  • ரோல் எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
  • ஆண்களை விட பெண்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
TN 12th results 2024 Updates: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு title=

TN Class 12th Result 2024 Results out: தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியானது.

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் (DGE) மே 6 ஆம் தேதி (காலை 9:30 மணி) 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறிவித்தது. இந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in இணையதளங்களில் சற்று முன் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவை ரோல் எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை நடத்தப்பட்டன, சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதியுள்ளனர். மேலும் முக்கிய பாடங்களின் தேர்வுக்கு முன்னதாக மூன்று முதல் ஐந்து நாட்கள் இடைவெளி வழங்கப்படும் வகையில் அமைக்கப்பட்டது, இதனால் மாணவர்கள் தயார் செய்ய போதுமான நேரம் கிடைத்தது.

மேலும் படிக்க | அமைச்சர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் - பேராசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து கடந்த ஆண்டு அறிவியல், கலை மற்றும் வணிகவியல் பாடங்களில் 12 ஆம் வகுப்பு தேர்வில் சுமார் 8.51 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதற்கிடையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 10 ஆம் தேதி அறிவிக்கப்படும். 10 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரை நடத்தப்பட்டது மற்றும் செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 26 முதல் 28 வரை நடைபெற்றது.

+2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு:
12 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு. http://dge.tn.gov.in மற்றும் http://tnresults.nic.in என்ற இணைய தளங்கள் வாயிலாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறியலாம்.

முடிவுகளை எப்படி அறிவது?
அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதி பதிவிட்டு முடிவுகளை அறியலாம். 

Step 1: dge.tn.gov.in or tnresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். 
Step 2:  ஹோம்பேஜ் பக்கத்தில் result  டேப் கிளிக் செய்யவும். 
Step 3: உங்கள் பிறந்த தேதி மற்றும் தேர்வு பதிவு எண்ணை உள்ளிடவும். 
Step 4: தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும். 
Step 5: இந்த முடிவுகளை Save செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்:
கடந்த மார்ச் 1-ம் தேதி பிளஸ் 2  பொதுத் தேர்வு தொடங்கியது. 22ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்ற நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 7.8 லட்சம் மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

தேர்ச்சி விகிதம்:
கடந்தாண்டை விட இந்தாண்டு மாணவர்களின் தேர்வு விகிதம் 0.53% அதிகரித்துள்ளது. 397 அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி. 91.32% அரசு பள்ளிகளில் தேர்ச்சி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49%, தனியார்  பள்ளிகளில் 96.7%, மகளிர் பள்ளிகளில் 96.39%. தமிழ்நாட்டில் மொத்த தேர்ச்சி விகிதம்  94.56% ஆகும். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்கள் 92.37%, பெண்கள் 96.44%.

இந்த மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மேலும் தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கேன் செய்யப்பட்டுள்ள தங்கள் விடைத்ததாள் நகலை கேட்டுப்பெற்று, அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று கருதினால், மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க | மாணவர்கள் ஷாக்... நீட் எழுதிய 50 வயது வழக்கிறஞர்... மதுரையில் சுவாரஸ்யம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News