செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்! இதை நோட் பண்ணுங்க

செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன

 

1 /6

பயன்படுத்திய கார் வாங்குகிறீர்கள் என்றால், அதனுடைய மாடல் மற்றும் தற்போதைய மார்க்கெட் நிலவரம் குறித்து நன்கு அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக 2009 டிசம்பரில் வாங்கிய கார், 2010 ஆம் ஆண்டு தான் பதிவு செய்திருப்பார்கள்.   

2 /6

ஆனால் விற்பவர்கள் 2010 மாடல் என சொல்வார்கள். அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ள கூடாது. கார் மாடல் 2009க்கு என்ன விலையோ, அதனை வைத்து தான் பேரம் பேச வேண்டும்.  

3 /6

பயன்படுத்திய காரில் நிறைய பிரச்சனைகள் இருக்கும். அது குறித்து அறிந்து கொள்ள நல்ல மெக்கானிங் தேவை. அவர்களுக்கு கேட்கும் தொகையை (ஒருநாள் ஊதியம்) கொடுத்தாவது நேரில் அழைத்துச் சென்று காரை செக் செய்ய சொல்லுங்கள். தெரிந்தவர்கள் என காரைப் பற்றி துளியும் தெரியாதவர்கள் யாரையும் கூட அழைத்துச் சென்று ஏமாந்துவிடாதீர்கள்.  

4 /6

பயன்படுத்திய காரில் இன்ஜின் நன்றாக இருக்கிறதா, எப்போது சர்வீஸ் செய்யப்பட்டது? என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். இன்சூரன்ஸ், எப்சி எல்லாம் கரண்டில் இருக்கிறதா?, அல்லது நீங்கள் அதனை செய்து கொள்ள வேண்டுமா? என்பதை தெரிந்து கொண்டு விலையை நிர்ணயம் செய்யுங்கள்.   

5 /6

நீங்கள் அழைத்துச் செல்லும் மெக்கானிக் கண்டிபாக பிரேக் நன்றாக இருக்கிறதா, பிரேக் பூஸ்டர் நன்றாக வேலை செய்கிறதா? என்பதை பார்க்க சொல்லுங்கள். பிரேக் பூஸ்டர் இப்போதைய மார்க்கெட்டில் 10 ஆயிரம் ரூபாய் என்பதால் இவையெல்லாம் உங்கள் காரின் விலையில் சேரும்.  

6 /6

கிளர்ச், கியர் பாக்ஸ் நிலைகளையும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள். லட்ச ரூபாய் செலவு செய்து கார் வாங்க திட்டமிடும் நீங்கள், ஆயிரம் இரண்டாயிரம் செலவாகிறதே என நினைத்து அவசரமாக எந்த பயன்படுத்திய காரையும் வாங்கிவிடாதீர்கள். நீங்கள் லட்சங்களில் செலவு செய்ய வேண்டியிருக்கும்.