இன்று புதன் வக்ர நிவர்த்தி: மே மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்

Budhan Vakra Nivarthi: புதனின் சுப ஸ்தானம் மற்றும் வக்ர நிவர்த்தியால் அதிகப்படியான அதிர்ஷ்டத்தை பெறவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 25, 2024, 12:19 PM IST
  • கன்னி ராசிக்காரர்களுக்கு, புதனின் இந்த மாற்றம் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அதிகரிக்கும்.
  • உங்கள் எதிரிகள் மீது வெற்றி காண்பீர்கள்.
  • நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இன்று புதன் வக்ர நிவர்த்தி: மே மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான் title=

Budhan Vakra Nivarthi: ஜோதிட சாஸ்திரத்தில் கிரங்களின் பெயர்ச்சிக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.  இவற்றின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் இருக்கும். இவற்றில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. 

கிரகங்களின் இளவரசரான புதன், இன்று அதாவது ஏப்ரல் 25 ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். புதனின் இந்த மாற்றத்தால் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிகள் அதிகமாகும். புதன் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும். மிதுனம், விருச்சிகம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இதனுடன் மீனத்தில் உள்ள புதன் செவ்வாயுடன் இணைந்து தன யோகத்தை உருவாக்குகிறார். புதனின் சுப ஸ்தானம் மற்றும் வக்ர நிவர்த்தியால் அதிகப்படியான அதிர்ஷ்டத்தை பெறவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரிஷபம் (Taurus)

புதன் வக்ர நிவர்த்தியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் தொழிலில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். பல அற்புதமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும், உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து வியாபாரம் செய்பவர்களுக்கு பல வெற்றி வாய்ப்புகள் அமையும். மீனத்தில் புதன் வக்ர நிவர்த்தி அடைவதால், உங்கள் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டு. உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மிதுனம் (Gemini):

மிதுன ராசியினருக்கு, புதன் வக்ர நிவர்த்தி உங்கள் வாழ்க்கையில் பொருள் மகிழ்ச்சியையும் வசதிகளையும் அதிகரிக்கும். உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் பல அற்புதமான வாய்ப்புகள் வரும், நீங்கள் அவற்றை அடையாளம் கண்டு அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டால் வெற்றியின் உச்சம் தொடலாம். உங்கள் தொழில் தொடர்பான சில முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கும். உங்கள் நிதி நிலையும் மிகவும் வலுவாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். இதன் காரணமாக பணம் சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும். 

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி.... அபார லாபம்

கன்னி (Virgo):

உறவுகளுக்குள் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு, புதனின் இந்த மாற்றம் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அதிகரிக்கும். உங்கள் எதிரிகள் மீது வெற்றி காண்பீர்கள். நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய ஆர்டர்களைப் பெறக்கூடும். நல்ல தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கைத் துணையுடன் உறவு மிகவும் நட்பாக இருக்கும், புரிதல் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், மேலும் இந்த நேரத்தில் உங்கள் உடற்தகுதியிலும் கவனம் செலுத்த முடியும்.

மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். புதன் வக்ர நிவர்த்தி அடைவதால்,  வியாபாரம் போன்றவற்றில் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள், மேலும் சில புதிய திட்டங்களைச் செயல்படுத்துவது பற்றி யோசிப்பீர்கள். உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும். அவற்றை நீங்கள் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையிலும் மகர ராசிக்காரர்களின் உறவு மிகவும் சுமுகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி மே 1 : இந்த ராசிகளுக்கு பணம், புகழ், கோடீஸ்வர வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News