சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து! சவுக்குக்கின் நிலை என்ன?

Latest News Savukku Shankar Accident : தமிழக காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை காவல்துறை வாகனம் மூலம் கோவைக்கு அழைத்து வரும் போது தாராபுரம் அருகே விபத்து.  

Written by - Yuvashree | Last Updated : May 4, 2024, 10:22 AM IST
சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து! சவுக்குக்கின் நிலை என்ன? title=

Latest News Savukku Shankar Accident : தமிழக காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை காவல்துறை வாகனம் மூலம் கோவைக்கு அழைத்து வரும் போது தாராபுரம் அருகே விபத்து. விபத்தில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கருக்கு லேசான காயம் என தகவல்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் நஞ்சியம்பாளையம் ஐடிஐ கார்னர் அருகே இன்று காலை 6.30 மணிக்கு கோயமுத்தூர் நகர காவல் துறை உதவி ஆணையர் (சைபர் கிரைம் பிரிவு ) நவீன் தலைமையில் பிரபல யூடியூபர் சங்கர் (சவுக்கு மீடியா) கைது செய்யப்பட்டார். 

கோயமுத்தூர் சைபர் கிரைம் பிரிவு விசாரணைக்காக (காவலர்கள்,சங்கர் உட்பட பத்து நபர்கள்)அழைத்துச் செல்லும்போது காவல்துறை வாகனம்TN66G1046 டெம்போ டிராவல் வாகனமும் எதிரே வந்த சிப்ட் கார் (TN56 6800) மோதிக்கொண்டதில் கோயமுத்தூர் காவல்துறை வாகனத்தில் வந்த காவல் துறை ஓட்டுனர் உட்பட பத்து நபர்கள் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் வாகனத்தில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டு தாராபுரம் அரசு பொது மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், சப் இன்ஸ்பெக்டர் அஜித், காவலர்களான பாண்டியராஜன், சுந்தரேசன், சரண் சிங், ஆகியோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உதவி ஆணையர் நவீன் மற்றும் உதவி ஆய்வாளர், காவலர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட யு டியூபர் சங்கர் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திரும்பவும் மாற்று வாகனத்தின் மூலம் கோயமுத்தூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க | பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ஆம் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை

சவுக்கு சங்கர் கைது:

சவுக்கு சங்கர், பெண் காவல்துறையினரை அவதுறாக சமூக ஊடகங்களில் பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேனியில் இருந்த அவரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்யப்பட்டார். 

சவுக்கு சங்கர் இப்படி பேசிய காரணத்தால் மக்களும், காவல் துறை அதிகாரிகளும் அவர் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இந்த நிலையில், சவுக்கு சங்கர் ஒருதலைப்பட்சமாக அனைத்து இடங்களிலும் பேசுவதாகவும் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த நிலையில், இவரை கைது செய்ய கடந்த சில நாட்களாகவே போலீஸார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்ததாகவும் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவரை கைது செய்து அழைத்து வரும் போது அந்த வாகனம் விபத்துக்குள்ளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

மேலும் படிக்க | பெண் போலீஸை அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News