RCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி காத்திருக்க வைத்ததால் கடுப்பான எம்எஸ் தோனி ஆர்சிபி வீரர்களுடன் கை குலுக்காமல் டிரெஸ்ஸிங் ரூமுக்கு கிளம்பிச் சென்றார்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி மே 18 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது.

1 /7

பிளே ஆப் செல்ல இரு அணிகளும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இப்போட்டியில் ஆர்சிபி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

2 /7

இதனால் ஆர்சிபி அணி வீரர்கள் மைதானத்தில் துள்ளி குதித்து வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிஎஸ்கே வீரர்கள் எல்லைக்கோடு அருகே கைலுக்க காத்துக் கொண்டிருந்தனர்.

3 /7

ஆர்சிபி வீரர்கள் வந்து சிஎஸ்கே வீரர்களுடன் கைலுக்க தொடங்கும்போது தோனி மட்டும் அந்த இடத்தில் இல்லை. விராட் கோலி உள்ளிட்டோர் தேடியும் அங்கு எம்ஸ்டி-ஐ பார்க்க முடியவில்லை

4 /7

இதனால் சமூக வலைதளங்களில், ஆர்சிபி வெற்றியை ஜீரணிக்க முடியாமல் தோனி டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றுவிட்டதாக திட்டி தீர்க்க தொடங்கினர். தோனி தோல்வியை தாங்கும் பக்குவம் இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினர்.  

5 /7

ஆனால், தோனி சிஎஸ்கே வீரர்களில் முதல் ஆளாக ஆர்சிபி அணியினரை வாழ்த்துவதற்கு நின்றிருந்தார். ஆர்சிபி வீரர்கள் வர தாமதமானதால் தோனியால் அதிகநேரம் நிற்க முடியாமல் டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றுவிட்டார்.

6 /7

தோனிக்கு முழங்கால் பிரச்சனை இருக்கிறது. அவரால் அதிக நேரம் நிற்க முடியாது. கடந்த போட்டியில் பரிசளிப்பு விழாவில் அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசை கூட சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான் வாங்கினார்.

7 /7

அதனால் தோனியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை வசபாட வேண்டாம் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்சிபி ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், தோனி இதுபோல் பல வெற்றிகளை பார்த்திருப்பதாகவும், அதனால் இந்த தோல்விக்கு எல்லாம் அவர் துவண்டு போகமாட்டார் என்றும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.