சிக்கலில் நடிகை தமன்னா.. சம்மன் அனுப்பிய சைபர் கிரைம்

Actress Tamannaah Bhatia summoned by cyber department : கடந்த 2023 ஆம் ஆண்டு ஃபேர்பிளே செயலி மூலம் ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட புகாரில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

 

FairPlay செயலியில் IPL 2023 ஐ சட்டவிரோதமாக ஸ்ட்ரீமிங் செய்ததால், Viacom நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் மகாராஷ்டிரா சைபர் செல், நடிகர் தமன்னாவிற்கு சம்மன் அனுப்பியுள்ளது.

1 /5

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்பின்னர் ஆண்டுதோறும் இந்த போட்டி நடத்தப்பட்டு தற்போது 17-வது சீசன் நடைபெற்று வருகிறது. எப்போதுமே டிரெண்ட்டாக இருக்கும் இந்த ஐபிஎல் போட்டியின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற பல்வேறு நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நடக்கும். அதன்படி கடந்த 2023ம் ஆண்டு இதன் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் பெற்றது.  

2 /5

அந்த வகையல் கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சட்ட விரோதமாக ஃபேர்ப்ளே செயலியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமையை பெற்ற வியாகாம் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக சைபர் கிரைமில் புகாரளித்தது.  

3 /5

இதுதொடர்பாக ஃபேர்ப்ளே செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டது.   

4 /5

அதுமட்டுமின்றி கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடிகர் சஞ்சய் தத்துக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். அவர் இந்தியாவில் இல்லாத காரணத்தால் மற்றொரு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.   

5 /5

தற்போது ஏப்ரல் 29 ஆம் தேதி நடிகை தமன்னா பாட்டியாவை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சைபர் கிரைம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.