நயினார் நாகேந்திரன் ரூ. 4 கோடி வழக்கு... சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்!

Nainar Nagenthiran​: தேர்தல் நேரத்தில் போதிய ஆவணமின்றி ரூ. 4 கோடி பிடிப்பட்ட நிலையில், அந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 26, 2024, 07:03 PM IST
  • ஏப். 6ஆம் தேதி இந்த ரூ. 4 கோடி பிடிப்பட்டது.
  • அந்த பணத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை - நயினார் நாகேந்திரன்
  • ஆனால் பிடிப்பட்டவர்கள் தனக்கு தெரிந்தவர்கள் - நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன் ரூ. 4 கோடி வழக்கு... சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்! title=

Nainar Nagenthiran​ Case Tranfer To CBCID: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. தொடர்ந்து, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப். 19ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு முன் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கடும் கண்காணிப்பிலும், வாகனச் சோதனையிலும் ஈடுபட்டு வந்தனர். 

அந்த வகையில் கடந்த ஏப். 6ஆம் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரும், எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காகவும், வாக்காளர்களுக்கு கொடுக்கவும் கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் 

இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நயினார் நாகேந்திரன் ஓட்டலில் வேலை பார்த்த சதீஷ், பெருமாள் உள்பட மூன்று பேரை கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன், ஆசைதம்பி, சென்னை அபிராமிபுரத்தை சேர்ந்த பாஜக மாநில தொழில் துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், பாஜகவை சேர்ந்த ஜெய்சங்கர், நவீன், பெருமாள் உள்ளிட்டோர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. 

மேலும் படிக்க | 4 கோடி ரூபாய் பறிமுதல், FIRல் முக்கிய தகவல் - நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்!

வழக்கு விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டியிருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து  ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜரானார்கள். அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் நேரில் மே 2ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. 

இதுகுறித்து நயினார் நாகேந்திரன் கூறுகையில்,"மே 2ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துள்ளனர். என்னை முழுவதுமாக குறிவைத்துள்ளனர். அரசியல் சூழ்ச்சியாகவே இதனை பார்க்கிறேன். 4 கோடி ரூபாய் யாரோ எங்கேயோ பிடிபட்ட நிலையில் எனது பெயரையும் சேர்த்து பயன்படுத்துக்கின்றனர். 4 கோடி ரூபாயை மட்டும் குறிவைத்து பேசுபொருளாக்கப்படுகிறது.

திடீர் மாற்றம்

வரும் மே 2ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகி போலீசாரிடம் விளக்கம் அளிக்க உள்ளேன். போலீசார் கடமையை செய்கின்றனர். எனது தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். 4 கோடி ரூபாய் பணத்திற்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லையென்று பலமுறை கூறிவிட்டேன். தமிழகம் முழுவதும் ரூ.200 கோடி கைப்பற்றப்பட்ட நிலையில் 4 கோடி பற்றி மட்டும் விசாரிக்கின்றனர். கைதான 3 பேரும் எனக்கு தெரிந்தவர்கள், ஆனால் அந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. காவல்துறை மிரட்டி வாக்குமூலம்  பெற்றிருக்கலாம்" என்றார். 

இந்நிலையில் இவ்வழக்கு ரூ. 4 கோடி ரொக்கம் சிக்கிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படுவதாக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். நேற்று வரை தாம்பரம் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் நீங்கள் இன்று திடீரென சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி எப்போது நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பும் என்பது நாளை தெரியவரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News