ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சியா? இளங்கோவனுக்கு தமிழிசை கொடுத்த பதிலடி

Tamilisai Soundararajan : தமிழகம் போதை கலாச்சாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், தமிழகத்தில் திமுக ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று இளங்கோவன் சொல்லி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 17, 2024, 10:34 AM IST
  • தமிழ்நாட்டில் நடப்பது காமராஜர் ஆட்சியா?
  • ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பதிலடி கொடுத்த தமிழிசை
  • திமுக அரசு எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது
ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சியா? இளங்கோவனுக்கு தமிழிசை கொடுத்த பதிலடி title=

தமிழிசை சௌந்தரராஜன் காட்பாடி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, " வந்தே பாரத் ரயில் தற்போது பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த ரயில் மூலம் பயணம் செய்வதால் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்த ரயிலை அறிவித்த பாரத பிரதமருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ரயில் திட்டத்தினை பல்வேறு தரப்பினரும் வரவேற்கின்றனர். இது நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி இதனை பொறுத்துக் கொள்ளாத எதிர்க் கட்சியினர், பிரித்து ஆள்கிறது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதனை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள்.

பாரதப் பிரதமரின் ஒவ்வொரு வளர்ச்சியும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். மேலும் விரைவில் சென்னையில் இருந்து மைசூருக்கு புல்லட் ரயில் வர உள்ளது. நடைபெற்று முடிந்த நான்கு கட்ட தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க எவ்வளவு இடங்கள் வேண்டுமோ அவ்வளவு கிடைத்துவிட்டது. எதிர்க்கட்சியினர் சுயநலத்துக்காக வாக்குகளை கேட்கின்றனர் ஆனால் பிரதமர் மோடி மக்களின் நலன் கருதி வாக்குகளை கேட்டு வருகிறார். தமிழக அரசு இந்தியா கூட்டணியில் இருந்து வரும் நிலையில்  தமிழகத்திற்க்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டுமென ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இதற்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை.

மேலும் படிக்க | பட்டியலின பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய கார்த்திக் குமார்?! லீக் ஆன ஆடியோ…

காங்கிரசும், திமுகவும் கூட்டணியில் இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று தமிழக மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது காவிரி தண்ணீருக்காக போராட்டம் நடத்தினார் டாஸ்மாக் கடைகளுக்கும் போராட்டம் நடத்தினார். காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை ஆனால் அதிகமாக டாஸ்மாக் கொண்டு வந்தார்கள் இதுதான் திமுகவின் சாதனை. திமுகவும் காங்கிரசும் கூட்டணியில் இருந்து கொண்டு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை. எனவே தமிழக அரசு எல்லா விதத்திலும் தோல்வி அடைந்து வருகிறது.

கஞ்சா வழக்கில் ஜாபர் சாதிக்கை திமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்றமே கஞ்சா விற்பவர்களுக்கும் காவல்துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். எனவே திமுகவினருக்கும் சிறை துறையினருக்கும் கஞ்சா நடமாட்டத்தில் அதிக அளவில் தொடர்பு உள்ளது. கஞ்சா பொருத்தவரையில் காவல்துறையினருக்கும் அரசியல் கட்சியினருக்கும் எந்த அளவில் தொடர்பு உள்ளது என்பதை கண்காணிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கும், விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் போதை தான் காரணம்.

எனவே போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் உயர் நீதிமன்றம் சொன்னதைப் போலவே கஞ்சா பொருட்கள் விற்பனை தொடர்பாக, சிறை துறையினருக்கும் அரசியல் கட்சியினருக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கலாச்சாரம் என்பது கஞ்சா கலாச்சாரமாக மாறி வருகிறது. தமிழகம் போதை கலாச்சாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதால் அதற்கான இடங்களை தமிழக அரசு கூடுதல் ஆக்க வேண்டும்.

காவிரி பிரச்சனையில் அதிகாரிகள் நேரடியாக சென்று விவாதிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் நேரடியாகச் சென்று பங்கேற்க் ஏன் தமிழக அரசு ஊக்கப்படுத்தவில்லை. எனவே தமிழக அரசு காவிரியில் தண்ணீர் கொண்டு வருவதில் தீவிரம்காட்ட வில்லை என்று தனக்கு தோன்றுகிறது. கலைஞரைப் பற்றி 9 மற்றும் 10 ஆகிய பாடப் புத்தகங்களில் இடம்பெற்று இருந்தது தற்போது எட்டாம் வகுப்பிலும் கலைஞரைப் பற்றி இடம்பெற்றுள்ளது. பாஜக கல்வியில் ஏதோ ஒரு சின்ன மாற்றம் கொண்டு வந்ததற்காக கல்வி காவியமாக்கப்படுகிறது என்று கூறினார்கள். இன்று தமிழகத்தில் கல்வி கலைஞர் மயமாக்கப்பட்டு வருகிறது. ஒரு தலைவரைப் பற்றி எத்தனை பாட புத்தகங்களில் கொண்டு வருவீர்கள்.

எனவே இதற்கு ஒரு வழிகாட்டும் முறைகள் இருக்க வேண்டும். எத்தனையோ அறியப்படாத தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி புத்தகங்களில் இடம்பெற வேண்டும். தமிழகத்தில் எத்தனை முதல்வர்கள் சிறப்பாக பணியாற்றினார்கள். ஆனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சொல்கிறார் இந்த ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று. இது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சியை காங்கிரஸ் ஆட்சி என்று சொல்லிவிட்டார். தலைவர்களைப் பற்றி பாடப் புத்தகங்களில் இடம் பெறுவது வழிகாட்டு முறை இருக்க வேண்டும் குழந்தைகள் மனதில் விதைப்பது எல்லாம் நல்ல விதைகளாக இருக்க வேண்டும்" என கூறினார்.

மேலும் படிக்க | “நான் Gay-வா?” சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News