சுக்கிரன் பெயர்ச்சி.... மேஷம் முதல் மீனம் வரை... அனைத்து ராசிகளுக்கான பலன்கள்!

Sukran Peyarchi Palangal: ஆடம்பர வாழ்க்கையையும் அழகிய தோற்றத்தையும் கொடுக்கும் சுக்கிரன் கிரகம், ஏப்ரல் 24ம் தேதி நள்ளிரவு 11:58 மணிக்கு மீன ராசியில் தனது சஞ்சாரத்தை முடித்துக்கொண்டு செவ்வாயின் ராசியான மேஷ ராசியில் நுழைந்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 25, 2024, 06:00 PM IST
  • ஜோதிட ரீதியாக அனைத்து ராசிகளுக்குமான சுக்கிரன் பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்ளலாம்.
  • உடல்நலம், குறிப்பாக கண் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஒற்றைத் தலைவலி தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்கவும்.
  • சுக்கிரன் பெயர்ச்சி எதிர்பாராத பலன்களை கொடுக்கும்.
சுக்கிரன் பெயர்ச்சி.... மேஷம் முதல் மீனம் வரை... அனைத்து ராசிகளுக்கான பலன்கள்! title=

Sukran Peyarchi Palangal: ஆடம்பர வாழ்க்கையையும் அழகிய தோற்றத்தையும் கொடுக்கும் சுக்கிரன் கிரகம், ஏப்ரல் 24ம் தேதி நள்ளிரவு 11:58 மணிக்கு மீன ராசியில் தனது சஞ்சாரத்தை முடித்துக்கொண்டு செவ்வாயின் ராசியான மேஷ ராசியில் நுழைந்துள்ளது. வரும் மே 19 ஆம் தேதி காலை 08:42 மணிக்கு மேஷ ராசியில் இருந்து, தனது ராசியான ரிஷப ராசியில் இடம் பெயர்வார். சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து மக்களிடமும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஜோதிட ரீதியாக அனைத்து ராசிகளுக்குமான சுக்கிரன் பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்ளலாம். 

மேஷம்

மேஷ ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி நிதி அம்சத்தை பலப்படுத்தும். நீங்கள் ஏதேனும் முக்கிய வேலையைத் தொடங்க விரும்பினால் அல்லது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பினால், அந்த விஷயத்திலும் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். திருமணப் பேச்சுக்கள் வெற்றி பெறும். மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்னைகள் தீரும். உங்களின் பேச்சுத் திறமையால், கடினமான சூழ்நிலைகளைக் கூட எளிதாகக் கையாளுவீர்கள். எனினும், உடல்நலம், குறிப்பாக கண் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஒற்றைத் தலைவலி தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்கவும்.

ரிஷபம்

ரிஷப ராயினர் சுக்கிரன் பெயர்ச்சியினால் ஆடம்பரப் பொருட்களுக்கு அதிக செலவு செய்யும். வாகனம் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. பயணத்திலும் அதிக நேரம் செலவிடுவார்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் சேவை செய்ய அல்லது குடியுரிமைக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வெளிநாடு செல்ல விசா போன்றவற்றுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு, சுக்கிரன் கிரகப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். வெளிநாடு சென்று படிக்கும் முயற்சியில் இருக்கும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள், 

மிதுனம்

சுக்கிரன்  பெயர்ச்சி மிதுன ராசிகளுக்கு எல்லா வகையிலும் நன்மை செய்வார். உயர் அதிகாரிகளுடனான உறவுகள் வலுவடையும். மூத்த குடும்ப உறுப்பினர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக கைக்கு வராத பணம் திரும்ப கிடைக்கும். பிள்ளைகள் தொடர்பான பொறுப்புகள் நிறைவேறும். புது தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பும் உள்ளது. எந்தவொரு அரசாங்க டெண்டருக்கும் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால், வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

கடகம்

கடக ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சி எதிர்பாராத பலன்களை கொடுக்கும். நீங்கள் அரசாங்க சேவைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வீடு, வாகனம் வாங்க நினைத்தால் அதற்கு இது நல்ல நேரம். சமூக அந்தஸ்தும் கௌரவமும் உயரும். எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் செய்த பணிகள் பாராட்டப்படும். முதலீடு தொடர்பான எந்த ஒரு முடிவையும் நீங்கள் எடுக்க விரும்பினால், அந்தக் கண்ணோட்டத்திலும் கிரகப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். 

சிம்மம்

சிம்மம் ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி செல்வாக்கு  மற்றும் உங்கள் இயல்பில் மென்மையைக் கொண்டுவரும். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வெளிநாடு செல்ல விசா போன்றவற்றுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அந்தக் கண்ணோட்டத்திலும் கிரக பலன்கள் சாதகமாக இருக்கும். புதிய நபர்களுடனான தொடர்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்திகள் மற்றும் திட்டங்களை ரகசியமாக வைத்துக்கொண்டு வேலை செய்தால் அதிக வெற்றி பெறுவீர்கள். குடும்பப் பொறுப்புகளையும் சிறப்பாகச் செய்வார்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி.... அபார லாபம்

கன்னி 

சுக்கிரன் பெயர்ச்சி கன்னி ராசிகளுக்கு எதிர்பாராத பலன்களைத் தருவார். உங்கள் நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடைவது மட்டுமின்றி, உங்கள் சமூக அந்தஸ்தும், கௌரவமும் அதிகரிக்கும். புதிய நபர்களுடனான தொடர்பு அதிகரிக்கும். இதனால் பலன் கிடைக்கும். உங்களுக்காக சில  விருதும் அறிவிக்கப்படலாம். மாணவர்களும், போட்டியில் கலந்துகொள்பவர்களும் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற அதிக முயற்சி எடுப்பார்கள். நீதிமன்றம் தொடர்பான விவகாரங்களை, நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்த்துக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். 

துலாம்

துலாம் ராசிகளுக்கு சுக்கிரன் சஞ்சரிப்பதால் மத்திய, மாநில அரசு துறைகளின் நிலுவையில் உள்ள பணிகளைத் தீர்க்க உதவும். நீங்கள் எந்த வகையான புதிய ஒப்பந்தத்தையும் பெற விரும்பினால், அதற்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது. திருமணப் பேச்சுக்கள் கைகூடி வர இன்னும் சில காலம் பிடிக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சர்ச்சைக்குரிய விவகாரங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்கப்பட வேண்டும். இரகசிய எதிரி உங்களை அவமானப்படுத்த சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பான். எனவே எச்சரிக்கை தேவை. இந்தக் காலத்தில் கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்

 சுக்கிரன் பெயர்ச்சியினால் விருச்சிக ராயினர் எதிர்பாராத ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். உங்களின் அலுவலக பணியில் பொறுப்புகள் விரிவடையும் என்றாலும், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மற்றும் மன அமைதியின்மையை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் யாருக்கும் அதிக கடன் கொடுக்க வேண்டாம். பணம் சரியான நேரத்தில் கிடைக்காது. பயணத்தால் அதிக செலவு ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்சனைகளும் தீரும்.

தனுசு

தனுசு ராசிகளுக்கு சுக்கிரன் சஞ்சாரம் பலன் அளிக்கும். மாணவர்களுக்கும் போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கும் வரப்பிரசாதம். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு வேலைகளில் முற்றிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் தொடர்பான கவலைகள் விலகும். குழந்தைப் பேறு வாய்ப்புகளும் உண்டாகும். காதல் விஷயங்களில் கவனம் தேவை. புதிய நபர்களுடனான தொடர்பு அதிகரிக்கும். பணியின் நோக்கம் விரிவடையும். உயர் அதிகாரிகளுடனான உறவுகள் பலப்படும். நீங்கள் உங்கள் வேலையை மாற்ற முயற்சிக்கிறீர்கள் என்றால், நேரம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

மகர ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சி ஓரலவு நல்ல பலன்களை கொடுக்கும். எனினும் சில காரணங்களால் மன அழுத்தம் அதிகரிக்கலாம். ஆனால் வேலையில் பொறுப்பு விரிவடையும். எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் செய்த பணிகள் பாராட்டப்படும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கு நீங்கள் முடிவு எடுக்க விரும்பினால், இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். அரசுத் துறைகளில் எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும்.

கும்பம்

சுக்கிரன் சஞ்சரிப்பதால் கும்ப ராசியினருக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். அவர்களின் மென்மையான குணத்தின் வலிமையால், அவர்கள் எதிர்மறையான சூழ்நிலைகளைக் கூட எளிதாகக் கையாள முடியும். ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். உத்திகள் மற்றும் திட்டங்களை ரகசியமாக வைத்துக்கொண்டு வேலை செய்தால் அதிக வெற்றி பெறுவீர்கள். ஆன்மீக விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சமூக அந்தஸ்தும் கௌரவமும் உயரும். நீங்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் சேவைக்காகவோ அல்லது குடியுரிமைக்காகவோ முயற்சிக்கிறீர்கள் என்றால், அந்தக் கண்ணோட்டத்திலும் நேரம் நன்றாக இருக்கும்.

மீனம்

மீன ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சி செல்வாக்கு பொருளாதார முன்னேற்றத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் திடீர் செல்வம் பெறுவதற்கான வாய்ப்பையும் உருவாக்கும். உடல்நலம், குறிப்பாக வலது கண் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருங்கள். இந்த காலகட்டத்தில், எந்த வகையான ரியல் எஸ்டேட்டையும் விற்கும் நோக்கில் எந்த ஒப்பந்தமும் செய்வதைத் தவிர்க்கவும். பணியிடத்தில் கூட எதிரிகளின் சதிக்கு பலியாவதைத் தவிர்க்கவும். வேலையை முடித்துவிட்டு நேராக வீட்டிற்கு வருவது நல்லது. உங்கள் உறவினர்கள் கூட உங்களை அவமானப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தையும் விட்டுவிட மாட்டார்கள் என்பதில் கவனமாக இருங்கள்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி மே 1 : இந்த ராசிகளுக்கு பணம், புகழ், கோடீஸ்வர வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News