ஆதிதிராவிடர் காலனி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார்..!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு குற்றவாளிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Apr 26, 2024, 08:52 PM IST
  • ஆதி திராவிடர் காலணியில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
  • குடிநீர் கலங்கலாக வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்
  • மாட்டு சாணம் கலந்த குடிநீரை குடித்த மக்களுக்கு வாந்தி மயக்கம்
ஆதிதிராவிடர் காலனி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார்..! title=

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு குற்றவாளிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆதி திராவிடர் காலணியில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான் தெரு ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 35 க்கு மேற்பட்ட பட்டியல் இன சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குரு வாண்டான் தெரு ஆதி திராவிடர் காலணியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்திக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை தொட்டியில் இருந்து ஆதிதிராவிடர் காலனி மற்றும் மாற்று சமூகத்தை சேர்ந்த ஐந்து குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

குடிநீர் கலங்கலாக வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்

இந்நிலையில், இன்று காலை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் குடிநீர் கலங்கலாக வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தூய்மை பணியாளரான சரவணன் என்பவரை அழைத்து தூய்மை பணியில் ஈடுபட்ட பொழுது அதில் மாட்டு சானம் கலந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் எரிய  இளைஞர்கள் மாட்டு சாணம் கலக்கப்பட்டது உண்மை என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க | 4 கோடி ரூபாய் பறிமுதல், FIRல் முக்கிய தகவல் - நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்!

மாட்டு சாணம் கலந்த குடிநீரை குடித்த மக்களுக்கு வாந்தி மயக்கம்

இந்நிலையில் மாட்டு சாணம் கலந்த குடிநீரை குடித்த அப்பகுதி பொதுமக்கள் வாந்தி மயக்கம் (Health) ஏற்பட்டு அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்த அரசு தரப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிநீரில் கலக்கப்பட்ட அந்த அசுத்தத்தை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்: வட்டார வளர்ச்சி அலுவலர்

மேலும் ஆய்வில் மாட்டு சாணம் என்று நிரூபிக்கப்பட்டால் மாட்டு சாணம் கலந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார். தற்பொழுது வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் குடிநீர் இன்றி தவித்து வருவதாகவும் உடனடியாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக தகவல் வெளியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News