கூலி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கியுள்ள சம்பள விவரம்!

Lokesh kanagaraj Salary: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு கூலி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

 

1 /5

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது தவிர்க்க முடியாத இயக்குனராக மாறி உள்ளார். தனது முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.  

2 /5

பின்பு கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கி இருந்தார். விஜய்யின் பிகில் படத்துடன் இப்படம் வெளியானதால் கைதி படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.  

3 /5

பின்னர், விஜய்யை வைத்து மாஸ்டர், லியோ என மெகா ஹிட் படங்களை கொடுத்தார் லோகேஷ். மேலும் அவரது குருவான கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி இருந்தார்.  

4 /5

லியோ படம் வெளியாகும் முன்பே ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு கிடைத்தது. சமீபத்தில் வெளியான அறிவிப்பில் இந்த படத்திற்கு கூலி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.   

5 /5

அனிருத் இசையில், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜ் ரூ. 50 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.