சனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனி

Favourite Zodiac Signs of Lord Shani: சனி பகவான் நமது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுள் ஆவார். இவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளார். 

Favourite Zodiac Signs of Lord Shani: சனி பகவானை கண்டு பெரும்பாலும் பலரும் அஞ்சுவதுண்டு. ஆனால், நல்ல செயல்களை செய்தால் அவர் நல்ல பலன்களையே அளிக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தீய செயல்களுக்கான தீய பலன்களை கிள்ளியும் நல்ல செயல்களுக்கான நல்ல பலன்களை அள்ளியும் கொடுக்கும் கொடை வள்ளல் அவர். ஜோதிட சாஸ்திரப்படி. சில ராசிகள் சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகளாக இருக்கிறார்கள். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம். 

1 /11

மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகிறார். இவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார்.

2 /11

ஒருவர் மீது சனி பகவானின் அருள் இருந்தால், அவர் வாழ்வில் எண்ணற்ற இன்பங்களை பெறுகிறார். அவரது முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சிக்கு யாரும் தடை போட முடியாது. 

3 /11

சனி பெயர்ச்சி, அதாவது சனி பகவானின் ராசி மாற்றம் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளின் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. அதே போல் ஏழரை சனியும் ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கிய காலகட்டமாக பார்க்கப்படுகின்றது  

4 /11

அனைத்து ராசிகள் மீதும் சனி பகவானின் அருள் இருக்கும். எனினும், சில ராசிகள் மீது சனி பகவானின் விசேஷ பார்வை இருக்கும். இவர்களுக்கு சனி பகவான் ஏழரை சனி, சனி பெயர்ச்சி காலத்திலும் பிரச்சனைகளை குறைத்து நல்ல பலன்களை அதிகமாக்கி அருள் பொழிகிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

5 /11

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் மீது சனியின் அருள் எப்போதும் இருக்கும். இவர்களது ஈகை குணம் காரணமாக இவர்கள் சனி பகவானுக்கு பிடித்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் மிகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் கஷ்டங்களை பொருட்படுத்தாமல் பிறருக்கு உதவி செய்கிறார்கள். 

6 /11

துலாம்: சனியின் விருப்பமான ராசிகளில் துலாம் மிகவும் தனித்துவமானது. துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். ஜோதிட சாஸ்திரப்படி சனியும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள். இதன் காரணமாகவும் சனி பகவான் துலா ராசிக்காரர்கள் மீது விசேஷ அருளை பொழிகிறார்.  ஏழரை சனி மற்றும் சனி பெயர்ச்சி காலங்களிலும் சனி பகவான் இவர்களை அதிகம் படுத்துவதில்லை. 

7 /11

தனுசு: தனுசு ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். ஆகையால், இவர்களுக்கு சனி மற்றும் குரு இருவரின் ஆசியும் கிடைக்கின்றது. சனி பகவானின் அருளால் இவர்களது வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி, செழிப்பு, கல்வி, செல்வம் ஆகியவை குறைவில்லாமல் இருக்கும். 

8 /11

மகரம்: மகர ராசியின் அதிபதி சனி பகவான். மகர ராசிக்காரர்கள் சனி பகவானின் செல்லப்பிள்ளைகளாக கருதப்படுகிறார்கள். இவர்கள் வாழ்வில் வரும் தொல்லைகளை சனி பகவான் உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார். அதிகம் சிரமப்படாமல் இவர்கள் பெரிய விஷயங்களை சாதித்து விடுகிறார்கள். 

9 /11

கும்பம்: கும்ப ராசிக்கு அதிபதியும் சனிதான். கும்ப ராசிக்காரர்கள் மீது சனி பகவானின் அருள் எப்போதும் இருக்கும். சனிபகவானின் அருளால் இவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படாது. குறைந்த முயற்சியில் இவர்கள் அதிக பலன்களைப் பெறுகிறார்கள். சனி அருளால் இவர்களுக்கு திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும். சனி பெயர்ச்சி மற்றும் ஏழரை சனி காலங்களில் இவர்களை சனி பகவான் அதிகம் பாதிக்காமல் நற்பலன்களையே அளிக்கிறார்.

10 /11

சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.

11 /11

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.