மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், அள்ளிக்கொடுப்பார் குரு

Guru Peyarchi Palangal: சுப கிரகங்களில் ஒருவரான குரு பகவான் மக்களுக்கு பல நற்பலன்களை அளிக்கிறார். அவரது ராசி மாற்றம், அதாவது குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. 

 

Guru Peyarchi Palangal: பஞ்சாங்க கணக்கீடுகளின் படி, குரு மே 1, 2024 அன்று மதியம் 12.59 மணிக்கு ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவார். இதற்குப் பிறகு, குரு அக்டோபர் 9 ஆம் தேதி வக்ர பெயர்ச்ச்சி அடைந்து அதன் பிறகு பிப்ரவரி 4, 2025 அன்று வக்ர நிவர்த்தி அடைவார். 2025 ஆம் ஆண்டில், மே 14 ஆம் தேதி, குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து வெளியேறி மிதுன ராசிக்கு மாறுவார். மே 1 அன்று நிகழவுள்ள குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /11

ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. குரு பகவான் கல்வி, திருமண வாழ்க்கை, குழந்தைகள், செல்வம், மகிழ்ச்சி, ஆற்றல், பேச்சாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார். 

2 /11

மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு குரு அருளால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

3 /11

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் நிகழவுள்ள குரு பெயர்ச்சியால் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. செலவுகளும் அதிகமாக இருக்கும். எனினும் இவை சுபச்செலவுகளாக இருக்கும். இந்த கலாத்தில் பணம் சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். 

4 /11

கடகம்: ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். 

5 /11

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியால் லாபகரமான பலன்களை பெறவுள்ளனர். குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் விருப்பப்படி வெற்றி கிடைக்கும். இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்படிருந்த அனைத்து பணிகளும் இப்போது நடந்து முடியும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். 

6 /11

கன்னி: கன்னி ராசிக்காரர்களும் 2024 குரு பெயர்ச்சி பெரிய அளவிலான நல்ல பலன்களை அளிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய வேலைகளையும் தொடங்கலாம். பண வரவு அதிகமாகும். வேலை தேடிக்கொண்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் நாட்டும் உள்ளவர்கள் இந்த காலத்தில் அதை தொடங்கலாம். 

7 /11

விருச்சிகம்: குரு பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் விருத்தி அடையும். 

8 /11

மகரம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது நடந்து முடியும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

9 /11

கும்பம்:  கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.  செல்வம் பெருகும். குறிப்பாக ரியல் எஸ்டேட்டில் தொடர்புடையவர்கள் பணக்காரர்களாக மாறுவார்கள். கும்பம் ராசிக்காரர்களுக்கு நிலம், வீடு மட்டுமின்றி புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். 

10 /11

குரு பகவானின் அருள் பெற,  குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர;  குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.

11 /11

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.