திடீரென கண்முன் தோன்றிய மங்கி மேன்... அலறிய பெண்: திருமண கலட்டா வைரல் வீடியோ

Viral Video: திருமணங்கள் தொடர்பான பல வீடியோக்கள் தினம் தினம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் பல வீடியோக்கள் நாம் பார்த்து அதிசயிக்கும் வண்ணம் உள்ளன. இப்படி கூட நடக்குமா என சில வீடியோக்கள் நம்மை யோசிக்க வைக்கின்றன. அப்படி ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.

Wedding Viral Video: திருமணத்தில் நடக்கும் ஹல்தி சடங்கின் போது குரங்கு மனிதன், அதாவது மங்கி மேன் வேடமிட்டு வரும் ஒரு மனிதனை பார்த்து ஒரு பெண் பயந்து அலறும் வீடியோ சமூக ஊடகங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது, இது மே மாதம் அங்கு வெளிவந்தது. குரங்கு போல் உடையணிந்த நபர், திருமண நிகழ்வைக் கண்டுகொண்டிருக்கும் விருந்தினர்களை அணுகுவதும், அவர்களில் ஒருவர் அந்த நபரைப் பார்த்து பயந்து கத்துவதையும் வீடியோவில் காண முடிகின்றது. 

Trending News