கார்த்திகை தீபம் அப்டேட்: கார்த்திக்கு எதிராக கூட்டு சேர்ந்த உறவுகள்.. நடக்க போவது என்ன?

Karthigai Deepam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 26, 2024, 12:44 PM IST
  • கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்.
  • தொழிலாளர்களுக்கு ஆதரவாக கார்த்திக்.
  • ஆனந்துக்கு வரும் ஐடியா.
கார்த்திகை தீபம் அப்டேட்: கார்த்திக்கு எதிராக கூட்டு சேர்ந்த உறவுகள்.. நடக்க போவது என்ன? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அடிபட்ட தொழிலாளருக்கு உதவிய கார்த்தியை வேலையில் இருந்து தூக்க ஆனந்த் திட்டம் போட்ட நிலையில் இரு நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

தொழிலாளர்களுக்கு ஆதரவாக கார்த்திக்

அதாவது ஆனந்த் கார்த்தியை வேலையில் இருந்து தூக்க போவதாக சொன்னதும் தொழிலாளர்கள் அவரை வேலையிலிருந்து எடுத்தால் எங்களையும் வேலையிலிருந்து எடுத்து விடுங்க என்று வாக்குவாதம் செய்ய அப்படியே சரி உங்க எல்லாரையும் வேலையிலிருந்து தூக்கிடுறேன் ஆனந்த் சொல்கிறான்.

உடனே அருண் ஆனந்தை தனியாக கூட்டிச் சென்று உனக்கு என்ன பைத்தியம் பிடித்து எல்லாரையும் வேலையை விட்டு தூக்கிட்டா கம்பெனிக்கு பெரிய லாஸ் ஆகிடும். எடுத்திருக்க ஆடரையும் முடிக்க முடியாம போயிடும் என்று திட்ட ஆனந்த் வேறு வழி என்று கார்த்திக்கை வேலையிலிருந்து தூக்கம் முடிவை கை விடுகிறான். 

பிறகு கார்த்திக் சோர்வாக வீட்டுக்கு வர தீபா அவனுக்கு கை கால் பிடித்து விடவா என்று கேட்க கார்த்திக் வேண்டாம் என்று மறுத்ததும் தீபா சோகமாகி வெளியே வர கார்த்திக் அவளது கையைப் பிடித்து இழுத்து ரொமான்ஸ் செய்கிறான்.

மேலும் படிக்க | Rathnam Review : ‘ஆக்‌ஷன் சீன்ஸ் மட்டும் தேறும்..’ விஷாலின் ரத்னம் படம் எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்..

அதன் பிறகு அருண் ஆனந்த் ரியா மற்றும் ஐஸ்வர்யா என நான்கு பேரும் கூட்டு சேர்கின்றனர். கார்த்திகை எதுவுமே பண்ண முடியல என்று அருண் சொல்ல ரியா இது அவனுக்கு பழக்கப்பட்ட கம்பெனி, அவள் முதலாளி என்பதால் தொழிலாளர்கள் அவனை விட்டுக் கொடுக்காமல் தான் இருப்பார்கள். அவனை வேற கம்பெனிக்கு அனுப்பனும் என்று சொல்ல ரியா சொல்வதும் சரிதான் என யோசிக்கின்றனர். 

ஆனந்துக்கு வரும் ஐடியா

பிறகு அருண் அப்படி எந்த கம்பெனிக்கு அனுப்புறது என்று யோசிக்க ஆனந்துக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது.

காணத்தவறாதீர்கள்

 இப்படியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ஒரு நொடி படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News