குரு பெயர்ச்சி... பணம் - அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது... கவலை வேண்டாம்!

Jupiter Transit in Taurus: ஜோதிடத்தில், தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான காரணியாகவும், சுப கிரகமாகவும் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. சனிக்குப் பிறகு, குரு பகவானும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளது.

குரு பகவான், ஒரு ராசியில் சுமார் 13 மாதங்கள் சஞ்சரித்து பின்னர் மற்றொரு ராசிக்கு மாறுகிறார். குரு பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

1 /7

குரு பெயர்ச்சி: கடந்த ஏப்ரல் 22, 2023 அன்று, குரு பகவான் மீனத்தில் இருந்து மேஷத்தில் நுழைந்தார். தற்போது, 2024 ஆம் ஆண்டில்  ரிஷப ராசிக்கு மாறுகிறார். சில ராசிக்காரர்கள் ரிஷப ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் மிக சிறப்பான பலன்களைப் பெறலாம் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

2 /7

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, குரு பகவான் மேஷ ராசியில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மே 01 அன்று மதியம் 02:29 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைவார். குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அபரிமிதமாக கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

3 /7

ரிஷபம்: உங்களுக்கு அதிர்ஷ்டம் அபரிமிதமாக கிடைக்கும். அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். பதவி உயர்வு பெறுவீர்கள். மகிழ்ச்சிகரமான செய்திகளைப் பெறுவீர்கள். வெளிநாடு செல்லலாம். திருமண வாழ்வில் அபரிமிதமான மகிழ்ச்சியை பெறுவீர்கள். 

4 /7

மிதுனம்: சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள். மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு குறைவிருக்காது. ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலைக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்

5 /7

கடகம்: உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றப் போகிறது. இந்த நேரத்தில் வேலையில்,தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் வீட்டிற்கு புதிய விருந்தினர் வரலாம். க்ரு பகவான் செல்வாக்கின் காரணமாக, உங்கள் திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் இருக்கும்.

6 /7

மகரம்: எதிர்காலம் சார்ந்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட கால முதலீடு தொடர்பான ஆலோசனை கிடைக்கும். மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். தனவரவுகளின் மூலம் தேவைகள் நிறைவேறும்.  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் கை கூடி வரலாம்.  

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.