யூரிக் அமில அளவை அசால்டாக குறைக்க இந்த மஞ்சள் நிற பழங்களை சாப்பிடுங்கள்

Yellow Fruits For High Uric Acid : அதிக யூரிக் அமில பிரச்சனையில் இருந்து விடுப்பட இங்கே கொடுக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற பழங்களை கட்டாயம் உட்கொள்ளவும். இந்த பழங்கள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

Yellow Fruits For High Uric Acid : யூரிக் அமிலம் பிரச்சனை தற்போது பொதுவாக மாறிவிட்டது. இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமானால், மூட்டு வலி ஏற்படத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எனவே யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த, மஞ்சள் நிற பழங்களை உட்கொள்ளலாம்.

1 /6

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இவை யூரிக் அமில அளவை குறைக்க உதவுகிறது.

2 /6

அன்னாசிப்பழத்தை உட்கொள்வதன் மூலம், இரத்தத்தில் இருக்கும் யூரிக் அமில பிரச்சனையை குறைக்க உதவும். 1 கப் அன்னாசிப்பழத்தில் 131 சதவீதம் வைட்டமின் சி உள்ளதால், இவை அசால்ட்டாக யூரிக் அமில அளவைக் குறைக்கும்.

3 /6

பப்பாளியில் வைட்டமின் சி நிறைந்தால், இந்த பழம் இயற்கையாகவே அதிக யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும், மேலும் கீல்வாத வலியையும் இந்த பப்பாளி குறைக்க உதவும்.

4 /6

முலாம்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், இவை யூரிக் அமில அளவைக் குறைக்க பெரிய அளவில் உதவும். முலாம்பழம் சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.

5 /6

வாழைப்பழம் உங்கள் இரத்தத்தில் இருக்கும் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவும். இது கீல்வாதத்தின் அபாயத்தைக் குறைக்க பெரிய அளவில் உதவுகிறது.

6 /6

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.