முதன்முறையாக மகளின் வீடியோவை வெளியிட்ட ராம் சரண்.. செம கியூட் ஆ இருக்கே

இன்று உபாசனாவின் பிறந்தநாள் என்பதால் சிறப்பு வீடியோ ஒன்றை ராம் சரண் வெளியிட்டுள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 20, 2023, 09:48 PM IST
  • கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது.
  • சமீபத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது.
  • வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதன்முறையாக மகளின் வீடியோவை வெளியிட்ட ராம் சரண்.. செம கியூட் ஆ இருக்கே title=

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா, மகதீரா என்ற படம் மூலம் அறிமுகமாகி இன்று தெலுங்கு சூப்பர் ஸ்டாராக உயரும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் நடித்திருந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்த வருடத்தின் ஆஸ்கர் விருதையும் தட்டிச்சென்றது. இவருக்கும் அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர், பிரதாப் சி.ரெட்டியின் பேத்தியான உபாசனா காமினேனிக்கும் 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. 

ராம் சரணுடன் திருமணம் ஆன புதிதில் பலவித விமர்சனங்களை எதிர்கொண்டார் உபாசனா. மகதீரா படத்தின் ரிலீஸிற்கு பிறகு ராம் சரண் புகழின் உச்சியில் இருந்த காலம் அது. அவரை திருமணம் செய்து கொண்ட உபாசனா கொஞ்சம் கூட அவருக்கு பொருத்தமானவராக இல்லை என பலரும் தங்களது வாய்க்கு வந்தவாறு பேசினர். திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை என்ற பிற்போக்குத்தனமாக விமர்சனங்களையும் இவர்கள் சந்தித்தனர். இந்த நிலையில், உபாசனா கர்பமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சமீபத்தில்தான் உபாசனாவிற்கு வளைகாப்பு வைபோகமும் நடைப்பெற்றது. 

மேலும் படிக்க | இந்த 5 தென்னிந்திய சூப்பர் ஹீரோ படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உபாசனாவவிடம் தாமதமான கர்பம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், திருமணமான புதிதிலேயே குழந்தை மற்றும் வாழ்க்கையில் தாங்கள் சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் குறித்து பேசியதாக கூறினார். “நாங்கள் இருவரும் தொழில் ரீதியாக எங்களுக்கு வேண்டிய இடத்தை பிடித்த பிறகே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தோம். அதைத்தான் இப்போதும் செய்திருக்கிறோம். நான் தாயாக வேண்டும் என முடிவு செய்ததில் மிகவும் பெருமையடைகிறேன்” இவ்வாறாக தனது பேட்டியில் கூறியுள்ளார் உபாசனா. மேலும், எங்களது குழந்தைக்கு தேவையான வாழ்க்கையை நாங்கள் தர வேண்டும் என நினைத்ததால் தான் தாமதமாக தாயாக முடிவு செய்ததாக தெரிவித்து இருந்தார் உபாசனா. 

அந்தவகையில் ராம் சரண், உபாசனா தம்பதியினருக்கு கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தான் இவர்களது குழந்தை பிறந்தது. திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் குழந்தையை பெற்றெடுத்த ராம்சரண் மற்றும் உபாசனா ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். அத்துடன் சமீபத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்று அவருக்கு "க்ளின் காரா" என்கிற அழகான பெயர் வைக்கபட்டது.

இந்நிலையில் தற்போது அவரது மனைவி உபாசனாவின் பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில்,  பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் நடந்த இவர்களது திருமணத்திலிருந்து க்ளின் காராவின் வருகை முதல் பல உணர்ச்சிகரமான விஷயங்களை அந்த வீடியோவில் பகிரப்பட்டுள்ளது. மேலும் ராம் சரண், உபாசனா மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை அந்த வீடியோவில் நாம் காணலாம். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 மேலும் படிக்க | விவாகரத்து லிஸ்டில் இணைந்த 'சுப்ரமணியபுரம்' பட நாயகி..! காதல் கணவரை பிரிகிறாரா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News