ஒரு நொடி படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

பி. மணிவர்மன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி உள்ள ஒரு நொடி படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 26, 2024, 11:40 AM IST
  • பி. மணிவர்மன் இயக்கத்தில் ஒரு நொடி படம்.
  • தமன் குமார், வேல. ராமமூர்த்தி நடித்துள்ளனர்.
  • சஞ்சய் மாணிக்கம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஒரு நொடி படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்! title=

பி. மணிவர்மன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி உள்ள ஒரு நொடி படத்தில் தமன் குமார், வேல. ராமமூர்த்தி, எம். எஸ். பாஸ்கர்,  பழ. கருப்பையா, தீபா சங்கர், நிகிதா, அருண் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.  மதுரை அழகர் மூவிஸ் & ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் சார்பில் அழகர்.ஜி & கே.ஜி. ரத்தீஷ் தயாரிப்பில், இந்த படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைக்க, கே.ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவில், எஸ். குரு சூர்யா படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். கிரைம், மிஸ்டரி, திரில்லர் வடிவில் உருவாகி உள்ள இந்த படத்தின் ட்ரைலர் பலரையும் கவர்ந்து இருந்தது.

மேலும் படிக்க | விகரமின் 'வீர தீர சூரன்' சூட்டிங் ஆரம்பம்: படக்குழுவினர் யாரெல்லாம் தெரியுமா?

மதுரை அலங்காநல்லூர் பகுதிகளை ஒட்டி கதைக்களம் அமைந்துள்ளது. படத்தின் தொடக்கத்தில் சகுந்தலா என்ற பெண் தனது கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் செய்கிறார். இந்த புகாரை வைத்து அவரது கணவர் சேகரன் என்பவரை தேடுகிறார் இன்ஸ்பெக்டர் பருதி இளமாறன். அப்போது இவரை கரிமேடு தியாகு என்பவர் பணத்திற்காக கடத்திருக்கலாம் என்று சந்தேகப்பட அவரை போலீஸ் கஸ்டடியில் எடுக்கிறார் ஹீரோ பருதி இளமாறன்.  மறுபுறம் ஒரு இளம் பெண் மர்மமான முறையில் இறந்து கிடைக்கிறார். அவரது கொலைக்கு யார் காரணம் என்பதையும் விசாரிக்கிறார். கிரைம் திரில்லர் வடிவில் உருவாகியுள்ள இந்த கதையில் இறுதியில் சேகரனுக்கு என்ன ஆனது? அந்தப் பெண்ணை கொலை செய்தது யார் என்பதை விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் மணிவர்மன். 

பருதி இளமாறன் என்ற போலீஸ் கதாபத்திரத்தில் அறிமுக நடிகர் தமன் குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  பல இடங்களில் ஒரு அறிமுக ஹீரோ போல் இல்லாமல் நல்ல எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் இன்வெஸ்டிகேஷன் காட்சிகளில் அவரது குரல் அந்த கதாபாத்திரத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. கரிமேடு தியாகு என்ற கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். மதுரை பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரு நபராக நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  இவர்களை தவிர எம்.எஸ். பாஸ்கர், ஸ்ரீரஞ்சனி, தீபா சங்கர், கருப்பையா, அருண் கார்த்தி ஆகியோரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நல்ல ஒரு நடிப்பை கொடுத்துள்ளனர். 

இரண்டு வெவ்வேறு கதைகளை ஒரே படத்தில் நல்ல ஒரு திரைக்கதையாக உருவாக்கியுள்ள இயக்குனர் மணி வர்மனுக்கு தனி பாராட்டுக்கள். படத்தின் எடிட்டிங் ஸ்டைலும் படத்திற்கு கூடுதல் பக்கபலமாக அமைந்தது.  அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஒரு எதிர்பார்ப்பை படம் பார்க்கும் நமக்கு தூண்டுகிறது, இதுவே இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. பெரிதாக முன்னணி நடிகர்கள் இல்லாத இந்த படம் நடிகர்களின் எதார்த்த நடிப்பினால் நம்மை படத்திற்குள் கொண்டு செல்கிறது. சஞ்சய் மாணிக்கம் இசையில் பின்னணி இசை சிறப்பாக இருந்தது.

படத்தில் ஒரு சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் திரைக்கதை அதனை யோசிக்க விடாமல் செய்கிறது.  குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் இரண்டு கதைகளையும் ஒரே இடத்தில் சேர்த்த விதம் யாரும் எதிர்பார்க்காதபடி நன்றாக இருந்தது. இது மற்ற படங்களில் இருந்து ஒரு நொடி படத்தை தனித்து நிற்க வைக்கிறது. மற்ற மொழியில் வெளியாகும் திரில்லர் படங்களை தேடி தேடி பார்ப்பவராக நீங்கள் இருந்தால் ஒரு நொடி படம் உங்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும்.

மேலும் படிக்க | சிக்கலில் நடிகை தமன்னா.. சம்மன் அனுப்பிய சைபர் கிரைம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News